முதல்முறை தாயாகும்போது ஏற்படும்
எதிர்பார்ப்பு சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போது
அதே அளவில் இருபதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், பிறக்கபோகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது,
ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது, எனவே முதல் குழந்தையை வரவேற்ற மனநிலையுடன்
இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.
இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது
உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுதிவிடுங்கள். அம்மா
வயித்துல உனக்காக உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா
வளருது... என்று சொல்லி வாருங்கள்.
நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது
குழந்தையை கொண்டாடும் போது எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையுடன்
ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒப்பீடுகளெல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு
மனப்பான்மையையும், தன உடன்பிறப்பின் மீதான தீராத பகையையும் (சிப்ஸிங்
ரைவல்ரி) ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த
குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளியாக வளர்வதும் வளர்ப்பு முறையில்
தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம்
எள் அளவும் குன்றாமல் பாசமலர்கலாக இருக்க இப்போதே அதற்கான விதையிடப்பட
வேண்டும். குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாற்ற சொல்லிகொடுங்கள்.
(*** பின் குறிப்பு : இதுக்கு தான் சொல்றாங்க ஒரு குழந்தை போதும்-னு.)