Pages

Pages

Monday, November 19, 2012

முட்டாளாக்கும் ஒரு TRB

தற்போது மிகவும் பிரபலம் ஆகி வரும் தொலைகாட்சியின் TRB Rating தான். எப்படி எல்லாம் செய்தால் நம் சேனலின் ரேட்டிங் அதிகமாகும், என்று அந்த நிறுவனத்திற்கு தெரிகிறது. இதனால் விளம்பரத்தின் வரி மற்றும் அதை ஒளிபரப்ப அதிகமான தொகையை வசூல் செய்கிறார்கள். இதனால் விளம்பரம் செய்யும் பொருளின் விலை அதிகபடுகிறது. இப்படி இருக்கையில் கூட ஒரு பொருளின் விலை வாசி அதிகமாகிறது. மீடியாக்கள் மக்களுக்கு நல்லதை செய்வதை விட கேட்டதே வேகமாக பரவ செய்கிறார்கள்.

ஒரு கடை அல்லது பொருளை அறிமுகப்படுத்தவும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கவும், சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை, மற்றும் நடிகனை குறிப்பிட்ட காலம் வரை தனது விளம்பரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கையெழுத்து போட்டு கொள்கிறார்கள்.



இதனால் பொருளின் விளையும் அதிகமாகிறது, இவர்களின் சம்பளமும் அதிகமாகிறது. கடைசியில் இது எல்லாம் வீட்டில் ஆஆ.. என்று வாயை பிளர்ந்து பார்த்து கொண்டிருக்கும் நம் தலையில் விழுவதை யாரும் உணரவில்லை.

தன் சேனலின் ரேட்டிங் அதிகபடுத்த சில முட்டாள் தனமான வேலைகளையும் செய்கிறார்கள். சின்ன கொக்கையான நூல் அளவு கதையை வைத்துகொண்டு இரண்டு மூன்று வருடம் வரை நீட்டி செள்ளகூடியவாறு சீரியலை தயாரிகிறார்கள். பார்க்கபோனால் 10 நிமிடம் கதைக்காக 20 நிமிடம் விளம்பரம் தான். அதிலும் ஒரு சில சீன்கள் long சாட் ஆகா இருக்கும்(வசனம் இல்லாமல்) இது தான் இதில் அழகு. அந்த கதையை முடிக்கும் பொது எதிர்பார்ப்பு என்ற பெயரில் மொக்கைத்தனமாக முடிப்பார்கள். அடுத்த நாள் வரும் வரை மண்டையை குடையும் என்று, ஆனால் அது தான் இல்லை, ஒரு மாதம் கழித்து பார்த்தாலும் அதே கதைதான் ஓடிகொண்டிருக்கும். இது தெரியாமல் வீட்டில் இருக்கும் மேதாவிகள் தொடர்ந்து பைத்தியமாகிறார்கள்.

Sun Music -ல் வடை போச்சே என்று ஒரு மொக்கையான ப்ரோக்ராம் நான் எங்கும் பார்த்ததில்லை. பார்க்கும் பொது எரிச்சலை தூண்டுகிறது. ஒரு நிகழ்ச்சி மக்களுக்கு விழிப்புணர்வு தரவேண்டுமே தவிர எரிச்சலை தரக்கூடாது. ஒரு சில ப்ரோக்ராம் நான் பார்த்ததை இங்கே சொல்கிறேன்.
1. குருடனாக நடித்து மக்களை எப்படி ஏமாற்றுவது? (இது மாதிரி செய்வது, நிஜ குருடனை அவமதிபதாகவும், அவர்மேல் இருந்த நம்பிக்கை குறைகிறது).

2. ஒருவனை கடத்தி சென்று மிரட்டி அவனுக்கு பயத்தை உண்டாக்கி எதிர்பாராத நேரத்தில் ஒரு பிறந்தநாள் பரிசு தருகிறார்கள்.

இது மாதிரி நடக்கும் பொது, சின்ன பள்ளி குழந்தைகள் பார்த்து, யாரவது கூப்பிட்டாலும் கூடவே ஓடிவிடும். அதனால் இது போல் நிகழ்ச்சி நடத்தும் தொலைகாட்சியை கண்டிக்க வேண்டும்.

Z தமிழ் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடப்பது எல்லாருக்குமே தெரியும், சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது மாதிரி நிகழ்ச்சியினால் ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை சொந்தமாக கையாள தைரியம் இல்லாமல், இவர்களை நாடுகிறார்கள். இது ஊருக்கே தெரிந்து கேவலபடுவது அந்த குடும்பத்தார்தான். இதற்கிடையில் டிவியின் TRB ரெடிங் அதிகமாகிறது அவர்கள் லாபம் சம்பாதிகிரர்கள்.

மொத்தத்தில் பார்க்க போனால் அரசியலும் சரி, மீடியாவும் சரி ரெண்டுமே ஒன்றுதான். மக்களையும், எதிர்காலத்தையும் அக்கரைகொள்ளாமல் இருகிறார்கள்.

Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments