Pages

Pages

Friday, May 25, 2012

ஜென் கதைகள் - 2

அப்போதே அவளை இறக்கிவிட்டேன்!

ரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.
அப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.
ஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர்? இது தவறுதானே?” என்றார்.
பெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!” என்றார் புன்முறுவலுடன்.

கயமை இருக்கும் மனதில் துறவுக்கு இடமில்லை. வெறுப்பதாக வெளியில் காட்டினாலும், உள்ளுக்குள் ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை நேர்மையான எண்ணம் பிறக்காது – இது இரண்டாவது கதையின் சாரம்!

Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments