Pages

Subscribe:

Thursday, March 20, 2014

ரோபோ

தொழிலதிபர் ஒருவர் ஒரு ரோபோ வாங்கினார். இந்த ரோபோ யாரு பொய் சொன்னாலும் பளாரென கன்னத்தில் அறையும்.

ஒரு நாள் இரவு தொழிலதிபரின் மகன் வீட்டுக்கு லேட்டா வந்தான்.

தொழிலதிபர் ;- ஏண்டா லேட்டு ?

மகன் ;- என் ஃப்ரெண்ட்ஸ் கூட படிச்சிட்டு வந்தேன் அதான்பா லேட்டு.

ரோபோ அவனை பளார்னு அறைந்தது. டேய். ஒழுங்கா உண்மைய சொல்லுடா இல்லைனா ரோபோட்ட இன்னும் அடி வாங்குவே.

மகன் ;- மன்னித்துவிடுங்கபா ஃப்ரெண்ட்ஸ் கூட படத்துக்கு போய்ட்டு வந்தேன்.

தொழிலதிபர் ;- டேய் நீயெல்லாம் உருப்புடுவேமாட்டேடா. உன் வயசுல நான் எப்புடி நல்லா படிச்சேன் தெரியுமா?
ரோபோ பளார்னு தொழிலதிபரை அறைந்தது.

இதையெல்லாம் பார்த்து புன்னகைத்தபடியே தொழிலதிபரின் மனைவி , என்னதான் இருந்தாலும் இவன் உங்களுக்கு பொறந்த பையன் அப்புடி தானேங்க இருப்பான்.

இந்த முறை ரோபோ பளாரென தொழிலதிபரின் மனைவியை அறைந்தது.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog