Pages

Subscribe:

Tuesday, November 8, 2011

About Hair

தலைமுடியின் ஆரோக்கியம்:


இளநரை :

முடிக்குத் தேவையான சத்துக் குறைபாடே இளநரைக்கு
காரணம் .
ஆப்பிள் , ஆரஞ்சு , வெள்ளரிக்காய் , முள்ளங்கி ,கோதுமை
ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரை
கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.
கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது






தலை முடி கருமையாக கரிசலாங் கண்ணியைப் பறித்து அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து ,எண்ணெயில் ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாக
வளரும்.
தேங்காய் எண்ணெயில் சோற்றுக் கற்றாலையின் சோற்றைக் காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி மிக கருமையாக வளரும் கரிசாலையின் சாறு ஒரு தேக்கரண்டி நெய்யில் குழைத்து
தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டு வர இளநரை குணமாகும்

தலைமுடி வளர
 
தேங்காய் பாலெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர ,முடி கருமையாக நீண்டு வளரும்
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் விட்டு மைபோல் அரைத்து தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வர சொட்டை நீங்கி முடி வளரத் தொடங்கும். வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலை முழுவதும் தடவி,சிறிது நேரம் ஊறிய பின் குளித்துவர முடி நன்றாக வளரும்
முடி கொட்டுவதும் நிற்கும் கறிவேப்பிலையை விழுதாக அரைத்து எலுமிச்சங்காயளவு
எடுத்து 250 மில்லி தேங்காயெண்ணெயில் காய்ச்சி வடித்து தினசரி தலைமுடிக்குத் தடவி வர முடி செழித்து வளரும் வெந்தயத்தை 200 கிராம் எடுத்து இரண்டு நாள் ஊற வைத்தால்
முளை வந்திருக்கும் . பிறக் காய வைத்து பொடியாக்கி 1500 லிட்டர் ( ஒன்றரை லிட்டர்) தேங்காய் எண்ணெயில் போட்டு வைக்கவும்.
இதை வடிகட்டாமல் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர முடி கறுப்பாக வளரும்.
கண்டங்கத்திரி பழத்தை அரைத்து சாறு எடுத்து நரை முடி மீது பூசி வர நரைமுடி கறுப்பாகி விடும்.

தலைமுடி உதிர்ந்தால் மீண்டும் வளர எலுமிச்சம் பழ விதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில் முடி துளிர்த்து வளரும்
நிலாவரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவில் அரைத்துத் தலையில் தடவி வர செம்பட்டை முடி கறுப்பாகும்

தலைமுடி நரைப்பதைத் தடுக்க :
வெள்ளை நிறத்தில் பூக்கும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி ,பசுவின் பால் 500 மில்லி ,நல்லெண்ணெய் 500 மில்லி , மூன்றையும் மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி
தினசரி தலைக்குத் தடவி தலை சீவி வந்தால் நரை முடி கறுக்கும் .முடியும் நரைக்காது.



Tips
உப்பு நீரில் தலை குளித்தலைத் தவிர்க்க வேண்டும் .உப்பு நீரில் நெல்லிக்காய்களை மூன்று மணி நேரம் ஊறப்போட்டு அந்நீரால் தலைக்குளித்தால் பாதிப்பு இராது



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog