மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே
தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே
முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத வியாசர். சாஸ்திரத்தில் இதனை
ஐந்தாவது வேதமாக குறிப்பிட்டுள்ளனர்.
மகாபாரததத்தில் எண்ணிலடங்கா சுவாரஸ்யமான தகவல்களும் போதனைகளும்
அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் மறைந்துள்ள தகவல்கள் பல உள்ளது. அவைகளைப்
பற்றி உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சில
ரகசியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்:
திரௌபதியின் பிறப்பு
குரு துரோணாச்சாரியர் தன் நண்பன் துருபதனை பழி வாங்க நினைத்து, தன்
மாணவர்களை வைத்து வீழ்த்தினார். இதனால் அந்நாட்டில் உள்ள ரிஷிகளின்
உதவியோடு ஹோமகுண்டத்தை நடத்தினார் துருபதன். அதன் விளைவாக திவ்ய குமாரன்
பிறந்தான். அதன் பின் ஹோமம் மூலமாக யாக்யா தேவி பிறந்தாள். அவளுக்கு
திரௌபதி என பெயரும் சூட்டப்பட்டது. துரோணாச்சாரியரை கொல்வதற்காகவே திவ்ய
குமாரன் பிறந்தான் என்றும், ரிஷிகளுக்கு பயனளிக்கவே திரௌபதி பிறந்தாள்
என்றும் அசரிரி உள்ளது.
ஐவரை மணக்க காரணம்
தன் முன் ஜென்மத்தில் திருமண யோகம் இல்லாததால், தவமிருக்க தொடங்கினாள்
திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய
வரத்தை அளிக்க, அவள் முன் தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு
கணவனாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை ஐந்து முறை கேட்டாராம். அதனால்
தான் தன் அடுத்த ஜென்மத்தில் அவர் ஐவரை மணக்க வேண்டி வந்தது.
பாண்டவர்களின் விதிமுறை
குறிப்பிட்ட காலத்தின் படி, ஒவ்வொரு பாண்டவர்களுடன் திரௌபதி வசிப்பார் என
பாண்டவர்கள் ஒரு விதிமுறையை போட்டனர். அதில் ஒரு பாண்டவனுடன் இருக்கும்
போது, மற்ற பாண்டவர்கள் யாரும் அவர் அருகில் வரக்கூடாது. யாராவது இந்த
விதிமுறையை மீறினால், ஒரு பிரம்மச்சாரியாக 12 வருட வாழ்க்கையை அவர்
காட்டினில் கழிக்க வேண்டும்.
விதிமுறையை மீறிய அர்ஜூனன்
யுதிஷ்டரின் அரண்மனையில் பிராமணர் ஒருவரின் பசு களவு போனது. அந்த பிராமணரோ
அர்ஜுனனின் உதவியை நாடினார். ஆனால் அர்ஜுனின் ஆயுதங்கள் யுதிஷ்டரின்
அரண்மனையில் இருந்தது. அங்கே அவர் திரௌபதியுடன் இருந்தார். அங்கே சென்றால்
விதிமுறையை மீறும் செயலாகி விடும். ஆனால் பசுவை காக்காமல் போவது மதத்திற்கு
எதிரானது என்ற ஒரு கன எண்ணம் அவரை அங்கே செல்ல வைத்தது. அதனால் தன் 12
வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டி இருந்தது.
யுதிஷ்டரின் மற்றொரு மனைவி
ஒவ்வொரு பாண்டவர்களின் மூலமாக திரௌபதிக்கு ஒரு மகன் உள்ளான். யுதிஷ்டருக்கு தேவிகா என்ற மற்றொரு மனைவியும் உண்டு.
வாழ்க்கை வெறுத்த பாண்டவர்கள்
கிருஷ்ணர் சித்திப்பெற்ற செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந்த
உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தனர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன்
சொர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து
கொண்டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர்.
தன் நேர்மையின் காரணமாக, உயிருடன் இருக்கும் போதே, சொர்க்கத்திற்குள்
நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விளங்கினார்.
சொர்க்கத்தில் துரியோதனன்
சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் யுதிஷ்டர்.
ஆனால் பின் தான் தெரிய வந்தது, அவர் எப்போதும் பயத்தை காட்டாமல்
இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனிதமான இடத்தில் வீர மரணம் அடைந்த
காரணத்தினால் தான் அவருக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடைத்தது.