Pages

Subscribe:

Wednesday, September 28, 2011

Types of Wine

அறிமுகம்:
ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது.  பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக 


 மென்மது (பீர்) ஆனது 4 முதல் 5 சதவிகித ஆல்கஹாலை கொண்டிருக்கும். இந்தியாவில் தயாராகும் ஒயின்கள் பொதுவாக 0.5 சதவிகிதத்திற்கும் குறைவான (<0.5%)  ஆல்கஹால் இருப்பதால் குடிப்பவர்களுக்கு போதை ஏறுவதில்லை. ஆனாலும் சில வகை ஒயின்களில்   15 சதவிகித்திற்கும் அதிகமாக ஆல்கஹால் உள்ளது. இத்தகைய ஒயின்கள் அதிக போதையை தரவல்லது. தற்போது ஒயின் உற்பத்தியில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது.

ஒயின் வகைகள்-(Types of Wine)
திராட்சை பழங்களிலிருந்து மட்டும் தயாரிக்கப்படும் ஒயினின் வகைகளை இங்கு காண்போம்.

1.வெள்ளை ஒயின் (White wine)‍‍
வெள்ளை நிற திராட்சையிலிருந்து (அதாவது பச்சை திராட்சை) பெறப்படும் ஒயின். இந்த வகை திராட்சையானது ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சார்டன்னே, ஷென்பிளாங்க், பினாட் கிரிஸ், ரெஸ்லிங் மற்றும் செமிலான் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் வெள்ளை ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
2.சிவப்பு ஒயின் (Red wine): 

கருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையிலிருந்து  பெறப்படும் ஒயின். இந்த வகை  திராட்சையானது அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, சிலி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பார்பெரா, டோல்செட்டோ, கேமி, மால்பெக் மற்றும் பினாட் நோய்ர் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் சிவப்பு ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
3.இளஞ்சிவப்பு ஒயின் (Rose wine):
கருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையின் தோலை நீக்கிய பின் பெறப்படும் ஒயின். இந்த ஒயினை சிவப்பு ஒயினிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கலாம். இந்தவகை ஒயின் சிலவருடங்களுக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
4.ஜொலிக்கும் (அ) வெற்றி ஒயின் (Sparkling wine):
பல்வேறு வகையான திராட்சை இரகங்களிலிருந்து பல்வேறு முறைகளின் மூலமாக ஜொலிக்கும் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒயினை தான் விளையாட்டு வீரர்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தை கொண்டாடும் விதமாக ஒயினை நன்கு குலுக்கி நுரையோடு பீச்சிட்டு அடிப்பார்கள். இந்த ஒயினில் சிறிது வெற்றிடத்துடன் குறிப்பிட்ட அளவு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பதால் குலுக்கும் போது பாட்டிலினுள் ஏற்படும் அழுத்தத்தால்(pressure) மூடியை திறந்தவுடன் ஒயின் மிக வேகமாக நுரையுடன் வெளியேறுகிறது. இந்த ஒயினுக்கு உதாரணமாக உலக அளவில் தெரிந்த ஷாம்பெயின் (Champagne) னை கூறலாம்.

5.இனிப்பு ஒயின் (Dessert wine): 
இனிப்பு ஒயினானது திராட்சை வளரும் இடம், தயாரிக்கும் முறை போன்றவற்றை சார்ந்தது. இவ்வகை ஒயினில் இயற்கையான குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருக்கும். கனடா மற்றும் ஜெர்மனியில்  இனிப்பு ஒயின் வகையை சார்ந்த பனி ஒயின் (அ) ஐஸ் ஒயின் உலகில் மிகவும் பிரபலமானதாகும். கனடாவில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் ஒயினில் 75 சதவிகிதம் ஓன்டாரியோ (Ontario) மாகானத்தை சேர்ந்தது.

6.வலுவூட்டப்பட்ட ஒயின் (Fortified wine):

வலுவூட்டப்பட்ட ஒயினானது மற்ற ஒயின்களை அதிக அளவில் ஆல்கஹாலை கொண்டிருக்கும்.இதற்கு காரணம் இந்த வகை ஒயின் தனிப்பட்ட முறையில் வடிகட்டி பெறப்படுகிறது. வலுவூட்டப்பட்ட ஒயின் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

நன்மைகள்:
சிவப்பு ஒயினில் உள்ள பாலிபீனாலினால் இது இருதய நோய்க்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் சிவப்பு ஒயினை ஆண்கள் மிதமான அளவில் அருந்தினால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog