Pages

Subscribe:

Tuesday, October 15, 2013

சித்த மருத்துவம்-சருமத்தைக் காக்க


சித்த மருத்துவம் - சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்!

நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து, சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.

* இவர்கள் ஆரஞ்சுப் பழ தோலை காய வைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் ஏடு சேர்த்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.

* வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடித்துக் கொள்ளவும். இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து பன்னீருடன் சேர்த் குழைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

* முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க முட்டையில் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். அது நன்கு காய்ந்த பிறகு சருமத்தை பிடித்து இழுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் சுருக்கம் மறைந்து போகும்.

* எண்ணைச் சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிக எண்ணைப் பசை இருக்கும். இதனால் வெயில் காலத்தில் முகத்தில் பரு மற்றும் கரும் புள்ளிகள் ஏற்படும். வேப்பிலையைக் கொழுந்தாக பறித்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முல்தானி மெட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணைப் பசை குறைந்து, பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

* சிறிது பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து கழுவலாம்.

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. அதற்காக கவனக் குறைவாக இருக்காதீர்கள்.

* முல்தானி மெட்டியை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

* எலுமிச்சைச் சாறு, கடலை மாவு, முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து திக் பேஸ்டாக குழைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி பதினந்து நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மிருவாக இருக்கும்.

* வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த சமயத்தில் ரோஜா இதழ்களை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால், புதுப்பொலிவு ஏற்படும்.

* வாரம் ஒரு முறை முல்தானி மெட்டியை பன்னீரிலோ அல்லது தண்ணீரிலோ குழைத்து உடல் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளித்து வந்தால் சரும பிரச்னை இருக்காது.

Image by FlamingText.com

வீட்டு மருத்துவம்

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.


Image by FlamingText.com

Thursday, September 26, 2013

அம்மாக்களுக்கு ஒரு கைடு

முதல்முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போது அதே அளவில் இருபதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கபோகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது, எனவே முதல் குழந்தையை வரவேற்ற மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.
இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுதிவிடுங்கள். அம்மா வயித்துல உனக்காக உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது... என்று சொல்லி வாருங்கள்.

பாப்பா பிறந்ததுக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட,ஸ்கூல்-ல விட, ஹோமே வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க. என்று முன்கூட்டியே முதல் குழந்தியிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், செய்கு புரிதல் செரமமும் குறைவால இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல் என்று உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள்.

பவுடர் டப்பா, வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதல் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டே தான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்த குழந்தைக்கு புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது கேம்ஸ், பென்சில் பாக்ஸ், என்று ஏதாவது வாங்கிகொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கு பொருட்களை வாங்கும் பொது அதன் சாய்ஸ் முதல் குழந்தையிடம் விட்டுவிடுங்கள். தம்பிக்கு என்ன வாங்கலாம் என்று கேளுங்கள்.

நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும் போது எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒப்பீடுகளெல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன உடன்பிறப்பின் மீதான தீராத பகையையும் (சிப்ஸிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை.


ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளியாக வளர்வதும் வளர்ப்பு முறையில் தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்கலாக இருக்க இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாற்ற சொல்லிகொடுங்கள்.



(*** பின் குறிப்பு : இதுக்கு தான் சொல்றாங்க ஒரு குழந்தை போதும்-னு.)

Image by FlamingText.com

Thursday, August 29, 2013

சால்ட் & பெப்பர் மஷ்ரூம்

சால்ட் & பெப்பர் மஷ்ரூம் 

தேவையானவை:
மஷ்ரூம் - 250 கிராம் 
கார்ன் ப்ளார் & மைதா - தலா 50 கிராம் 
வெங்காயம் - சிறிது (பொடியாக)
இஞ்சி பூண்டு - தலா 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை ஸ்பூன் (பொடியாக)
செலரி தழை - சிறிது (பொடியாக)
உப்பு - தேவைகேற்ப 
சிவப்பு மிளகாய் விழுது - சிறிது (வேகவைத்து அரைத்து)
சோயா சாஸ் - சிறிது 
வெள்ளை மிளகு தூள் - சிறிது
சில்லி பிளேக்ஸ் (தேவைபட்டால்) - சிறிது 
வெங்காய தாள் - சிறிது 
எண்ணெய் 

செய்முறை:

     காளானை கழுவி, இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதை மைதா, கார்ன் ப்ளோர், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணையில் பொறித்து தனியே வைக்கவும்.

கடையில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.

பிறகு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ், வெள்ளை மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

தேவையான உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள காளான் சேர்த்து கிளறி, தேவைபட்டால் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து, கடைசியாக வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

Image by FlamingText.com

Monday, August 5, 2013

மங்காத்தாவே இனி பாரதமாதா.!

மங்காத்தாவே இனி பாரதமாதா.!

     ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூண்டு வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு 'ஸ்பாட் பிச்சிங்' மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருகிறார்கள்.

சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததை 'இந்தியா டிவி' அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புது முகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற முறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.

ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு 50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.

குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமென்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சாஹரா நிறுவனத்தால் வாங்கபட்டிருக்கும் புனா அணி.. என ஒவ்வொரு அணி முதலாளியும் கிருமினல் தான்.

தற்போதைய சூதாட்டத்தின் பின்னே தாவூத் இம்ப்ரகிம் இருப்பதாகவும், அது தேசத்துக்கு ஆபத்து என்றும் இந்த விவகாரத்துக்கு முலாம் பூசப்படுகிறது.  விளையாட்டு என்ற சொல்லின் பொருளையே ரத்து செய்து அதனுடன் சேர்ந்திருந்த தேசியம் தொடர்பான ஜிகினா வேலைகளையும் உதிர்த்துவிட்டு, வீரர்களை கூளிப்படையாகவும் முதலாளிகளை அணியின் தலைவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த ஐ.பி.எல் இல் விளையாட்டுணர்வு என்பதற்கு கடுகளவும் இடம் கிடையாது. தொலைக்காட்சி உரிமை, விளம்பரங்கள், நிறுவனங்களின் தூதர்கள், ஆபாச நடனக்கள் என்று ஐபிஎல் முழுவதும் பணம்தான் ஆட்சி செய்கின்றது. ஒரு சூதாட்டதுக்குரிய விறுவிறுப்பை வழங்கும் வகையில்தான் டி20 போட்டியின் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வீரர்களை விலைக்கு வாங்குவது, ஏலம் விடுவது உள்ளிட்ட ஐ.பி.எல்லின் அமைப்பு முழுவதும் மர்மங்களால் ஆனது. நாட்டுப்பற்று விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலைக்கு கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக் கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது? ஊழல், ஒழுக்ககேடு, கொள்ளை, சூது போன்ற தேசிய விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் சுலபமாக வெளியில் வந்துவிடுகிறார்கள். இதை பணம் கட்டி வேடிக்கை பார்த்து, கைதட்டுவதற்கு கோடிகணக்கில் மக்கள் இருப்பதால் இனி மங்கத்தாவே பாரதமாதா என்று அவர்கள் அறிவிக்கவும் முடியும்.

Image by FlamingText.com

Saturday, August 3, 2013

மகாத்மாவும் மனுபென்னும் சொல்லபடாத கதை

காந்தியின் உதவியாளரான மனுபென்னின் புதிதாக கண்டுபிடிக்கபட்ட டைரிகள், காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் அந்த பெண் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கின்றன.


மகாத்மா காந்தியின் ஆயுள் காலத்தின் கடைசி இரு ஆண்டுகளில் அவரது 'ஊன்றுகோலாக' இந்திய வரலாற்றின் மிகவும் அறியப்பட்ட முகமாக அவர் இடம் பிடித்தார். ஆனாலும்கூட அவர் மிகவும் மர்மமான நபராகவே இருந்தார். 1946ல் தனது 17ஆவது வயதில் மகாத்மா காந்தியுடன் மீண்டும் இணைந்த அவர், காந்தி கொல்லப்படும் வரை அவரை விட்டு பிரியவே இல்லை. ஆனாலும் கூட மனுபேன் என்று அழைக்கப்பட்ட பிருதுளா காந்தி தில்லியில் 40 வயதில் தனிமையில் காலம் கழித்து இறந்தார்.

     அவர் இறந்து பல தசாப்தங்கள் ஓடிய பிறகு குஜராத்தியில் எழுதப்பட்ட அவரின் 10 நாட்குறிப்புகள் இந்திய டுடே-வுக்கு கிடைத்தன. 1943 ஏப்ரல் 11ந் தேதி துவங்கும் அந்த டைரிக் குறிப்புகளை கல்வியாளர் ரிஸ்வான் கத்ரி விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாலுணர்வு குறித்த காந்தியின் பரிசோதனைகள் மனுபேன் மீது உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அந்த கையேடு காட்டுகிறது. 2,000 பக்கங்கள் கொண்டது அந்த டைரி. காந்தியை சுற்றியிருந்த பரிவாரத்தினரிடையே, பெரும்பாலும் இளம் பெண்களிடையே அது பொறாமையையும் கோபத்தையும் தூண்டியதை அந்த நாட்குறிப்புகள் காட்டுகின்றன. 'வெள்ளையனே வெளியேறு; இயக்கத்தை அடுத்து தடுப்புக் காவலில் காந்தியும் கஸ்தூரிபாய் காந்தியும் வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது கஸ்தூரிபாய் காந்திக்கு உதவுவதற்காக 1942ல் பூணே ஆகா கான் மாளிகைக்கு வந்தார் மனுபென். அப்போதிலிருந்து துவங்குகிறது அவரின் டைரி. 

     1946 ஜனவரி 30ந் தேதி மனுபென்னை கீழே தள்ளிவிட்டு தனது 9 எம்.எம் பெரட்டா துப்பாக்கியால் காந்தியை சுட்டுக் கொல்கிறான் நாதுராம் கோட்சே. அதற்கடுத்த 22 நாட்களில் டைரிக் துருப்புகள் முடிவடைகின்றன.

     பக்கங்களின் ஓரங்களில் காந்தியின் கையெழுத்தை தங்கிய அந்த நாட்குறிப்புகள், காந்திக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்ணின் சித்திரவதை காட்டுகிறது. கிழக்கு வங்கத்தின் நௌகாளியில் படுகொலைகள் அரங்கேறியதை அடுத்து பிரச்சனைக்குரிய கிராமங்கள் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார் காந்தி. அவருடன் சேர்ந்த 9 நாட்கள் கழித்து 1946 டிசம்பர் 28ந் தேதி இந்தக் குறிப்பு பதியப்பட்டுள்ளது: "பாபு எனக்கு தாயைப் போன்றவர். பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் பரிசோதனை மூலம் அவர் என்னை உயரிய தளத்திற்கு இட்டுச் செல்கிறார். இந்த பரிசோதனை குறித்து ஏதேனும் உளறுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது."மகாத்மா காந்தி: தி லாஸ்ட் பேஸ் நூலில் காந்தியின் செயலாளர் பியோரேலால் இந்த பார்வைக்கு அங்கீகாரம் வழங்குகிறார். :ஒரு தாய் வழக்கமாக தனது மகளுக்கு என்னெவெல்லாம் அதை காந்தி அவருக்கு செய்தார். அவரின் கல்வியை, உணவை, உடையை, ஓய்வை, தூக்கத்தை எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டார். நெருக்கமான கண்காணிப்புக்கு வழிகாட்டுதலுக்கும் வசதியாக தனது படுக்கையிலேயே அவரை படுக்கச் செய்தார். ஒரு சிறுமி மனதளவில் தூய்மையாக இருந்தால் தனது தாயுடன் உறங்குவதில் தர்மசங்கடம் கொள்ள மாட்டாள்."  அவர் தான் காந்தியின் பிரதானமான உதவியாளராக இருந்தார். அவருக்கு கை, கால், அமுக்கி விடுவது, குளிக்க வைப்பது, சமையல் செய்வது என்று சகலமும் செய்தார்.

     காந்தியின் தனிப்பட்ட மருத்துவரான டாக்டர் சுஷீலா நாயர், பிற்பாடு மதிய அமைச்சராக ஆன பியோரேலாளின் சகோதரி பிபி அம்துஸ்சலாம் முதலிய காந்தியுடன் தொடர்புகொண்டிருந்த பெண்களின் வாழ்வு குறித்தும் டைரி விரிவாக பேசுகிறது.

     காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் விஷயத்தில் காந்தியின் சிஷ்யகோடிகளிடையே அதிகரித்து வந்த அதிருப்பதியையும் அவரின் நாட்குறிப்புகள் காட்டுகின்றன. மனுபென் ஒரு "மாய" சக்தி என்று காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான கிஷோரேலால் கூறியது பற்றிய இவரின் பதிவு 1947 ஜனவரி 31ந் தேதியிட்ட நாட்குறிப்பில் உள்ளது.

     1955 ஆகஸ்டு 19ந் தேதி ஜவஹர்லால் நேருவுக்கு மொரார்ஜி தேசாய் எழுதிய கடிதம் மனுபென்னின் மீது மகாத்மா காந்தி ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் வெளிபடுத்துகிறது. "இனம் புரியாத நோயால் பதிக்கப்பட்ட மனுபென்னை பாம்பே ஹாஸ் பிட்டலில் பார்த்துவிட்டு வந்த மொரார்ஜி தேசாய் எழுதுகிறார்: "மனுவுக்கு உடலில் பிரச்னை ஏதுமில்லை. மனதில் தான் பிரச்சனை. அவர் வழக்கை முழுவது அவநம்பிகையிலேயே இருபது போல தெரிகிறது. சகல மருந்துகளாலும் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது." 

     நாதுராம் கோட்சே சுட்டு கொன்றபோது அருகிலிருந்தவர்களில் மனுபென்னும் ஒருவர். "சிதையில் எரியும் தீயின் நாவுகள் பாபுவின் உடலைத் தின்னுகின்றன. ஈம சடங்குகள் முடிந்த பிறகும் நான் அங்கேயே இருந்தது போலிருந்தது. சர்தார் பட்டேல் எனக்கு ஆறுத கூறி என்னை தன வீட்டிற்கு அழைத்து சென்றார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட பாபு இருந்தார். நேற்று குறைந்தபட்சம் அவரின் உடலாவது இருந்தது. நான்  முழுமையாக நொறுங்கி போயிருந்தேன்." என்று அதற்கு மறுநாள் எழுதுகிறார். காந்தி இறந்த பிறகு எழுதிய ஐந்து புத்தகங்களில் ஒன்றான லாஸ்ட் கிளிம்சஸ் ஆப் பாபு  என்ற நூலில் அவர் சொல்கிறார்: "டைரியில் உள்ளதை யாரிடமும் சொல்லகூடாது என்று காகா(காந்தியின் இளைய மகன் தேவதாஸ்) எச்சரித்தார். அவர் கூறினார்:'இந்த இளம் வயதிலேயே மிகவும் மதிப்புமிக்க இலக்கியங்களை தான்கியிருகிறாய். ஆனால் நீ சூதுவாது தெரியாதவளாகவும் இருக்கிறாய்.'" 

     பாபு: மை மதர்  என்ற 68 பக்க நூலில் தான் பங்கு பெற்ற காந்தியின் பாலுணர்வு பரிசோதனைகள் குறித்த தனது உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார். அவர் புணே வந்த 10 மாதங்களில் கஸ்தூர்பா இறக்கிறார். அப்போது மௌனவிரதத்தில் இருந்ததால், எழுத்தின் வழியாகவே தனது உணர்வுகளை வெளிபடுத்த முடிந்த காந்தி மனதை தொடும்படியான ஒரு கடிதத்தை மனுபென்னுக்கு எழுதினர். 

ராஜ்காட் சென்று படிப்பை தொடரும்படி அதில் மனுபென்னுக்கு ஆலோசனை கொடுத்திருந்தார்."அந்த நாளில் இருந்து பாபு எனக்கு தாயாக மாறினார்" என்று அந்த நூலில் எழுதுகிறார் மனுபென். ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்காக அவரின் சுனாரியை (துப்பட்டா போன்ற துணியை) பெற்றபோது அவர் கூறினார்: "கிருஷ்ணருக்ககவே வாழ்ந்த மீராபாய் போல என்னை என்னிகொள்கிறேன். 

     மனுபென்னின் டைரி கிடைத்திருப்பதால் மகாத்மாவுக்கு துணையாய் இருந்தவர் மீது ஏற்பட்ட உளவியல் தாக்கத்தை கணிக்க முடியும்.


தொடரும்....


Image by FlamingText.com

Tuesday, July 30, 2013

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ரா. முருகவேள் மற்றும் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினருக்கு முதலில் நம் வாழ்த்துகள். மூல ஆங்கில நூலை வாசித்தது போன்ற மிகவும் நெருக்கமான, எந்த நெருடலுமின்றி இடைவிடாத பயணமாக நூல் தன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. மிகவும் பொருத்தமான வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், அடிக்குறிப்புகள் என ஒரு முக்கிய நூலுக்குத் தேவையான அனைத்து குணங்களும் பொருந்தியதாக விளங்குகிறது.
பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகியவற்றுக்கு ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைக்கும் அரசுகள் - என இந்த மூவர் கூட்டணியின் இயக்கத்தை மிக விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார் ஜான் பெர்கின்ஸ்.  

பொம்மலாட்டக்காரர், பழங்குடியினர், இந்தோனேசிய ஆங்கில மாணவி, ஆப்கான் பிச்சைக்காரர், இளவரசர் டயிள்யூ, பொன்னிறக் கூந்தல் கொண்ட அழகான இளம் பெண்கள், நீலக் கண்களுடன் சாலி, புஷ் குடும்பத்தினர், பின்லேடன், இடி அமின், அழுகிப் போன உடல்கள், வீச்சமடிக்கும் துர்நாற்றம், 9/11 கட்டட இடிபாடுகள், கெரில்லாக்கள், அமேசான் காடுகள், சவுதி அரச குடும்பத்தினர், ரோல்டோஸ், ஓமர், அலாண்டே, ‘மெய்ன்' நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அதன் பங்குதாரர்கள், மிஷினரிகள், பேதி மருந்து புட்டிகள், மதுக் கோப்பைகள் என இந்நூல் நம் கண்முன் நூற்றுக்கணக்கான காட்சிகளையும் படிமங்களையும் உருவாக்கி வித்தை காட்டுகின்றன. நாள்தோறும் 24,000 பேர் பட்டினியால் செத்து மடிய, மறுபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செழிப்புடன் விளக்கொளியில் மின்னுகிறது

சவுதி அரேபியாவைப் போல் சென்னையில் ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ளுவது, பாதாள சாக்கடைகள், அணு உலைகள், நர்மதா அணை எனப் பல நூறு திட்டங்களில் முடங்கிக் கிடக்கும் கோடான கோடி டாலர்கள்; அதைவிட இந்தியா முழுவதும் போடப்பட்டு வரும் நான்கு வழி சாலைகள் - நடப்பில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகளாகும். முற்றிலும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை யாருக்கான சாலை? இந்த சாலைகளை ஒட்டிச் செல்லும் பல கிராம சாலைகள் ஆண்டுக்கணக்காகப் பராமரிப்பின்றி கிடப்பது ஏன்? இந்த சாலைகளில் எளிய இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? அலுவலகக் கோப்புகளின் துர்நாற்றம், இந்திய சிவில் சமூகத்தின் பரப்பளவெங்கும் வீசிக் கிடக்கிறது.

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.
 
பெர்கின்சைப் போல் நம்மைச் சுற்றி முகமூடிகளுடனும், முகமூடிகளின்றியும் பலர் உலவுகின்றனர். இவர்களை அடை யாளம் காணும் பணி முக்கியமானது. அதற்கான கையேடுகளைக்கூட நாம் கூட்டாக உருவாக்கலாம். சென்னையில் நங்கூரமிட்டுள்ள ‘நிமிட்ஸ்' அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலிலிருந்து பல பெர்கின்ஸ்கள் (மாலுமிகள்) துடைப்பங்களுடன் சென்னையை சுத்தம் செய்யத் தரையிறங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் சமூக சேவைகளை தொடங்கிவிட்டதாக ‘சன்' தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்திற்கு தலைப்புச் செய்தியாக வழங்குகிறது. பெர்கின்சையும் அவரது பங்காளிகளையும் சேர்த்தே அடையாளம் காண்போம்.

இந்நூலிலிருந்து...
.
ஆங்கில மாணவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்
.
இவ்வளவு பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற வீடுகளையும், பேன்சி ஸ்டோர்களையும் தவிர, உலகில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
.
மக்கள் உணவின்றிப் பட்டினி கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான பெட்ரோலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரிக பாணிகளுக்காக ‘ஸ்டைல்' ‘பேஷன்' இதழ்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
.
எங்களைப் போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள் ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்குச் சொல்ல முயற்சித்தால், உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள்.
.
ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மேலும் மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ஒழிந்தீர்கள்!

நன்றி: 
ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்

விலை ரூ 150


கிடைக்குமிடம்

கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
 



Image by FlamingText.com

Wednesday, July 24, 2013

ஜோக்ஸ் -1

ஒரு ஜோக்:-

கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'

------------------------------------------------------------------------------------------

டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக்குடுங்க..."

"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தர முடியும். தலைவலி வேணும்னா போய் டீவி பாருங்க."
------------------------------------------------------------------------------------------

 "மச்சி, நாளக்கு சினிமாவுக்கு போறேன், வர்றியாடா?"

"முடிஞ்சா வரேன்."

"முடிஞ்சதும் ஏண்டா வரே? படம் ஆரம்பிக்கும்போதே வாடா!"
------------------------------------------------------------------------------------------


இரவிலே தெரியாத கல் என்ன கல்
பகல்
------------------------------------------------------------------------------------------

ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்
ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம் எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.
தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன செய்வது என்றார்.
அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள் எவரையும் அனுமதியாதே என்றார்.
சிறிது நேரத்தில் முதலாளியினுடைய  மனைவி வந்தார்.
அனுமதிக்கமுடியாது என்றார் காவலாளி.
நான் அவரது மனைவி என்றார் இவர்
காவலாளி சொன்னார் வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று...........
------------------------------------------------------------------------------------------

மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது..."
------------------------------------------------------------------------------------------

உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...
------------------------------------------------------------------------------------------

சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ????????????   
------------------------------------------------------------------------------------------
மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:

நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------

ஒரு கோழியின் கவிதை

காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது?

------------------------------------------------------------------------------------------

பிரபாகரன் - என் மக்கள்  ( வாரிசுகள்)  இறந்தாலும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்.

கலைஞர் - தமிழ் மக்கள் இறந்தாலும் என் மக்களுக்காக ( வாரிசுகள்) போராடுவேன்.
------------------------------------------------------------------------------------------

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்

பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க
------------------------------------------------------------------------------------------

சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............ 
------------------------------------------------------------------------------------------

தமிழ்சினிமா ஹீரோக்களின் அடுத்த படங்கள்
விஜயகாந்த்
தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கும்பகோணம், நாகப்பட்டினம்......
விஜய்
வில்லு, அம்பு, கதை, கடப்பா, கம்பு, குச்சி,
அஜீத்,
அசல், நகல், ஒரிஜினல், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், ப்லாக் அண்ட் ஒயிட்
சூர்யா,
வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்,
சிம்பு
சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம்,
ஜீவா,
ஈ, கொசு, எரும்பு, கரப்பான் பூச்சி, மண்புழு,
விஷால்
சத்யம், INOX, அபிராமி, தேவிபாரடைஸ்
பரத்
சேவல், கோழி, புறா, வாத்து, காக்கா,
சேரன்
ராமன் தேடிய சீதை, அனுமான் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை
நகுல்,
காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், கீழ விழுந்தேன், டிச்சில விழுந்தேன்
விக்ரம்
கந்தசாமி, கருப்புசாமி, குப்புசாமி, குழந்தை சாமி,
தனுஷ்,
படிக்காதவன், முட்டாப்பய, தருதலை, மக்கு.....
ஆர்யா
நான் கடவுள், நான் அரக்கன், நான் எமன், நான் பேய்
ஜெயம் ரவி,
SOMETHING SOMETHING, NOTHING NOTHING, EVERYTHING EVERYTHING, ANYTHING ANYTHING
SJ சூர்யா,
NEWTON'S 3 LAW, PASCAL'S LAW, HOOKE'S LAW, SHAKILA
மாதவன்
குரு என் ஆளு, ப்ரியா உன் ஆளு, நமீதா நம்ம ஆளு,
சாந்தனு,
சக்கரகட்டி, நாமக்கட்டி, உப்புக்கட்டி, சுண்ணாம்பு கட்டி, வடசட்டி
------------------------------------------------------------------------------------------

காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?
.
.
.
முறுக்கு திங்கிறப்போ தெரியாம நாக்கை கடிச்சா அப்ப வருமே......
அந்த வலிதான் !!!!!
------------------------------------------------------------------------------------------

சார் : தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன்1 : தலை ஒன்னு தானே இருக்கு,
ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
சார் : ??????
"
"
"
"
மாணவன்2 : எனக்கு பல் வலி சார்.
------------------------------------------------------------------------------------------

ஆணியே புடுங்க வேணாம் போடி...
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல்
மனைவி: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்:  முட்டை பொறியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...
------------------------------------------------------------------------------------------

முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!
------------------------------------------------------------------------------------------

ஒரு ஊர்ல 8 மணி , 10 மணின்னு ரெண்டு
நண்பர்கள் இருந்தாங்க.

ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி ,8
மணிக்கு போனான், 8 மணிக்கு போனா ,10 மணி 10 மணி
ஆகியும் 8 மணிய பாக்கல.

10 மணி ஆனதும் 8 மணி 10
மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுரேன் 10 மணி நான்
நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வருவேன்னு சொல்லுச்சாம்.
அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும்
8 மணியை பாக்கவே இல்லை.
அழாதீங்க.....
------------------------------------------------------------------------------------------

ஒருவன் : ஏன் மச்சான் கால் பன்னால
மற்றவன் : பலன்சே இல்ல மச்சான்
ஒருவன் : பாலன்ஸ் இல்லன்னா சுவத்துல சாஞ்சுகிட்டு கால்
பண்ண வேண்டியது தானே?
மற்றவன் : ????
------------------------------------------------------------------------------------------

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. என்றார் கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? என்று கேட்டார். சீடன் சொன்னான், குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
புன்முறுவலோடு ஞானி சொன்னார், ''இது தான் காதல்.''

பின்னர் ஞானி, சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது. சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? சீடன் சொன்னான், இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.
இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''

---ஒஷோ
------------------------------------------------------------------------------------------

தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்.....
------------------------------------------------------------------------------------------

சுரேஷ் : "உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"
சுந்தர் : "தெரியல....."
சுரேஷ் : "பல் டாக்டருக்கு தான்."
சுந்தர் : "எப்படி?"
சுரேஷ் : "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே."
------------------------------------------------------------------------------------------

"டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"ஐ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?"
"அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்."
------------------------------------------------------------------------------------------

நகைச்சுவை -1

டாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன காரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…
நோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…
------------------------------------------------------------------------------------------

கடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.
கடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை? யார் நீ?” எனக் கேட்கிறார் கடவுளிடம்.
கடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.
கடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.
------------------------------------------------------------------------------------------

அப்பா: ‘‘என்னடா? பேப்பர் ரிசல்ட்டுல உன் நம்பர் இல்லே..?’’ என்று அதிர்ச்சியாகக் கேட்கிறார் .
மகன்: ‘‘நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுப்பா…’’
------------------------------------------------------------------------------------------

கிளாஸ் ரூம்ல சர்தார்ஜியை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
டீச்சர் போர்ட்ல பாடம் எழுதறப்ப, தானும் நோட்டுல எழுதி, டீச்சர் அழிக்கிறப்ப, தானும் அழிச்சா, சந்தேகமே வேண்டாம்… அவர்தான் சர்தார்ஜி!
------------------------------------------------------------------------------------------

பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.
பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
------------------------------------------------------------------------------------------

பில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி
மதிப்பிற்குரிய பில்கேட்ஸ்,
என் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா?
3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா?
4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா?
கடைசியாக ஒரு சொந்தக் கேள்வி
உங்கள் பெயரில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய்…
சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல…
மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார். கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.
சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.
கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “
------------------------------------------------------------------------------------------

மனைவி
ஏழிழு பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்கவேண்டும்

கணவன்
எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு
------------------------------------------------------------------------------------------

சௌத் இன்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இன்டியால சௌத்தங்காய் கிடைக்குமா?
------------------------------------------------------------------------------------------

ஒரு யானையும் ஒரு எறும்பும் ஒரே கிளாஸ்ல படிச்சாங்க. அந்த யானை ஒழுங்காக கிளாஸ்கு போச்சு. ஆனா அந்த எறும்பு தொடர்ந்து லீவு போட்டுகிட்டு இருந்திச்சு. ஏன் தெரியுமா?
ஏன்னா அது 'கட்'டெறும்பு!
------------------------------------------------------------------------------------------

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதை மாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா
------------------------------------------------------------------------------------------

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
------------------------------------------------------------------------------------------

கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”

 “காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
------------------------------------------------------------------------------------------

நீதிபதி: பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
------------------------------------------------------------------------------------------
பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி ?

முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்
    வாகனம் பார்க் பண்ணுதல்
    ATM  மெசினுக்கு செல்லல்
    கார்டை உள் நுழைத்தல்
    பின் நம்பேர் அடித்தல்
    பணம் பெறல
    கார்ட் டை மீள பெறல
    வண்டியை எடுத்து கொண்டு செல்லல்                       
    

இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள்   என்று பாப்போம்

    வண்டியை பார்க் செய்தல்
    மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்
    வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
    மேக்கப் சரி செய்தல்
    ATM க்கு செல்லுதல்
    தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்
    கார்டை உல் நுழைதல்
    கன்சலை அழுத்துதல்
    பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்
    கார்டை உள் நுழைதல்
    பணத்தை பெறல
    வண்டிக்கு செல்லல
    மேக்கப் சரி பார்த்தல்
    வண்டியை ஸ்ட்ராட் செய்தல்
    வண்டியை ஆப் செய்தல்
    மீண்டும் ATM  க்கு செல்லல்
    கார்டை எடுத்தல்
    வண்டிக்கு வரல்
    மேக்கப் சரி பார்த்தல்
    ஸ்ட்ராட செய்தல்
    வண்டியை 1/2 KM  தூரம் வரை ஒட்டி செல்லல்
    பின் ஹன்ட்பிரக்விடுவித்தல்
    வண்டியை தொடர்ந்து ஓட்டுதல
------------------------------------------------------------------------------------------

கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...

கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்

கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்
------------------------------------------------------------------------------------------

Wife: என்னங்க செத்துட்டா சொர்கத்துல husband&wife தனியா தான் இருக்கணுமா?

Husband: அதனால தாண்டி அது சொர்க்கம்...!

------------------------------------------------------------------------------------------

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட் டிரைவருக்குதான்.

------------------------------------------------------------------------------------------

என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

------------------------------------------------------------------------------------------

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும்  கடிக்க முடியாது.

------------------------------------------------------------------------------------------

செருப்பை திருடினவன் மாட்டிகிட்டான்...

    எங்கே?

கால்லே....

------------------------------------------------------------------------------------------

என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.

------------------------------------------------------------------------------------------

ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.

------------------------------------------------------------------------------------------

நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.

------------------------------------------------------------------------------------------

வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.

------------------------------------------------------------------------------------------

என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!!

------------------------------------------------------------------------------------------

இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,

நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???

------------------------------------------------------------------------------------------

காதலன் : அன்பே, நம்ம கல்யாணத்த எங்க குடும்பத்துல ஏத்துகிட மாட்டேங்குறாங்க..

காதலி : நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவங்க யாரு ?

காதலன் : என்னோட மனைவியும், மாமியாரும்..........

------------------------------------------------------------------------------------------

அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும்

நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.....

------------------------------------------------------------------------------------------

நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

------------------------------------------------------------------------------------------

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
------------------------------------------------------------------------------------------

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,

அவிச்ச முட்டை போடாது.
------------------------------------------------------------------------------------------

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
------------------------------------------------------------------------------------------

“மீன்குட்டிக்கு நீச்சல் கத்துத் தர வேண்டியதில்லை’ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா……………….ஏன்னா அதுக்கு அனா, ஆவன்னாவே தெரியாது அப்புறம் எப்படி நீ-ச்-ச-ல் னு கத்துத் தர முடியும்?
------------------------------------------------------------------------------------------

காதலர்கள் ஏன் பொய்யே பேசுறாங்க தெரியுமா?
அவங்க "மெய் மறந்து" காதலிகிரங்க...
------------------------------------------------------------------------------------------

"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு..."
"டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?"
------------------------------------------------------------------------------------------

Image by FlamingText.com

ஜோக்ஸ் - Jokes

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
----------------------------------------------------------------------------------------------------------
பெரிய விஷயங்களை விட,
சிறிய விஷயங்கள் நம்மை அதிகம் காயபடுத்தும்.
*
*
*
உதரணமாக,
*
*
*
குதிரை மேல உக்காரலாம்,
குண்டூசி மேல உக்கார முடியுமா?

ஹி ..ஹி ...ஹி....
----------------------------------------------------------------------------------------------------------
 
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ... ப்ளீஸ்!
******************************
********

1.நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே... யார் அந்த நாலு பேர்?
2.செல்போன் யூஸ் பன்றது அதிகமாகிட்டதால அதோட விலைகள் குறைஞ்சதா சொல்றாங்க..அப்புறம் ஏன்யாஅரிசி பருப்பு விலைலாம் குறையலை?

3.எப்பொழுது கூலிங் பீர் கேட்டாலும் சாதா பீர் தருகிறாயே,சாதா பீர் கேட்டால் என்ன தருவாய்?

4.நாராயனசாமியோட 15நாளும், நத்தம் விஸ்வநாதனோட ஜூன் மாசமும் என்னிக்கு வரும்..?

5.நன்றிக்கு நாயை உதாரணம் காட்டும் மனிதனை சுயநலத்துக்கு உதாரணம் சொல்லிக் கொண்டிருக்குமோ நாய்கள்?

6.கடைக்காரனிடம் : "ஆறு ஹால்ஸ் முட்டாய் குடுத்தா, ஒரு கோழி முட்ட குடுப்பியா? அப்றம் என்னா டாஷ்க்கு எனக்கு சில்லறையா தர மாட்டேங்கர..?

7.காந்தி ஜெயந்தி, கிருஷ்ணர்ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி ... இந்த ஜெயந்தி உண்மையா யாரோட ஆளு ?

8.கடவுளை கும்பிட கோவிலுக்கு சென்றேன்.. வாசலில் பிச்சைக்காரன் என்னை கும்பிட்டான்.. நான் கடவுளா ?

9.சோத்துல மயிரு இருந்தா உறவு நெலைக்குமாம். சோறே மயிராட்டம் இருந்தா..?

யாரோ எங்கயோ எழுதியது .................நான் இல்ல.
----------------------------------------------------------------------------------------------------------
 
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
*********************************
திருமணமான புதியதில்
==================


1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
===================


1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
 
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடாதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க, வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழக்கமாகினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை, சீராக்குங்கள்

கணவன் தலை முடியை சீராக்கினான்

சில மாதங்களுக்கு பின்பு
.
.
.
.
.
.
.
.
மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறிட்டிங்க

கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பா :
 
----------------------------------------------------------------------------------------------------------
வக்கீல்:​வேணும்னுதா​னேஉன்ம​னைவி​யை கிணற்றி​​லே தள்ளி​னே?
குற்றவாளி:இல்ல....​வேணாம்னு
----------------------------------------------------------------------------------------------------------
பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவை வாங்கிக்கொடுத்தீங்களாமே?
காஞ்சி பட்டா ? ஆரணி பட்டா ?

அசிங்கப்பட்டு,அவமானப்பட்டு, கடன்பட்டு வாங்கினேன்
----------------------------------------------------------------------------------------------------------
"ஐ டோன்ட் நோ" ன்னா என்னடா அர்த்தம்!'

"எனக்கு தெரியாது!"

"அட! உனக்கு தெரியாதா?"
----------------------------------------------------------------------------------------------------------
 ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.
----------------------------------------------------------------------------------------------------------
கள்ளக்காதலர்கள் நடுவில் சந்தேகம் வருவதை போன்ற காமெடி வேறெதுவும் இருக்க முடியாது :))
----------------------------------------------------------------------------------------------------------

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
----------------------------------------------------------------------------------------------------------
உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க??
பையன்: கழுத்துல சார்!
----------------------------------------------------------------------------------------------------------
ஜோ : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
நண்பர் : எப்படி ?
ஜோ : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!
----------------------------------------------------------------------------------------------------------
வேலைக்காரிக்கும் ரோஸிக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிட்டது. வேலைக்காரியை வீட்டைவிட்டு அனுப்புவதென்று முடிவானது. வேலைக்காரிக்கு சரியான கோபம். போவதற்கு முன் நல்லா நாலுவார்த்தை ரோஸியைக் கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ''வீட்டைப் பாத்துக்கிறதுலயும் சமைக்கிறதுலயும் நான் உன்னைவிட பெட்டர்னு உன் புருஷன் என்கிட்ட சொல்லியிருக்கான்.'' ரோஸி கண்டு கொள்ளவில்லை. ''செக்ஸிலயும் உன்னைவிட நான்தான் பெட்டர்னு தெரியுமா உனக்கு?'' ரோஸி அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள், ''இதையும் என் புருஷன்தான் சொல்லியிருப்பான்.'' வேலைக்காரி சொன்னாள், ''இல்லை, தோட்டக்காரன் சொன்னான்.''
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி:-_உங்களுக்கு_ராணின்னு_ஏற்கனவே_ஒரு_மனைவி இருக்கான்னு_கல்யாணத்துக்கு_முன்பே_ஏன்_என்கிட்டே_சொல்லலை..
கணவன்:-சொன்னேனே..._மறந்துட்டியா...
மனைவி:- எப்போ_சொன்னீங்க...நீங்க_சொல்லவே_இல்லை..
கணவன்:- உன்னை_ராணி_மாதிரி_வச்சி_காப்பாத்துவேன்னு_நான் சொல்லலை..
மனைவி:-????????
 
----------------------------------------------------------------------------------------------------------
'எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கலை...!''

''ஏன்...?''

''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?'' 
----------------------------------------------------------------------------------------------------------
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா....?
ஒரு ஆண் கடுமையா உழைச்சா...... பொண்டாட்டியைக் கண்டுக்க
மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா…. அவளையே சுத்தி சுத்தி வரான்.
வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா, அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத்தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான்
ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா
"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம்
பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க
வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு..
எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"
ன்னு பூசல்….. இந்த
கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம்
அப்படின்னு சொல்லுவாங்க…. இது தப்பு பெண்கள்
நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம்
தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க....

----------------------------------------------------------------------------------------------------------
நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.

நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?

நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.

நபர் - 2 : என்னது!

நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை.

----------------------------------------------------------------------------------------------------------
ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்.

----------------------------------------------------------------------------------------------------------

Image by FlamingText.com

Tuesday, July 16, 2013

Chicken Biryani Restaurant Style



தேவையானவை:
மிளகு -6
பட்டை -2
ஏலக்காய் -6
பிரியாணி இலை -3
லவங்கம் -3
கிராம்பு -1/2 ஸ்பூன்
மேஸ்-2
சீரகம் -1 ஸ்பூன்
அண்ணாச்சி பூ -3




முதலில் கொடுக்கபட்டுள்ளதை அரைத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.





மிளகாய் தூள், தனியா துள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தயிர் மற்றும் உப்பு. இவை அனைத்தும் 2 ஸ்பூன் வீதம் எடுத்துகொள்ள வேண்டும்.



நன்கு கழுவிவைத்த சிக்கனுடன் அரைத்துவைத்த மசாலாவை கலக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சிபூண்டு விழுது, மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.







பின்பு அதனுடன், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும்.

அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றவேண்டும். பிறகு 3-4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்போது மசாலா நன்கு சிக்கனுடன் ஊறி இருக்கும்.

பாஸ்மதி அரிசி 500 கிராம்  எடுத்து ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். 

பின்பு, ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சீரகம், இலை, மற்றும் உப்பு, 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.





ஒரு மணி நேரம் ஊறவைத்த அரிசியை கொதிக்கும் நீருடன் சேர்த்து 5 நிமிடம் வைக்கவேண்டும்.
ஊறவைத்த சிக்கனை எடுத்து ஒரு கனமான பாத்திரத்தில் வைக்கவேண்டும். அதனுடன் வருத்த வெங்காயம் சிறிது சேர்க்கவேண்டும்.

முக்கால் அளவு வேகவைத்த அரிசியை சிக்கனுடன் சேர்க்கவேண்டும்.
அதன்மேல் வருத்த வெங்காயத்தை சேர்க்கவேண்டும்.
2 ஸ்பூன் பாலுடன் சிறிது குங்குமபூ அல்லது கேசரி பவுடர் சேர்க்க வேண்டும்.


அதனுடன் 2 ஸ்பொன் நெய் சேர்க்கவேண்டும். இது தேவைபட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும். மற்றும் kewra water 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும்.
கடைசியாக ஒரு கனமான மூடிக்கொண்டு மூடிவைக்கவேண்டும். 5 நிமிடம் அதிக சூட்டிலும் , பிறகு 10 நிமிடம் குறைந்த சூட்டிலும் வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.





Image by FlamingText.com

Search This Blog