Pages

Pages

Friday, February 15, 2013

அக்கி ரொட்டி

அக்கி ரொட்டி

தேவையான பொருட்கள்: 
அரிசி மாவு - 2 கப் 
அவரை - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) 
தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
தண்ணீர் - 1 கப் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் இதர அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ள வேண்டும். 
 
பின் அதில் தண்ணீரை மெதுவாக ஊற்றி, மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, அதில் அந்த மாவுக் கலவையில் சிறிதை எடுத்து ஓரளவு தட்டையாக ரொட்டி போன்று தட்டிக் கொள்ள வேண்டும். 
 
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள ரொட்டியைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

Image by FlamingText.com