Pages

Subscribe:

Friday, August 26, 2011

இந்திய எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா: அமெரி்க்கா தகவல்:

வாஷிங்டன்:  இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தனது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக சீனா இந்திய எல்லையில் அதிநவீன அணு ஏவுகணைகளை குவித்து வருகிறது. இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனா பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. இங்கு மேலும் பல சாலைகள், ரயில் தண்டவாளங்களை அமைத்து வருகிறது.

இதனால் இந்திய எல்லையோரம் உள்ள பகுதியை மேம்படுத்தினாலும், இந்த வசதிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் தான் செய்யப்படுகின்றன.

பாகிஸ்தானுடன் சீனா ஒட்டி உறவாடி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. மேலும் சீனா இந்திய பெருங்கடல், மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைப்பதும் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சீனாவில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கி வருகிறது. இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை மேம்பட்டாலும், எல்லையோர பிரச்சனை எரிச்சலூட்டுவதாகத் தான் உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை மூலம் சீனா இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்த இரண்டு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி சென்ற சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா-சீனா இடையே உள்ள உறவை மேம்படுத்தத் முயற்சி மேற்கொண்டார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவில் உள்ள சிக்கல் நீடிக்கத் தான் செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English summary
Pentagon report says China deploys advanced nuclear missiles on the Indian border. China is investing huge amounts in improving the infrastructure in the Indo-Sino border. India is saddened by the ties between China and Pakistan.
====================================================================


ஜப்பானின் கடன் தர ரேட்டிங்கும் 'டமால்'... ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு!
டோக்கியோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஜப்பான் உட்பட ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக சரிவை சந்தித்தன.

இம்மாத தொடக்கத்தில், ஸ்டாண்டார்டு அண்ட் புவர் நிறுவனம், அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டைடு 'ஏஏஏ' என்ற நிலையில் இருந்து 'ஏஏ+' ஆகக் குறைத்தது.

இதனால், சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டு, இன்னும் கூட மீள முடியாமல் தவிக்கின்றன. நேந்நிலையில் நேற்று, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை 'ஏஏ2' என்ற நிலையில் இருந்து ஒரு படி கீழிறக்கி, 'ஏஏ3' ஆகக் குறைத்துள்ளது.

ஜப்பானின் பொருளாதார மதிப்பான 5 லட்சம் கோடி டாலரை விட, அந்நாட்டின் கடன் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

நிலையற்ற அரசியல் சூழல், அடிக்கடி பிரதமர்கள் மாறுதல், சமீபத்திய சுனாமி, அணுஉலைக் கசிவு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பல லட்சம் கோடி நஷ்டம் போன்றவை அந்த நாட்டின் கடன் பெறும் தன்மையை பாதித்துவிட்டதாக இந்த நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடந்த 1998ம் ஆண்டு, 'ஏஏஏ' அந்தஸ்தைப் பெற்றிருந்தது. அந்த நிலையிலிருந்து ஜப்பான் இப்போது மூன்று படிகள் கீழிறங்கியுள்ளது.

சீனாவும் இப்போது ஜப்பானின் நிலையில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

English summary
Moody’s Investors Service cut its rating on Japan’s government debt by one notch to Aa3 on Wednesday, blaming a build-up of debt since the 2009 global recession and revolving-door political leadership that has hampered effective economic strategies.


Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog