Pages

Subscribe:

Thursday, July 7, 2011

Egg Helps to reduce waight





நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது :

“பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும். இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்” என்றனர்.

மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, “நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது” என்று தெரிவித்தனர்.


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog