தேவையானவை:
ரொட்டி - 8 முதல் 10 துண்டுகள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு
கடுகு - தாளிக்க
சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரொட்டித் துண்டுகளை பொரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் தாளிக்க வேண்டிய அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு போட்டு, அதன்பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.
சிறிது வதக்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் சிறிது சுண்டியதும், பொரித்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் குழந்தைகளுக்குப் பிடித்தமான ரொட்டி உப்புமா தயார்.

0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments