புதினா ஜூஸ்
புதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.
செய்முறை
புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மெடிக்கல் ஜூஸ். அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.
---------------------------------------------------------------------------------------------------------------
வெஜிடபிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்கேரட் _100 கிராம், பீட்ரூட்_ 50 கிராம், கோஸ் _50 கிராம், தண்ணீர்_ 2 டம்ளர், இஞ்சி_ 1, புதினா _ கைப்பிடி அளவு.
செய்முறை
கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு சீக்கிரம் மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும். ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க மிக்ஸ்டு வெஜிடபுள் ஜூஸ். ஆரோக்கியம் தானா வரும்.
தேவையான பொருட்கள் கேரட்_ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.
டயட் பெயரைப் படிச்சதும் ஏதோ நோயாளிகள் சாப்பிடுறதுன்னு நெனைக்க வேணாம். ஏன்னா இந்த ஜூஸ் நோய் வராம பாதுகாக்கும் ஜூஸ். புதினா, துளசி ரெண்டுலேயும் இரும்புச்சத்து அதிகம். சளித்தொல்லையை அடித்து விரட்டக் கூடியது. குழந்தைகளுக்கு வாரத்துக்கொருமுறை கொடுத்தால் போதும். கற்பூரவல்லி இலையை ஜூஸ் செய்தோ அல்லது 3 இலை ஒருநாளைக்கு எனச் சாப்பிட்டு வந்தாலே அப்புறம் சளின்னா என்னன்னு கேட்பாங்க.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments