காந்தியின் உதவியாளரான மனுபென்னின் புதிதாக கண்டுபிடிக்கபட்ட டைரிகள், காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் அந்த பெண் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கின்றன.
மகாத்மா காந்தியின் ஆயுள் காலத்தின் கடைசி இரு ஆண்டுகளில் அவரது 'ஊன்றுகோலாக' இந்திய வரலாற்றின் மிகவும் அறியப்பட்ட முகமாக அவர் இடம் பிடித்தார். ஆனாலும்கூட அவர் மிகவும் மர்மமான நபராகவே இருந்தார். 1946ல் தனது 17ஆவது வயதில் மகாத்மா காந்தியுடன் மீண்டும் இணைந்த அவர், காந்தி கொல்லப்படும் வரை அவரை விட்டு பிரியவே இல்லை. ஆனாலும் கூட மனுபேன் என்று அழைக்கப்பட்ட பிருதுளா காந்தி தில்லியில் 40 வயதில் தனிமையில் காலம் கழித்து இறந்தார்.
அவர் இறந்து பல தசாப்தங்கள் ஓடிய பிறகு குஜராத்தியில் எழுதப்பட்ட அவரின் 10 நாட்குறிப்புகள் இந்திய டுடே-வுக்கு கிடைத்தன. 1943 ஏப்ரல் 11ந் தேதி துவங்கும் அந்த டைரிக் குறிப்புகளை கல்வியாளர் ரிஸ்வான் கத்ரி விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாலுணர்வு குறித்த காந்தியின் பரிசோதனைகள் மனுபேன் மீது உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அந்த கையேடு காட்டுகிறது. 2,000 பக்கங்கள் கொண்டது அந்த டைரி. காந்தியை சுற்றியிருந்த பரிவாரத்தினரிடையே, பெரும்பாலும் இளம் பெண்களிடையே அது பொறாமையையும் கோபத்தையும் தூண்டியதை அந்த நாட்குறிப்புகள் காட்டுகின்றன. 'வெள்ளையனே வெளியேறு; இயக்கத்தை அடுத்து தடுப்புக் காவலில் காந்தியும் கஸ்தூரிபாய் காந்தியும் வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது கஸ்தூரிபாய் காந்திக்கு உதவுவதற்காக 1942ல் பூணே ஆகா கான் மாளிகைக்கு வந்தார் மனுபென். அப்போதிலிருந்து துவங்குகிறது அவரின் டைரி.
1946 ஜனவரி 30ந் தேதி மனுபென்னை கீழே தள்ளிவிட்டு தனது 9 எம்.எம் பெரட்டா துப்பாக்கியால் காந்தியை சுட்டுக் கொல்கிறான் நாதுராம் கோட்சே. அதற்கடுத்த 22 நாட்களில் டைரிக் துருப்புகள் முடிவடைகின்றன.
பக்கங்களின் ஓரங்களில் காந்தியின் கையெழுத்தை தங்கிய அந்த நாட்குறிப்புகள், காந்திக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்ணின் சித்திரவதை காட்டுகிறது. கிழக்கு வங்கத்தின் நௌகாளியில் படுகொலைகள் அரங்கேறியதை அடுத்து பிரச்சனைக்குரிய கிராமங்கள் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார் காந்தி. அவருடன் சேர்ந்த 9 நாட்கள் கழித்து 1946 டிசம்பர் 28ந் தேதி இந்தக் குறிப்பு பதியப்பட்டுள்ளது: "பாபு எனக்கு தாயைப் போன்றவர். பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் பரிசோதனை மூலம் அவர் என்னை உயரிய தளத்திற்கு இட்டுச் செல்கிறார். இந்த பரிசோதனை குறித்து ஏதேனும் உளறுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது."மகாத்மா காந்தி: தி லாஸ்ட் பேஸ் நூலில் காந்தியின் செயலாளர் பியோரேலால் இந்த பார்வைக்கு அங்கீகாரம் வழங்குகிறார். :ஒரு தாய் வழக்கமாக தனது மகளுக்கு என்னெவெல்லாம் அதை காந்தி அவருக்கு செய்தார். அவரின் கல்வியை, உணவை, உடையை, ஓய்வை, தூக்கத்தை எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டார். நெருக்கமான கண்காணிப்புக்கு வழிகாட்டுதலுக்கும் வசதியாக தனது படுக்கையிலேயே அவரை படுக்கச் செய்தார். ஒரு சிறுமி மனதளவில் தூய்மையாக இருந்தால் தனது தாயுடன் உறங்குவதில் தர்மசங்கடம் கொள்ள மாட்டாள்." அவர் தான் காந்தியின் பிரதானமான உதவியாளராக இருந்தார். அவருக்கு கை, கால், அமுக்கி விடுவது, குளிக்க வைப்பது, சமையல் செய்வது என்று சகலமும் செய்தார்.
காந்தியின் தனிப்பட்ட மருத்துவரான டாக்டர் சுஷீலா நாயர், பிற்பாடு மதிய அமைச்சராக ஆன பியோரேலாளின் சகோதரி பிபி அம்துஸ்சலாம் முதலிய காந்தியுடன் தொடர்புகொண்டிருந்த பெண்களின் வாழ்வு குறித்தும் டைரி விரிவாக பேசுகிறது.
காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் விஷயத்தில் காந்தியின் சிஷ்யகோடிகளிடையே அதிகரித்து வந்த அதிருப்பதியையும் அவரின் நாட்குறிப்புகள் காட்டுகின்றன. மனுபென் ஒரு "மாய" சக்தி என்று காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான கிஷோரேலால் கூறியது பற்றிய இவரின் பதிவு 1947 ஜனவரி 31ந் தேதியிட்ட நாட்குறிப்பில் உள்ளது.
1955 ஆகஸ்டு 19ந் தேதி ஜவஹர்லால் நேருவுக்கு மொரார்ஜி தேசாய் எழுதிய கடிதம் மனுபென்னின் மீது மகாத்மா காந்தி ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் வெளிபடுத்துகிறது. "இனம் புரியாத நோயால் பதிக்கப்பட்ட மனுபென்னை பாம்பே ஹாஸ் பிட்டலில் பார்த்துவிட்டு வந்த மொரார்ஜி தேசாய் எழுதுகிறார்: "மனுவுக்கு உடலில் பிரச்னை ஏதுமில்லை. மனதில் தான் பிரச்சனை. அவர் வழக்கை முழுவது அவநம்பிகையிலேயே இருபது போல தெரிகிறது. சகல மருந்துகளாலும் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது."
நாதுராம் கோட்சே சுட்டு கொன்றபோது அருகிலிருந்தவர்களில் மனுபென்னும் ஒருவர். "சிதையில் எரியும் தீயின் நாவுகள் பாபுவின் உடலைத் தின்னுகின்றன. ஈம சடங்குகள் முடிந்த பிறகும் நான் அங்கேயே இருந்தது போலிருந்தது. சர்தார் பட்டேல் எனக்கு ஆறுத கூறி என்னை தன வீட்டிற்கு அழைத்து சென்றார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட பாபு இருந்தார். நேற்று குறைந்தபட்சம் அவரின் உடலாவது இருந்தது. நான் முழுமையாக நொறுங்கி போயிருந்தேன்." என்று அதற்கு மறுநாள் எழுதுகிறார். காந்தி இறந்த பிறகு எழுதிய ஐந்து புத்தகங்களில் ஒன்றான லாஸ்ட் கிளிம்சஸ் ஆப் பாபு என்ற நூலில் அவர் சொல்கிறார்: "டைரியில் உள்ளதை யாரிடமும் சொல்லகூடாது என்று காகா(காந்தியின் இளைய மகன் தேவதாஸ்) எச்சரித்தார். அவர் கூறினார்:'இந்த இளம் வயதிலேயே மிகவும் மதிப்புமிக்க இலக்கியங்களை தான்கியிருகிறாய். ஆனால் நீ சூதுவாது தெரியாதவளாகவும் இருக்கிறாய்.'"
பாபு: மை மதர் என்ற 68 பக்க நூலில் தான் பங்கு பெற்ற காந்தியின் பாலுணர்வு பரிசோதனைகள் குறித்த தனது உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார். அவர் புணே வந்த 10 மாதங்களில் கஸ்தூர்பா இறக்கிறார். அப்போது மௌனவிரதத்தில் இருந்ததால், எழுத்தின் வழியாகவே தனது உணர்வுகளை வெளிபடுத்த முடிந்த காந்தி மனதை தொடும்படியான ஒரு கடிதத்தை மனுபென்னுக்கு எழுதினர்.
ராஜ்காட் சென்று படிப்பை தொடரும்படி அதில் மனுபென்னுக்கு ஆலோசனை கொடுத்திருந்தார்."அந்த நாளில் இருந்து பாபு எனக்கு தாயாக மாறினார்" என்று அந்த நூலில் எழுதுகிறார் மனுபென். ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்காக அவரின் சுனாரியை (துப்பட்டா போன்ற துணியை) பெற்றபோது அவர் கூறினார்: "கிருஷ்ணருக்ககவே வாழ்ந்த மீராபாய் போல என்னை என்னிகொள்கிறேன்.
மனுபென்னின் டைரி கிடைத்திருப்பதால் மகாத்மாவுக்கு துணையாய் இருந்தவர் மீது ஏற்பட்ட உளவியல் தாக்கத்தை கணிக்க முடியும்.
தொடரும்....