Pages

Subscribe:

Tuesday, August 28, 2012

ஜென் கதைகள்: உயிர்! ஞானிகள் பார்வையில்

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.
‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.
ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.
மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.
“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:
“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!


Image by FlamingText.com

Thursday, August 16, 2012

சிக்கன் டிக்கா ரெடி

Tasty Yum Yum - desinghit@gmail.com
தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகு தூள் – 5 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 100 மிலி
தயிர் – 200 மிலி
உப்பு - கால் டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை

சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும். லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.

சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.


Image by FlamingText.com

Monday, August 13, 2012

ஜென் கதைகள் 4 - குறை சொல்ல வேண்டாம்!!!

துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.

அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

Image by FlamingText.com

Thursday, August 2, 2012

உயிர் மூச்சுவிடும் நேரம்!!

புத்தர் தன சீடர்களிடம், ''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று கேட்டார்.
ஒரு சீடர் எழுபது என்றார், இன்னொருவர் அறுபது என்றார், மற்றொருவர் ஐம்பது என்றார். அனைத்துமே தவறானது என்று சொன்ன புத்தர் ''ஒரு மூச்சு விடும் நேரம்" என்று புன்னகையுடன் சொன்னார்.
ஆச்சரியப்பட்ட சீடர்கள்,''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.''
உண்மை. மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்''என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது. அதை முழுமையாக வாழ வேண்டும் என்று சொன்னார் புத்தர்.

நீதி : அந்த நிமிடத்தில் அற்புதமாக வாழ் என்கிறது ஜென்


Image by FlamingText.com

Wednesday, August 1, 2012

Cauliflower Soup

இன்று Cauliflower Soup எப்படி செய்வது என்று பார்போம்.
இந்த வகை சூப் உடம்புக்கு சத்தானது. அனைவரும் சாப்பிட கூடியது. எந்த காலத்திலும் சாப்பிடலாம்.

--------Cauliflower எப்படி சுத்தம் செய்வது என்று பார்போம்.-----------------
தேவையானவை:
1. வினிகர் 
2. கல்லு உப்பு  
3. கொதிக்க வைக்க தண்ணீர்.



ஒரு heavy bottom pan எடுத்து கொள்ளவும். அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பிறகு, 2 ஸ்பூன் வினிகர் ஒரு மற்றும் உப்பு சேர்த்து சூடு படுத்தவும். சூடானதும் எடுத்து வைத்த Cauliflower போட்டு எடுக்கவும். 
நீண்ட நேரம் வேக வைக்க கூடாது. 3 - 4 நிமிடம் போதுமானது. உடனே எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை அலசவும். அதில் உள்ள கிருமி வெளியேறிவிடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
சூப் செய்வது எப்படி என்று பார்போம்.

தேவையானவை:
250 Grams Cauliflower
    3 Green Chillies
 6-7 Pods Garlic
    1 Large Onion
 3-4 Cups Milk


1/4 ஸ்பூன் பெப்பர் பவுடர் 
10 - 20 முந்திரி (மெதுவான சுடு நீரில் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)
பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, cauliflower, chilies, garlic, onion and milk. கொஞ்சம் சால்ட் சேர்க்கவும். 
சிறிது நேரம் கழித்து gas அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு, கொஞ்சம்  பால் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு நன்றாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். நன்றாக அரைத்த பிறகு மறுபடியும் சிறிது சூடுபடுத்தவும். தேவைபட்டால் பெப்பர் சேர்த்துகொள்ளவும்.
சூப் ரெடி........!



Search This Blog