Pages

Subscribe:

Tuesday, October 25, 2011

Crash testing of cars - Video

பிரிட்டனை சேர்ந்த சேனல் 5 டிவியின் 'ஃபிப்த் கியர்' மோட்டார் ஷோ நிகழ்ச்சிக்காக, உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில் ஃபோர்டு ஃபோகஸ் காரை 190 கிமீ வேகத்தில் மோதி சோதனை நடத்தப்பட்டது.

அதிவேகமாக கார்களை மோதினால் ஏற்படும் விளைவுகளை குறித்து கார் டிரைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட்டை அந்த டிவி நிறுவனம் நடத்தியது.




ஐரோப்பாவை சேர்ந்த யூரோ என்சிஏபி நிறுவனம் பொதுவாக கார்களை 65 கிமீ வேகத்தில் மோதி கிராஷ் டெஸ்ட் செய்வது வழக்கம். ஆனால், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில், அதாவது 190 கிமீ வேகத்தில் காரை மோதச் செய்து கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நடுங்க வைக்கும் இந்த கிராஷ் டெஸ்ட்டுக்காக ஃபோர்டு போகஸ் கார் பயன்படுத்தப்பட்டது. அந்த காரை இயக்குவதற்காக விஞ்ச் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த விஞ்ச் கான்கிரீட் தடுப்புச் சுவரின் மீது காரை இழுத்து வந்து மோதும் வகையில் காருடன் இணைக்கப்பட்டிருந்தது.




இதைத்தொடர்ந்து, அந்த விஞ்சை எஞ்சினியர்கள் ஆன் செய்ததுதான் தாமதம், வெறும் 60 மில்லி செகண்ட்களில் அந்த கார் 190 கிமீ வேகத்தில் சீறி வந்து கான்கிரீட் தடு்ப்புச் சுவர் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது.


காரில் ஆட்கள் இல்லையென்றாலும், இந்த வேகத்தில் மோதினால் கார் என்னாகும் என்பதை நேரில் பார்த்த அவர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்தது உண்மைதான். இதுகுறித்து யூரோ என்சிஏபி அமைப்பின் எஞ்சினியர் எல்லி பியர்சன் கூறுகையில்,"ஃபிப்த் கியர் நிகழ்ச்சிக்காக இந்த கார் டெஸ்ட் நடத்தப்பட்டதை பாராட்டுகிறேன்.


காரை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்களுக்கு இந்த கார் கிராஷ் டெஸ்ட் நிச்சயம் ஒரு பாடமாக அமையும். மேலும், தற்போது மார்க்கெட்டில் அதிவேகமாக செல்லும் கார்கள் எண்ணிக்கை மலிந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

Crash testing of cars is usually conducted at an average speed of 40mph or 65kmph. However British TV show Fifth gear has gone one step further by crash testing a car at 120mph or 190kmph. This test proved to be a shocker with the Ford Focus used in the test getting completely destroyed with even the rear cabin being crumpled to bits.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog