Pages

Subscribe:

Wednesday, December 26, 2012

அறிஞர் அண்ணாவின் - காம குரங்கு

காமக் குரங்கு
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. "டிராக்" கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!

மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் "ஆமாம்" என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.

Thursday, December 13, 2012

காலிப்ளவர் 65

தேவையான பொருட்கள்
காலி ப்ளவர் - 1 பூ (பெரியது)
கடலை மாவு- 1 1/2 ஸ்பூன்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
சோள மாவு -1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 3 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -பொறிக்க
அரைக்க
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
பட்டை,கிராம்பு - தலா 1

செய்முறை
முதலில் பூவை உதிர்த்து மிதமான சூடு தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.பின் அலசினால் பூவில் உள்ள புழுக்கள் போய்விடும்.அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து அவைகளை காலிப்ளவருடன் சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடம் ஊறவிடவும்.பின் அதனுடன் சோளமாவு,கடலை மாவு,அரிசிமாவு,உப்பு,கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.இதை பஜ்ஜி மாவு பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் படி பிசைந்து கொள்ளவும். பின் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்து பரிமாற வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.


Image by FlamingText.com

Tuesday, November 20, 2012

வெண் பொங்கல்

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

Image by FlamingText.com

மைசூர் போண்டா


தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். அத்துடன் மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Image by FlamingText.com

Monday, November 19, 2012

முட்டாளாக்கும் ஒரு TRB

தற்போது மிகவும் பிரபலம் ஆகி வரும் தொலைகாட்சியின் TRB Rating தான். எப்படி எல்லாம் செய்தால் நம் சேனலின் ரேட்டிங் அதிகமாகும், என்று அந்த நிறுவனத்திற்கு தெரிகிறது. இதனால் விளம்பரத்தின் வரி மற்றும் அதை ஒளிபரப்ப அதிகமான தொகையை வசூல் செய்கிறார்கள். இதனால் விளம்பரம் செய்யும் பொருளின் விலை அதிகபடுகிறது. இப்படி இருக்கையில் கூட ஒரு பொருளின் விலை வாசி அதிகமாகிறது. மீடியாக்கள் மக்களுக்கு நல்லதை செய்வதை விட கேட்டதே வேகமாக பரவ செய்கிறார்கள்.

ஒரு கடை அல்லது பொருளை அறிமுகப்படுத்தவும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கவும், சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை, மற்றும் நடிகனை குறிப்பிட்ட காலம் வரை தனது விளம்பரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கையெழுத்து போட்டு கொள்கிறார்கள்.

Thursday, November 8, 2012

மெரினா சுண்டல்

தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
செய்முறை:
1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

Image by FlamingText.com

Wednesday, November 7, 2012

கேரட் சாதம்

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
கேரட் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் துருவிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர், கேரட் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கேரட் வேகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை சாத்துடன் சேர்த்து, கிளறி பரிமாறவும்.
இப்போது சுவையான கேரட் சாதம் ரெடி!!!


Image by FlamingText.com

Friday, November 2, 2012

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?


இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?

                                           இராமர் மிகவும் நேர்மையானவர், கிருஷ்ணர் தந்திரக்காரர்; இதனால் நான் இராமரை ஏற்கும்போதிலும் கிருஷ்ணரை ஏற்பதில்லை. அவ்வப்போது காதில் கேட்கும் இக்கூற்றினை சற்று ஆராயலாம். மக்கள் கூறும் காரணங்கள் கடவுள் என்பவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். நல்லவர் என்றால், உலகின் நீதி நெறிகளுக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்ரீ இராமர் உலக நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார். உதாரணமாக, ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்தார், போரின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினார், பெற்றோர்களை மதித்து நடப்பவராக செயல்பட்டார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரோ உலக நியதிகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, பல்வேறு மனைவியரை ஏற்றுக் கொண்டார், இதர மக்களின் மனைவியருடன் ராஸ லீலை நடத்தினார், குருக்ஷேத்திர போர்க்களத்தில் பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கிருஷ்ணரை ஏற்க முடியவில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

இராமரும் கிருஷ்ணரும் யார்?
                                                  இராமரையும் கிருஷ்ணரையும் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக, இவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியம்.

Tuesday, October 30, 2012

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?



            நவீன கால மக்களிடையே இராமாயணத்தைப் பற்றிப் பேசும்போது எழும் பொதுவான கேள்வி: வாலிக்கும் இராமருக்கும் எந்தப் பகையும் இல்லாத பட்சத்தில், இராமர் வாலியை வதம் செய்தது ஏன்? அதுவும் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வதம் செய்ய காரணம் என்ன? இவற்றை இங்கு சற்று அலசிப் பார்ப்போம்.

            இக்கேள்விகளை எழுப்புவோரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. வேத வரலாற்றை நம்புவோர்
2. வேத வரலாற்றை நம்பாதோர்.

ஸ்ரீ இராமர் பாவமற்றவர், கறையற்றவர், குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புவோர் அறிவர்; இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இதுபோன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க முடிவதில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், இராமர் நல்லவர் அல்ல" என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.
 கடவுள்" என்பதன் அடிப்படைப் பொருளை ஆராய்ந்தோ மெனில், அவர் பூரணமானவர், அனைத்து சக்திகளும் கொண்டவர், அனைவரது நலனையும் விரும்புபவர், என்றும் நல்லவர் போன்ற தகவல்களைப் பெறலாம். அவர் என்றும் நல்லவர் என்னும் பட்சத்தில், இராமர் நல்லவர் அல்ல" என்னும் முடிவு நிச்சயம் முட்டாள்தனமானதே. இராமரின் மீதான இக்குற்றச்சாட்டிற்கு எவ்வாறு தீர்வு காண்பது?

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை:
    உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
    பெரிய வெங்காயம் - இரண்டு
    பச்சைமிளகாய் - இரண்டு
    இஞ்சி - ஒரு சிறியத்துண்டு
    பூண்டு - இரண்டு பற்கள்
    மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்தூள் - அரைத்தேக்கரண்டி
    உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
    கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    கடலை மாவு - இரண்டு கோப்பை
    ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - இரண்டு கோப்பை
    கொத்தமல்லி - ஒரு பிடி

   உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
   வெங்காயத்தை பொடியாக நறுக்கி கிழங்குடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.
   இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  
   சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பை,   கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
  
   பிறகு அரைத்த கலவையைப்போட்டு வதக்கி அரைதேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி உப்புத்தூளைப் போட்டு கலக்கி கிழங்குக் கலவையுடன் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

    பிறகு கடலைமாவில் ஆப்பச்சோடா மற்றும் மீதியுள்ள உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

    பிறகு அடுப்பில் சூடான எண்ணெய் இருந்தால் அதில் ஒரு மேசைக்கரண்டியை எடுத்து மாவில் ஊற்றி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    பிறகு தயாரித்துள்ள கிழங்கு கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டையாக எடுத்து மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு சிவக்க   பொரித்து எடுக்கவும்

Image by FlamingText.com

Friday, October 19, 2012

பிரட் ஜாமூன்

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 3
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட் வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!

குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.


Image by FlamingText.com

Friday, October 12, 2012

எம். ஆர் ராதாவின் சீரிய சிந்தனைகள்












Image by FlamingText.com

இடைவேளையில் தேனீர் கொஞ்சம்

வகை வகையாய்
உணவு தயாரித்துவிட்டுப்
பழைய சாதம் தின்று
படுத்துக் கொள்கிறாள்
வேலைக்காரி..!




திருமணம் !
தாயார் வீட்டு
தனிச்சிறையிலிருந்து
மாமியார் வீட்டு
மத்திய சிறைக்கு மாற்றபடுவது!


கண் பார்வை ரொம்பக்
குறிஞ்சிப் போச்சி டாக்டர்.!
யாரைப் பார்த்தாலும் முகம்
சரியாத் தெரியல.
  "அப்படின்னாக் கழுத்து
வரைக்கும்தான் சரியாத் தெரியுதா?"




Image by FlamingText.com

தேடல்

காற்றில் கலந்தேன்!
காகிதம் நானானேன்.

கட்டி அணைக்காமல்
கிழித்து எறிந்தாயே!

அங்கும் இங்கும் சிதறி கிடந்தேன்.
அள்ளிக் கொள்ள கைகள் இல்லை.

பறந்து பறந்து தொலைந்து போனேன்
முகவரி இன்றி ஆனேன்!


Image by FlamingText.com

Monday, October 8, 2012

ஏழையா? பெருமைப்படு!

    பத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்
மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், ""உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர். இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


Image by FlamingText.com

மலை உச்சியில் சவ பெட்டிகள்:

மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்: ஈஸியாக ஆத்மா சாந்தி அடையுமாம்!


       இறந்தவர்களின் உடலைப் பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலை உச்சியில் உடலை விபத்தால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சீன, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளில் சிலபகுதிகளில் இறந்தவர்களின் உடலை ஒரு பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

   இந்த பழக்கம் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இறந்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்வதாகக் கூறபடுகிறது. அனால் சீனாவிலேயே இந்த வழக்கம் அதிகம் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்முறை வழக்கத்திலிருந்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

         "இது புனிதமான செயல். மற்ற மக்களிடம் இருந்து விலக்கி எடுத்துசென்று, மலை உச்சியில் வைப்பதால் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்குகின்றனர். இறந்த பிறகு, அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது" என்று அவர்கள் நம்புவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Image by FlamingText.com

Monday, October 1, 2012

மிட்டாய் கதை - உடைகள்

உடைகள்

முன்பு ஒருநாள், அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துகொண்டன.

'நாம் சேர்ந்து குளிப்போமா?' என்று அழகு கேட்க, அவலட்சணம் ஒப்புக்கொண்டது. இரண்டும், உடைகளை களைத்துவிட்டு  கடலில் ஆனந்தமாக நீந்திக்குளித்தன.

சிறுது நேரம் கழித்து, குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்துகொண்டு தா வழியே சென்றுவிட்டது.

பின்னர், குளித்துத் திரும்பிய அழகு, தா உடைகளைக் காணாமல் தவித்துப்போனது. ஆடையில்லாமல் தெருவில் செல்வதற்கு அதற்குக் கூச்சமாக இருந்தது. ஆகவே, வேறுவழியில்லாமல், அவலட்சனத்தின் உடைகளை அணிந்துக் கொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை, உலகத்தார் பலரும், ஆடைகளைவைத்து, அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளைப் பார்த்து முகம் சுளித்து, அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் ஆடைகளில் மயங்கி, அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 

Image by FlamingText.com

தியானம் ஐந்து படிகள் -2

மகா மந்திர உச்சாடனம் செய்தல்

இந்த முறை உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கின்றது.


இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து கைகளில் சின் (chin) முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக உங்களின் மனம் பேசிக்கொண்டே இருகின்றது. வெளியே நாம் யாரோடும் பேசாமல் இருந்தாலும், உங்களுக்குள் எதாவது எதாவது ஒரு செயல் ஓடிகொண்டே இருக்கும். 

பொதுவாக மக்களுக்கு எந்த வித என்ன ஓட்டமும் இல்லாமல் அமர்ந்திருபதற்கு கஷ்டமான செயலாக இருக்கும். நீங்கள் தியானம் என்ற செயலில் இறங்கும் பொது, மனம் எதிர்ப்பு தெரிவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த நேரத்தில்தான் நிறைய மக்கள் தியானத்தை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் உற்சாகம் இழந்து தியானமெல்லாம் நமக்கு சரிவராது என்று நினைத்து விடுகிறார்கள்.

ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் தான் முதலில் கிடைக்கும். நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடந்து அமிர்தத்தை எடுப்பதாகப் புராணத்தில் ஒரு  கதை உள்ளது. அனால் கடலைக் கடந்த பிறகு முதலில் கொடிய விஷம் தோன்றியது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருந்தது. அதற்கடுத்து நிறைய பொருட்கள் வெளிவந்த பிறகே முடிவில் அமிர்தம் வந்தது. இந்தக்கதை தியானத்தின் ஒரு முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.


Image by FlamingText.com

Friday, September 28, 2012

மிட்டாய் கதை - முத்து

முத்து 

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது - 'ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே.'

'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.

எனக்குள் எதோ ஒரு கனமான உருண்டை பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.

இதைக் கேட்டதும், இரண்டாவது சிப்பிக்குப் பயங்கர சந்தோஷம். பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆஹா! கடவுளுக்கு நன்றி, எனக்கு அப்படி எந்த வலியையும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்!'

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது - உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், வலியை தாங்க விரும்பாத நீ, எப்போதும் எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்கவேண்டியது தான். ஆனால், இப்போது உன் நண்பனைச் சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அவனுக்குப் பெருமை தேடித்தரும்.
*********


Image by FlamingText.com

Search This Blog