Pages

Subscribe:

Monday, June 4, 2012

உருளை கிழங்கு பொரியல்

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுந்து தலா - 1 ஸ்பூன்.

அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்., வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள்.

கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.
Image by FlamingText.com

நெல்லிக்காய் மருத்துவம்

இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும். 

காய்ந்த நெல்லிக்காயைப் பொடியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும்
நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.


    Image by FlamingText.com

    கொத்து கறி பிரியாணி

    கொத்து கறி பிரியாணி
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசி - அரை கிலோ
    கொத்துகறி - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - 10
    முந்திரி பருப்பு - 5
    பட்டை,கிராம்பு - தேவையான அளவு
    நெய் - 2 ஸ்பூன்.
    உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தேங்காய்பால் - 2 கப்
    இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

    செய்முறை:

    அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்
    போட்டு வதக்கி கொத்துகறியும் சேர்த்து வதக்கி தேங்காய்பால் அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியையும் போட்டு முந்திரி பருப்பு,நெய் , உப்பு கலந்து
    குக்கரைமூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
    Image by FlamingText.com

    உருளைக் கிழங்கு பவுடர்


    தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

    Image by FlamingText.com

    உருளைக் கிழங்கு ஆம்லெட்

    தேவையானவை:
    உருளை கிழங்கு -350 கிராம்
    முட்டை-7
    சோயா சாஸ் -3
    தேக்கரண்டிநல்லெண்ணெய் -1
    தேக்கரண்டிமிளகு1
    தேக்கரண்டிமிளகாய் தூள் -1
    தேக்கரண்டிவெங்காயம்-1
    பச்சை மிளகாய்-2
    பூண்டு-2
    பல்உப்பு -தேவையான அளவு
    எண்ணெய்-தேவையான அளவு

    Search This Blog