ஒரு ஜோக்:-
கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'
------------------------------------------------------------------------------------------
டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக்குடுங்க..."
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தர முடியும். தலைவலி வேணும்னா போய் டீவி பாருங்க."
------------------------------------------------------------------------------------------
"மச்சி, நாளக்கு சினிமாவுக்கு போறேன், வர்றியாடா?"
"முடிஞ்சா வரேன்."
"முடிஞ்சதும் ஏண்டா வரே? படம் ஆரம்பிக்கும்போதே வாடா!"
------------------------------------------------------------------------------------------
இரவிலே தெரியாத கல் என்ன கல்
பகல்
------------------------------------------------------------------------------------------
ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்
ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம் எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.
தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன செய்வது என்றார்.
அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள் எவரையும் அனுமதியாதே என்றார்.
சிறிது நேரத்தில் முதலாளியினுடைய மனைவி வந்தார்.
அனுமதிக்கமுடியாது என்றார் காவலாளி.
நான் அவரது மனைவி என்றார் இவர்
காவலாளி சொன்னார் வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று...........
------------------------------------------------------------------------------------------
மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது..."
------------------------------------------------------------------------------------------உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...
------------------------------------------------------------------------------------------
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..
சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...
சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..
சர்தார்-2 :- ????????????
------------------------------------------------------------------------------------------மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------ஒரு கோழியின் கவிதைகாலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது?
------------------------------------------------------------------------------------------
பிரபாகரன் - என் மக்கள் ( வாரிசுகள்) இறந்தாலும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்.
கலைஞர் - தமிழ் மக்கள் இறந்தாலும் என் மக்களுக்காக ( வாரிசுகள்) போராடுவேன்.
------------------------------------------------------------------------------------------
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க
------------------------------------------------------------------------------------------
சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்
சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............
------------------------------------------------------------------------------------------
தமிழ்சினிமா ஹீரோக்களின் அடுத்த படங்கள்
விஜயகாந்த்
தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கும்பகோணம், நாகப்பட்டினம்......
விஜய்
வில்லு, அம்பு, கதை, கடப்பா, கம்பு, குச்சி,
அஜீத்,
அசல், நகல், ஒரிஜினல், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், ப்லாக் அண்ட் ஒயிட்
சூர்யா,
வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்,
சிம்பு
சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம்,
ஜீவா,
ஈ, கொசு, எரும்பு, கரப்பான் பூச்சி, மண்புழு,
விஷால்
சத்யம், INOX, அபிராமி, தேவிபாரடைஸ்
பரத்
சேவல், கோழி, புறா, வாத்து, காக்கா,
சேரன்
ராமன் தேடிய சீதை, அனுமான் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை
நகுல்,
காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், கீழ விழுந்தேன், டிச்சில விழுந்தேன்
விக்ரம்
கந்தசாமி, கருப்புசாமி, குப்புசாமி, குழந்தை சாமி,
தனுஷ்,
படிக்காதவன், முட்டாப்பய, தருதலை, மக்கு.....
ஆர்யா
நான் கடவுள், நான் அரக்கன், நான் எமன், நான் பேய்
ஜெயம் ரவி,
SOMETHING SOMETHING, NOTHING NOTHING, EVERYTHING EVERYTHING, ANYTHING ANYTHING
SJ சூர்யா,
NEWTON'S 3 LAW, PASCAL'S LAW, HOOKE'S LAW, SHAKILA
மாதவன்
குரு என் ஆளு, ப்ரியா உன் ஆளு, நமீதா நம்ம ஆளு,
சாந்தனு,
சக்கரகட்டி, நாமக்கட்டி, உப்புக்கட்டி, சுண்ணாம்பு கட்டி, வடசட்டி
------------------------------------------------------------------------------------------
காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?
.
.
.
முறுக்கு திங்கிறப்போ தெரியாம நாக்கை கடிச்சா அப்ப வருமே......
அந்த வலிதான் !!!!!
------------------------------------------------------------------------------------------
சார் : தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன்1 : தலை ஒன்னு தானே இருக்கு,
ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
சார் : ??????
"
"
"
"
மாணவன்2 : எனக்கு பல் வலி சார்.
------------------------------------------------------------------------------------------
ஆணியே புடுங்க வேணாம் போடி...
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல்
மனைவி: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்: முட்டை பொறியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...
------------------------------------------------------------------------------------------
முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!
------------------------------------------------------------------------------------------
ஒரு ஊர்ல 8 மணி , 10 மணின்னு ரெண்டு
நண்பர்கள் இருந்தாங்க.
ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி ,8
மணிக்கு போனான், 8 மணிக்கு போனா ,10 மணி 10 மணி
ஆகியும் 8 மணிய பாக்கல.
10 மணி ஆனதும் 8 மணி 10
மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுரேன் 10 மணி நான்
நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வருவேன்னு சொல்லுச்சாம்.
அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும்
8 மணியை பாக்கவே இல்லை.
அழாதீங்க.....
------------------------------------------------------------------------------------------
ஒருவன் : ஏன் மச்சான் கால் பன்னால
மற்றவன் : பலன்சே இல்ல மச்சான்
ஒருவன் : பாலன்ஸ் இல்லன்னா சுவத்துல சாஞ்சுகிட்டு கால்
பண்ண வேண்டியது தானே?
மற்றவன் : ????
------------------------------------------------------------------------------------------
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. என்றார் கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? என்று கேட்டார். சீடன் சொன்னான், குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
புன்முறுவலோடு ஞானி சொன்னார், ''இது தான் காதல்.''
பின்னர் ஞானி, சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது. சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? சீடன் சொன்னான், இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.
இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''
---ஒஷோ------------------------------------------------------------------------------------------
தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்.....
------------------------------------------------------------------------------------------
சுரேஷ் : "உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"
சுந்தர் : "தெரியல....."
சுரேஷ் : "பல் டாக்டருக்கு தான்."
சுந்தர் : "எப்படி?"
சுரேஷ் : "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே."
------------------------------------------------------------------------------------------
"டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"ஐ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?"
"அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்."
------------------------------------------------------------------------------------------நகைச்சுவை -1டாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன காரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…
நோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…
------------------------------------------------------------------------------------------
கடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.
கடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை? யார் நீ?” எனக் கேட்கிறார் கடவுளிடம்.
கடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.
கடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.
------------------------------------------------------------------------------------------
அப்பா: ‘‘என்னடா? பேப்பர் ரிசல்ட்டுல உன் நம்பர் இல்லே..?’’ என்று அதிர்ச்சியாகக் கேட்கிறார் .
மகன்: ‘‘நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுப்பா…’’
------------------------------------------------------------------------------------------
கிளாஸ் ரூம்ல சர்தார்ஜியை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
டீச்சர் போர்ட்ல பாடம் எழுதறப்ப, தானும் நோட்டுல எழுதி, டீச்சர் அழிக்கிறப்ப, தானும் அழிச்சா, சந்தேகமே வேண்டாம்… அவர்தான் சர்தார்ஜி!
------------------------------------------------------------------------------------------
பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.
பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
------------------------------------------------------------------------------------------
பில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி
மதிப்பிற்குரிய பில்கேட்ஸ்,
என் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா?
3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா?
4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா?
கடைசியாக ஒரு சொந்தக் கேள்வி
உங்கள் பெயரில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய்…
சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல…
மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார். கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.
சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.
கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “
------------------------------------------------------------------------------------------மனைவி
ஏழிழு பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்கவேண்டும்
கணவன்
எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு
------------------------------------------------------------------------------------------
சௌத் இன்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இன்டியால சௌத்தங்காய் கிடைக்குமா?
------------------------------------------------------------------------------------------
ஒரு யானையும் ஒரு எறும்பும் ஒரே கிளாஸ்ல படிச்சாங்க. அந்த யானை ஒழுங்காக கிளாஸ்கு போச்சு. ஆனா அந்த எறும்பு தொடர்ந்து லீவு போட்டுகிட்டு இருந்திச்சு. ஏன் தெரியுமா?
ஏன்னா அது 'கட்'டெறும்பு!
------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதை மாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா
------------------------------------------------------------------------------------------
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
------------------------------------------------------------------------------------------
கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
------------------------------------------------------------------------------------------
நீதிபதி: பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
------------------------------------------------------------------------------------------பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி ?
முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம் வாகனம் பார்க் பண்ணுதல்
ATM மெசினுக்கு செல்லல்
கார்டை உள் நுழைத்தல்
பின் நம்பேர் அடித்தல்
பணம் பெறல
கார்ட் டை மீள பெறல
வண்டியை எடுத்து கொண்டு செல்லல்
இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள் என்று பாப்போம் வண்டியை பார்க் செய்தல்
மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்
வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
மேக்கப் சரி செய்தல்
ATM க்கு செல்லுதல்
தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்
கார்டை உல் நுழைதல்
கன்சலை அழுத்துதல்
பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்
கார்டை உள் நுழைதல்
பணத்தை பெறல
வண்டிக்கு செல்லல
மேக்கப் சரி பார்த்தல்
வண்டியை ஸ்ட்ராட் செய்தல்
வண்டியை ஆப் செய்தல்
மீண்டும் ATM க்கு செல்லல்
கார்டை எடுத்தல்
வண்டிக்கு வரல்
மேக்கப் சரி பார்த்தல்
ஸ்ட்ராட செய்தல்
வண்டியை 1/2 KM தூரம் வரை ஒட்டி செல்லல்
பின் ஹன்ட்பிரக்விடுவித்தல்
வண்டியை தொடர்ந்து ஓட்டுதல
------------------------------------------------------------------------------------------
கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்
கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்
------------------------------------------------------------------------------------------
Wife: என்னங்க செத்துட்டா சொர்கத்துல husband&wife தனியா தான் இருக்கணுமா?
Husband: அதனால தாண்டி அது சொர்க்கம்...!
------------------------------------------------------------------------------------------பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட் டிரைவருக்குதான்.
------------------------------------------------------------------------------------------என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
------------------------------------------------------------------------------------------ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.
------------------------------------------------------------------------------------------செருப்பை திருடினவன் மாட்டிகிட்டான்...
எங்கே?
கால்லே....
------------------------------------------------------------------------------------------என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.
------------------------------------------------------------------------------------------ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.
------------------------------------------------------------------------------------------நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.
------------------------------------------------------------------------------------------வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.
------------------------------------------------------------------------------------------என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!!
------------------------------------------------------------------------------------------இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,
ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,
நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???
------------------------------------------------------------------------------------------காதலன் : அன்பே, நம்ம கல்யாணத்த எங்க குடும்பத்துல ஏத்துகிட மாட்டேங்குறாங்க..
காதலி : நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவங்க யாரு ?
காதலன் : என்னோட மனைவியும், மாமியாரும்..........
------------------------------------------------------------------------------------------அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும்
நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.....
------------------------------------------------------------------------------------------நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது
------------------------------------------------------------------------------------------வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
------------------------------------------------------------------------------------------என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
------------------------------------------------------------------------------------------
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
------------------------------------------------------------------------------------------
“மீன்குட்டிக்கு நீச்சல் கத்துத் தர வேண்டியதில்லை’ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா……………….ஏன்னா அதுக்கு அனா, ஆவன்னாவே தெரியாது அப்புறம் எப்படி நீ-ச்-ச-ல் னு கத்துத் தர முடியும்?
------------------------------------------------------------------------------------------
காதலர்கள் ஏன் பொய்யே பேசுறாங்க தெரியுமா?
அவங்க "மெய் மறந்து" காதலிகிரங்க...
------------------------------------------------------------------------------------------
"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு..."
"டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?"
------------------------------------------------------------------------------------------