Pages

Pages

Tuesday, September 18, 2012

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்.

காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே  தொடங்கிவைத்தார். 
 
நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான கதவை முதலில் அகலமாக திறந்தவர் பிரதமராகயிருந்த ராஜிவ்காந்தி.
 
தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்காவின் பன்னாட்டு கம்பெனிக்கு போபாலில் மக்கள் வாழும் பகுதியில் ஆபத்தான விஷவாயு அடங்கிய தொழிற்சாலைக்கு அனுமதி தந்து அது வெடித்து மிகப்பெரிய உயிர்பலி வாங்கியது. பணத்தை வாங்கிக்கொண்டு அதன் முதலாளிகளை தப்ப விட்டவர் ராஜிவ்காந்தி.
 
சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் பதவியில் இருக்கும் போதே சாதாரண அரசு ஊழியரைப்போல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார். ராணுவவீரர்களின் உயிர்களோடு நாட்டின் பாதுகாப்போடு விளையாட ஆரம்பித்தார். போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் கோடி கோடியாக கமிஷனாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் குவித்தார். ராஜிவ்காந்தி மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு வாசிசுகளால் புஷ்வானமாகி விட்டது.
 
கிராமங்களில் இன்று விவசாயம் அழிந்து போக காரணம் இதே ராஜிவ்காந்தி தான். விவசாயிகளை அமரர்களாக்க விதை விதைத்தார். புது முயற்சி என புது ரக விதை, மருந்துகளை இறக்குமதி செய்தார். அது இந்திய விவசாயத்தை அழிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பமான பிரச்சனை இன்று தினம் 10 விவசாயிகளாவது இறக்கும் அளவுக்கு வந்து நிற்க்கிறது. 
 
உலகமே நம்மை ஆச்சர்யத்தோடு பார்ப்பதற்க்கு காரணம், நம் மக்களின் கலாச்சாரம் தான். ஆனால் இன்றைய நிலையில் அந்த கலாச்சாரத்தை உடைத்து யாரும் யாரோடும் என்ற நிலையை உருவாக்கியது இந்த ராஜிவ்காந்தி காலத்தில் தான்.

1990ல் நடந்த இந்திய நாடாளமன்றத்திற்க்கான பொது தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. செய்த பாவம் திண்றால் போகாது என்பதை போல ராஜிவ்காந்தி பதவியில் இருக்கும்போது ஈழ தமிழனுக்கு செய்த துரோகத்தால் மரணம் அவரை தேடி வந்தது. அவரின் மரணம் காங்கிரஸ் கட்சியை உயிர் பெற வைத்தது. ஊழல்வாதி ஜனநாயக நாட்டின் மகாத்மாவாகி விட்டார். ஆனால் அவர் விட்டு சென்ற பணிகளை அவரின் வாரிசுகள் இன்று தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டம். இந்திய கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் இந்தியா ஒளிர்க்கிறது என்ற பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் நடை பயணம் போகும் இளைஞர் காங்கிரஸ் மூச்சுக்கு முண்ணூறு முறை எங்கள் திட்டம் சிறந்த திட்டம் என கூப்பாடு போட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தால் ஏழைகளே செய்யும் வேலைக்கு கூலியை நிர்ணயிக்கிறார்களாம்.

பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம், ஆந்திராவில் போய் பாருங்கள் இந்த திட்டத்தின் லட்சணத்தை. அப்படி ஒரு திட்டம் இருப்பதே அந்த மக்களுக்கு தெரியவில்லை. வேலை செய்ததாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். வெளிப்புறத்திற்க்கு பார்த்தால் நல்ல சிறந்த திட்டமாக தோன்றும். ஆனால் உண்மையில் மக்களை சோம்பேறிகளகாக்க வந்த திட்டம், விவசாயத்தை முற்றிலும் அழிக்க வந்த திட்டம். அதில் 30 சதவிதம் வெற்றி பெற்று விட்டது காங்கிரஸ்.

தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களில் இந்த திட்டத்தால் விவசாயம் படு பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என கேட்டு விவசாய அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்தியரசு அசையவில்லை. காரணம் திட்டத்தின் மறைமுக வெற்றி. விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யபோகிறார்கள். தரிசுகளாக மாறும் நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்க தான் இந்த திட்டம். பன்னாட்டு கம்பெனிகளை வரவைத்து அவர்கள் மூலம் கோடி கோடியாய் கொள்ளயைடிக்கவும், ஏழை மக்களை இன்னும் ஏழைகளாக்கி குளிர்காயவுள்ளது. 

அதை இன்று சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது. நாளை இந்தியா இளைஞர்களின் கனவு நாயகன் என வர்ணிக்கப்படும் கொலம்பியா நாட்டு பெண்ணை மணக்க போகும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல்காந்தி தலைமையில் நடத்த எல்லா பூர்வாங்க வேலையும் நடக்கிறது. இப்படியெல்லாம் காங்கிரஸ்காரர்களால் நடக்கும் என யூகித்தே 50 ஆண்டுகளுக்கு முன், உலகமே கொண்டாடும் மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்றதும், காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. இதை கலைத்து விட வேண்டும் என சொன்னார். அதை செய்திருந்தால் வரலாற்றின் பொன் எழுத்தில் காங்கிரஸ்சின் பெயர் நிலைத்திருக்கும்.
சொந்த சகோதரர்களை, தமிழனின் தொப்புள் கொடி உறவை அழித்த, இந்தியாவை விலை பேசும் தலைமை கொண்ட, ஊழல்வாதிகள் நிறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தை அழிக்க வேண்டும்.
 
 
Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments