Pages

Pages

Thursday, March 29, 2012

வாழைத் தண்டு, வாழைப் பூ (இருமல்,பாம்பு கடி)



வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை ஒன்று இரண்டு அல்லது அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும்.

கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.


அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘
வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்.

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments