Pages

Subscribe:

Monday, April 29, 2013

நீலகிரி சிக்கன் குருமா

தேவையான பொருட்கள்: 
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 8 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 3 1/2 கப்

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
 
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Image by FlamingText.com

Friday, April 26, 2013

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.

சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்.
Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.


'ஓ Jesus' என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகுநேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார்.
வீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியைத்தான் அணிந்திருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தான்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார். 

Search This Blog