Pages

Subscribe:

Tuesday, November 20, 2012

வெண் பொங்கல்

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

Image by FlamingText.com

மைசூர் போண்டா


தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். அத்துடன் மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Image by FlamingText.com

Monday, November 19, 2012

முட்டாளாக்கும் ஒரு TRB

தற்போது மிகவும் பிரபலம் ஆகி வரும் தொலைகாட்சியின் TRB Rating தான். எப்படி எல்லாம் செய்தால் நம் சேனலின் ரேட்டிங் அதிகமாகும், என்று அந்த நிறுவனத்திற்கு தெரிகிறது. இதனால் விளம்பரத்தின் வரி மற்றும் அதை ஒளிபரப்ப அதிகமான தொகையை வசூல் செய்கிறார்கள். இதனால் விளம்பரம் செய்யும் பொருளின் விலை அதிகபடுகிறது. இப்படி இருக்கையில் கூட ஒரு பொருளின் விலை வாசி அதிகமாகிறது. மீடியாக்கள் மக்களுக்கு நல்லதை செய்வதை விட கேட்டதே வேகமாக பரவ செய்கிறார்கள்.

ஒரு கடை அல்லது பொருளை அறிமுகப்படுத்தவும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கவும், சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை, மற்றும் நடிகனை குறிப்பிட்ட காலம் வரை தனது விளம்பரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கையெழுத்து போட்டு கொள்கிறார்கள்.

Thursday, November 8, 2012

மெரினா சுண்டல்

தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
செய்முறை:
1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

Image by FlamingText.com

Wednesday, November 7, 2012

கேரட் சாதம்

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
கேரட் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் துருவிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர், கேரட் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கேரட் வேகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை சாத்துடன் சேர்த்து, கிளறி பரிமாறவும்.
இப்போது சுவையான கேரட் சாதம் ரெடி!!!


Image by FlamingText.com

Friday, November 2, 2012

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?


இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?

                                           இராமர் மிகவும் நேர்மையானவர், கிருஷ்ணர் தந்திரக்காரர்; இதனால் நான் இராமரை ஏற்கும்போதிலும் கிருஷ்ணரை ஏற்பதில்லை. அவ்வப்போது காதில் கேட்கும் இக்கூற்றினை சற்று ஆராயலாம். மக்கள் கூறும் காரணங்கள் கடவுள் என்பவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். நல்லவர் என்றால், உலகின் நீதி நெறிகளுக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்ரீ இராமர் உலக நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார். உதாரணமாக, ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்தார், போரின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினார், பெற்றோர்களை மதித்து நடப்பவராக செயல்பட்டார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரோ உலக நியதிகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, பல்வேறு மனைவியரை ஏற்றுக் கொண்டார், இதர மக்களின் மனைவியருடன் ராஸ லீலை நடத்தினார், குருக்ஷேத்திர போர்க்களத்தில் பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கிருஷ்ணரை ஏற்க முடியவில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

இராமரும் கிருஷ்ணரும் யார்?
                                                  இராமரையும் கிருஷ்ணரையும் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக, இவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியம்.

Search This Blog