பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!
நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான
காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில்
பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல்,
அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம்.
பாஜி ராவ் மற்றும் மஸ்தானி
ADVERTISEMENT
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வரவுள்ள ஒரு படம், பேஷ்வா
பாஜி ராவின் கதையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மஸ்தானியின்
மாய மந்திரங்கள் (நல்ல விதத்தில்) இல்லாமல் இவர்களின் கதை முழுமை பெறாது.
இந்திய வரலாற்றில் பல தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளதை போலவே,
மஸ்தானியின் பிறப்பைப் பற்றியும் சரியாக தெரியவில்லை. சிலர் அவரை
ஹைதராபாத்தை சேர்ந்த இளவரசியாக நம்புகின்றனர். சிலர் அவரை நடன கலைஞராகவும்
நம்புகின்றனர். தன் குலத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த போதிலும் கூட
பாஜி ராவ் அவரை மணம் புரிந்தார். போர்களத்தில் பாஜி ராவ் மரணம் அடைந்த
போது மஸ்தானியும் தற்கொலை செய்து கொண்டார்.
கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி
தன் ஆண் உறவினர்களுடன் கூட்டணி அடிப்படையில் ஆண்டு வந்தாலும் கூட,
எகிப்தின் கடைசி பரோவாக அறியப்படுபவர் கிளியோபட்ரா. மிகவும் அழகிய பெண் என
வரலாற்றால் கூறப்படும் இவர் உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த இரு ஆண்களை
வசீகரித்தார். ஜூலியஸ் சீஸரின் மறைவுக்கு பின்னர் மார்க் ஆண்டனியின் மீது
காதலில் விழுந்தார் கிளியோபட்ரா. இவர்களின் உறவு 11 ஆண்டுகளுக்கு
நீடித்தது. கி.பி.41-ல், கிளியோபட்ராவின் வசீகரத்திற்கு இரையாகாமல் எகிப்தை
கைப்பற்றும் எண்ணத்தில் ரோமானிய படைக்கு ஆக்டேவியன் தலைமை தாங்கிய போது,
கிளியோபட்ரா இறந்து விட்டார் என்ற பொய்யான செய்தி கேட்டு, ஆண்டனி தன் உயிரை
மாய்த்துக் கொண்டார். கட்டுவிரியனை கடிக்கச் செய்து தன் உயிரையும்
மாய்த்துக் கொண்டார் கிளியோபட்ரா.
ஷாஜகான் மற்றும் மும்தாஜ்
தன் தாத்தா அக்பருக்கு பின் நன்றாக அறியப்பட்ட முகலாய பேரரசர்களில் ஒருவர்
தான் ஷாஜகான். இவருக்கு மூன்று மனைவிகள். அவர்களில் இவருக்கு மிகவும்
பிடித்தவராக இருந்தவர் மும்தாஜ். தங்களின் 14 ஆவது குழந்தையைப்
பெற்றெடுக்கும் போது உயிரை இழந்தார் மும்தாஜ். அவரின் கடைசி வார்த்தைகளின்
நினைவாக, தங்கள் காதல் என்றென்றும் வாழ்ந்திட, அவர் கம்பீரமான கல்லறை
மாடத்தை கட்டினார். ஒரு கணவனின் காதலை நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக
இன்றளவும் தாஜ் மஹால் நிற்கிறது.
விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர்
ஜெர்மன் நாட்டு இளவரசரும், தன் தூரத்து சொந்தக்காரருமான ஆல்பர்ட்டை
சந்தித்த போது, சொக்கிப்போனார் இளவயது விக்டோரியா. அவர்களின் திருமண
வாழ்க்கையில், உள்நாட்டு மதிப்புகள் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் மீது
கவனம் செலுத்தும் விதத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரை போலவே
அவர்கள் காட்சியளத்தினர். திருமணமாகி 21 ஆண்டுகளில், 9 குழந்தைகளைப்
பெற்றெடுத்த பிறகு, 1861 ஆம் ஆண்டு தன் மனைவியை தனியாக விட்டு விட்டு,
காய்ச்சலால் ஆல்பர்ட் இறந்தார். அதன் பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர்
விலகி கொண்டார். வெண்ணிற திருமண ஆடைக்காக பிரபலமாக அறியப்பட்ட பெண், அவர்
கணவனின் மரணத்திற்குப் பிறகு துக்கத்தை அனுசரிக்கும் விதத்தில் கருப்பு
ஆடையையும் முகத்திரையையும் அணிந்து கொண்டார்.