Pages

Subscribe:

Monday, May 21, 2012

Panneer Butter - பன்னீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்
பச்சை பட்டாணி - அரை கப்
பட்டர் - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பால் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சுடு தண்ணீரில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும்.

பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்..

பின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பின்னர் வேக வைத்த பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி!!!
Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog