மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்: ஈஸியாக ஆத்மா சாந்தி அடையுமாம்!
இறந்தவர்களின் உடலைப் பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலை உச்சியில் உடலை விபத்தால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சீன, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளில் சிலபகுதிகளில் இறந்தவர்களின் உடலை ஒரு பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த பழக்கம் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இறந்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்வதாகக் கூறபடுகிறது. அனால் சீனாவிலேயே இந்த வழக்கம் அதிகம் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்முறை வழக்கத்திலிருந்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
"இது புனிதமான செயல். மற்ற மக்களிடம் இருந்து விலக்கி எடுத்துசென்று, மலை உச்சியில் வைப்பதால் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்குகின்றனர். இறந்த பிறகு, அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது" என்று அவர்கள் நம்புவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments