நவீன கால மக்களிடையே இராமாயணத்தைப் பற்றிப் பேசும்போது எழும் பொதுவான கேள்வி: வாலிக்கும் இராமருக்கும் எந்தப் பகையும் இல்லாத பட்சத்தில், இராமர் வாலியை வதம் செய்தது ஏன்? அதுவும் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வதம் செய்ய காரணம் என்ன? இவற்றை இங்கு சற்று அலசிப் பார்ப்போம்.
இக்கேள்விகளை எழுப்புவோரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. வேத வரலாற்றை நம்புவோர்
2. வேத வரலாற்றை நம்பாதோர்.
ஸ்ரீ இராமர்
பாவமற்றவர், கறையற்றவர், குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புவோர்
அறிவர்; இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத காரணத்தினால், அவர்களால்
இதுபோன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க முடிவதில்லை.
இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், இராமர்
நல்லவர் அல்ல" என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.
கடவுள்" என்பதன் அடிப்படைப் பொருளை ஆராய்ந்தோ மெனில், அவர் பூரணமானவர்,
அனைத்து சக்திகளும் கொண்டவர், அனைவரது நலனையும் விரும்புபவர், என்றும்
நல்லவர் போன்ற தகவல்களைப் பெறலாம். அவர் என்றும் நல்லவர் என்னும்
பட்சத்தில், இராமர் நல்லவர் அல்ல" என்னும் முடிவு நிச்சயம்
முட்டாள்தனமானதே. இராமரின் மீதான இக்குற்றச்சாட்டிற்கு எவ்வாறு தீர்வு
காண்பது?