Pages

Subscribe:

Wednesday, January 14, 2015

Folder security

உங்கள் பதிவுகளை மற்றவர்கள் திருடாமல் இருக்க...!!
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.
இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட www.puradsifm.com
image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.
பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய,


Image by FlamingText.com

Broccoli ப்ராக்கோலியின் சூப்பரான நன்மைகள்

ப்ராக்கோலியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.
 

செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள அதிப்படியான கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

ப்ராக்கோலியில் நோய் எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களை குணப்படுத்துகிறது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகி, தோல் பளபளப்பாகும்.

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

Image by FlamingText.com

Search This Blog