Pages

Subscribe:

Friday, February 5, 2016

கும்பகர்ணன் பற்றி தெரியுமா?

Why Kumbhakarna Slept For 6 Months?                          Please Subscribe : V2 Channel

       இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம். கும்பகர்ணன் முனிவர்களையும், சாதுக்களையும் சாப்பிடுவார் என்று நம்பப்படுகிறது. அவர் எதை சாப்பிட்டாலும் அவருடைய பசி மட்டும் அடங்கியதே இல்லை.

       கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். அரக்கனைப் போல தோற்றமளித்தாலும் புத்தி சாதூர்யத்திலும் மற்றும் இதயத்திலும் மேம்பட்டவர் கும்பகர்ணன். இராமாயணத்தில் இராவணன் இராமருடன் போரிட்ட போது, மூத்த சகோதரர் என்ற முறையில் கும்பகர்ணனை அணுகி இராமருக்கு எதிரான போரில் வெற்றி பெற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
          
          ஆனால், இராவணன் போர் ஏற்பட்ட சூழலை கும்பகர்ணனுக்கு விளக்கிய போது, இராவணன் செய்வது தவறு என்று எடுத்துரைத்தார். இராவணன் தன்னுடைய ஆலோசனையை கேட்காத போது, சகோதரன் என்ற முறையில் இராமருக்கு எதிராக போரில் இறங்கினார் கும்பகர்ணன். கும்பகர்ணன் பற்றிய பின்னணி தகவல்களைத் தெரிந்து கொண்டோம், இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பில் உள்ளதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
  
  தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, கும்பகர்ணனின் புத்திசாலித்தனத்தையும், வீரத்தையும் கண்டு பொறாமை! எனவே, கும்பகர்ணனை பழி வாங்க தக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

         இராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன் ஆகிய 3 சகோதரர்களும் பிரம்ம தேவரின் அருள் பெறுவதற்காக யாகம் செய்தார்கள்.


          இவர்களுடைய யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்த வரம் இந்திரனின் ஆசனமான 'இந்திராசனா' என்ற வரமாகும், ஆனால் கும்பகர்ணன் 'நித்ராசனா' என்ற வரத்தைக் கேட்டார்.

    இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் 'தந்தேன்' என்று சொல்லி விட்டார். எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார் கும்பகர்ணன், ஆனால் பிரம்மனால் தன்னுடைய வரத்தைத் திரும்பப் பெற முடியாது.
      கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன், சரஸ்வதி தேவியிடம் சென்று கும்பகர்ணனை 'இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

          இந்த நாளிலிருந்து 6 மாதங்கள் தூங்கவும், விழித்திருக்கும் 6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார் கும்பகர்ணன்!

Image by FlamingText.com

Wednesday, November 4, 2015

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத வியாசர். சாஸ்திரத்தில் இதனை ஐந்தாவது வேதமாக குறிப்பிட்டுள்ளனர். மகாபாரததத்தில் எண்ணிலடங்கா சுவாரஸ்யமான தகவல்களும் போதனைகளும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் மறைந்துள்ள தகவல்கள் பல உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சில ரகசியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்:

திரௌபதியின் பிறப்பு குரு துரோணாச்சாரியர் தன் நண்பன் துருபதனை பழி வாங்க நினைத்து, தன் மாணவர்களை வைத்து வீழ்த்தினார். இதனால் அந்நாட்டில் உள்ள ரிஷிகளின் உதவியோடு ஹோமகுண்டத்தை நடத்தினார் துருபதன். அதன் விளைவாக திவ்ய குமாரன் பிறந்தான். அதன் பின் ஹோமம் மூலமாக யாக்யா தேவி பிறந்தாள். அவளுக்கு திரௌபதி என பெயரும் சூட்டப்பட்டது. துரோணாச்சாரியரை கொல்வதற்காகவே திவ்ய குமாரன் பிறந்தான் என்றும், ரிஷிகளுக்கு பயனளிக்கவே திரௌபதி பிறந்தாள் என்றும் அசரிரி உள்ளது.

ஐவரை மணக்க காரணம் தன் முன் ஜென்மத்தில் திருமண யோகம் இல்லாததால், தவமிருக்க தொடங்கினாள் திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய வரத்தை அளிக்க, அவள் முன் தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு கணவனாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை ஐந்து முறை கேட்டாராம். அதனால் தான் தன் அடுத்த ஜென்மத்தில் அவர் ஐவரை மணக்க வேண்டி வந்தது.
பாண்டவர்களின் விதிமுறை குறிப்பிட்ட காலத்தின் படி, ஒவ்வொரு பாண்டவர்களுடன் திரௌபதி வசிப்பார் என பாண்டவர்கள் ஒரு விதிமுறையை போட்டனர். அதில் ஒரு பாண்டவனுடன் இருக்கும் போது, மற்ற பாண்டவர்கள் யாரும் அவர் அருகில் வரக்கூடாது. யாராவது இந்த விதிமுறையை மீறினால், ஒரு பிரம்மச்சாரியாக 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டும்.

விதிமுறையை மீறிய அர்ஜூனன் யுதிஷ்டரின் அரண்மனையில் பிராமணர் ஒருவரின் பசு களவு போனது. அந்த பிராமணரோ அர்ஜுனனின் உதவியை நாடினார். ஆனால் அர்ஜுனின் ஆயுதங்கள் யுதிஷ்டரின் அரண்மனையில் இருந்தது. அங்கே அவர் திரௌபதியுடன் இருந்தார். அங்கே சென்றால் விதிமுறையை மீறும் செயலாகி விடும். ஆனால் பசுவை காக்காமல் போவது மதத்திற்கு எதிரானது என்ற ஒரு கன எண்ணம் அவரை அங்கே செல்ல வைத்தது. அதனால் தன் 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டி இருந்தது.

யுதிஷ்டரின் மற்றொரு மனைவி ஒவ்வொரு பாண்டவர்களின் மூலமாக திரௌபதிக்கு ஒரு மகன் உள்ளான். யுதிஷ்டருக்கு தேவிகா என்ற மற்றொரு மனைவியும் உண்டு.

வாழ்க்கை வெறுத்த பாண்டவர்கள் கிருஷ்ணர் சித்திப்பெற்ற செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந்த உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தனர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன் சொர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர். தன் நேர்மையின் காரணமாக, உயிருடன் இருக்கும் போதே, சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விளங்கினார்.

சொர்க்கத்தில் துரியோதனன் சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் யுதிஷ்டர். ஆனால் பின் தான் தெரிய வந்தது, அவர் எப்போதும் பயத்தை காட்டாமல் இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனிதமான இடத்தில் வீர மரணம் அடைந்த காரணத்தினால் தான் அவருக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடைத்தது.
Image by FlamingText.com

Search This Blog