Pages

Subscribe:

Monday, July 30, 2012

முட்டை சாப்ஸ்

ஈவினிங் நேரங்களில், மழை பெய்யும் பொழுது, காரசாரமாகவும், கொஞ்சம் மொறுமொறுவென்றும் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். அந்த வகையான, உடலுக்கு சத்துக்களை வழங்கும் வகையில் இருப்பதுமான முட்டையை வைத்து ஒரு ரெசிபி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு முட்டை சாப்ஸ் தான் சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
கார்ன் ப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1/2 கட்டு
பிரட் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

கருமையான முடி

கூந்தல் கருமை நிறத்தை இழப்பதற்கு, கூந்தலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காததே ஆகும். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு முறையான கூந்தல் பராமரிப்பும் இல்லாததாகும். அழகாக இருக்க, எவ்வாறு முகத்திற்கு அத்தனை மேக்கப் செய்கிறோம். அந்த அழகு முகத்தில் மட்டும் காணப்படுவதில்லை, கூந்தலிலும் தான் இருக்கிறது. அத்தகைய கூந்தல் நன்கு கருமையாக வளர்வதற்கு எங்கும் செல்ல வேண்டாம், அதற்கு மருந்தான எண்ணெய் வீட்டிலேயே இருக்கிறது.

* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.

* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.

* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும்.



Image by FlamingText.com

Wednesday, July 25, 2012

அழகோ அழகு


மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். 

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல்,  பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற
தேன்        - 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு    - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்    - 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான்.
எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு
தேன்     - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு  - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.
எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி  குளித்து வந்தால்  தோல் சுருக்கங்கள் மாறும்.  மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும்.

அழகான பாதங்களுக்கு

பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர்.
எலுமிச்சை சாறு     - 20 மிலி
ஆலிவ் எண்ணெய்    - 2 ஸ்பூன்
பால்            - 50 மிலி
ஏலக்காய்        - 1 கிராம்
பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

அழகான உதடுகளுக்

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.
வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால்  வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.



Image by FlamingText.com

கனவு

கனவுகளை கண் திறந்து
பார்க்கிறேன்
கனவுலக இருட்டில்.!

தப்பி செல்ல பார்க்கிறேன்
தவிப்பதை யார் உணர்வார்?

கண் திறந்தும் மூடவில்லை - கனவு
என்னை விட்டு போக மறுக்கிறது.
அவள் வந்து போன நிமிடம் முதல்.

 


கற்பனை

நாளை
என் வானில்
நிலவும் நீ தான்.

கையில் - என்
பிடிவாத
பிடிப்பும் நீ தான்.!

என் தோலில்
குடியேறும்
பொன்மாலை நீ தான்.!

இரவினில்
கனவினை தொலைத்திடும்
தொல்லை நீ தானடி.!

கண்ணில்
உடைந்திடும் கண்ணீர்.
கொஞ்சிடும் கன்னம் நீ தானடி.!

என் தோட்டத்தில் 
இல்லாதது 
உன் வாசத்தில் 
நான் கண்டேனடி..

என் இரவெல்லாம் 
காணாத நிழல் ஒன்று 
கண்டேனடி - என்னோடு நீ.!

Monday, July 23, 2012

காதல்: ஒரு வித்தியாசமான விளக்கம் - சத்குரு



காதல்: ஒரு வித்தியாசமான விளக்கம் - சத்குரு

 





'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

Sunday, July 22, 2012

ஓஷோ கதை - சிரிக்க சிந்திக்க


நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி “ உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்
-----------------------------------------------------------------------------

மறுமணம்

ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

தழுவல் : ஓஷோ
Image by FlamingText.com

ஜோக்ஸ்

"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."
*******************

டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.

நிஜமாவா?

ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
*******************

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
*******************

நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
*******************




Image by FlamingText.com

பாட்டி கதை - யார் முட்டாள்

ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர். 

அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, ""இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?'' என்று கேட்பர். 
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது. 

""இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,'' என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான். 

சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, ""நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,'' என்றான். 
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான். 

""ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!'' என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான். 
""இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?'' என்று சொன்னான் வீட்டுக்காரன். 

நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, ""இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,'' என்றார் அவர். 
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான். 

""இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,'' என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர். 
""ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,'' என்று அறிவுரை சொன்னார் நண்பர். 

""ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது. 

""நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,'' என்றான் முட்டாள். 
இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.
Image by FlamingText.com

ஜென் கதைகள் – மனவுறுதி

 ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட  ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.
துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.
தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.
‘அருமை’ என்று பாராட்டிய துறவி, ‘என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்’ என்றார்.
அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.
ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.
தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.
அடித்து விட்டு, ‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று  நின்று கொண்டார்.
இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.
அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.

***மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
~ பாரதியார் ~

Image by FlamingText.com

ஜென் கதைகள் – பேராசை

ஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.
ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான். உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறிவிட்டான்.
இன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரிது என்று நினைத்தான். உடனே அரசாங்க அதிகாரியாக மாறிவிட்டான்.
வெளியில் அதிகாரி நடந்து கொண்டிருக்கும் போது, சூரியனின் தகிப்பு தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான். சூரியனாகவே மாறிவிட்டான்.
சூரியன் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூழ்ந்ததைக் கண்டான். உடனே மேகத்தால் சூரியனை வெல்ல முடிகிறதே. நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தான். உடனே மேகமாய் மாறிவிட்டான்.
அந்த மேகத்தை வழிநடத்தும் காற்றைக் கண்டதும், காற்றுத்தானே பலம் வாய்ந்தது. நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தான். காற்றாக மாறினான்.
காற்று பயணிக்கும்போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. மலைதான் மிகவும் பலம் வாய்ந்தது எனவே மலையாக மாற வேண்டும் என்று நினைத்தான். அதன்படியே மலையாகவும் மாறிவிட்டான்.
ஒரு நாள் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. குனிந்து என்னவென்று பார்த்தான் அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளிதான். எனவே நான் அவனாக மாற வேண்டும் என்று நினைத்தான். பழையபடி கல்லுடைக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டான்.


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.


Image by FlamingText.com

புனித மனிதன்.- ஜென் கதைகள்

அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது.அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்'சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.'நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு'மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி 'நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்' என்று கேட்டார்.'நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்' என்று சொன்னார்.

மேலும்'நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும்  விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார். 


Image by FlamingText.com

Friday, July 20, 2012

Only for 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

உற்சாகப் பெருங்காயம்
சாம்பாரோ, ரசமோ பெருங்காயம் இன்றி சமையல் இல்லை. வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம் என்கின்றனர் நிபுணர்கள். சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள் உங்களின் சிக்கலை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள்.  

ஆல மரம் ஒரு இந்திய அதிசயம்

அலெக்ஸண்டரை வியப்பில் ஆழ்த்திய மரம்
உபநிஷத ரிஷிகள், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம் இந்தியாவின் தேசிய மரம் தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம் சால்மான் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்
அங்கோர் வட் கோவிலுக்கு பெயர் கொடுத்த மரம் பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரம் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம்
சிவன் உபதேசம் செய்த மரம் கண்ணன் இலையில் மிதந்த மரம்
கின்னஸ் நூலில் புகழ் அடைந்த மரம் அமெரிக்கா வரை சென்ற மரம்
வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் மரம் தமிழ் பழமொழிகளில் இடம்பெற்ற மரம் தமிழ் நாட்டுக் கோவில்கள் ஆறில் தல விருட்சம் ஆன மரம்

உலகம் புகழும் இந்த இந்திய அதிசயம் உபநிஷத ரிஷிகள காலம் முதல் இன்று திரைப் படப் பாடல்கள் வரை மனிதனின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதைக் கேட்கிறோம்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).
தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வடோதரா, குஜராத்) ஆல மரம் மணம் கமழும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர்.

அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற சம்ஸ்கிருத சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள்.
ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.
பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு சர்மன் இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறான். மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே என்பான். பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம் என்பான்.

எப்படி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டிடங்களுக்கு அடியில் வேரை நுழைத்து ஆலமரம் அந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறதோ அது போல மன்னன் அஜன் மனதில் கவலைகள் நுழைந்தன என்று கவிபாடுவான் உலகப் புகழ் காளிதாசன்.
ஆலின் கீழ் அமர்ந்து பேசா மூர்த்தியாக சிவ பெருமான், தட்சிணாமுர்த்தி வடிவில், மவுன உபதேசம் செய்த மரம். கண்ணன் ஆலின் இலையில் மிதந்து பெருமை ஏற்றிய மரமும் இதுதான். ஆதிகாலத்தில் கோவில்கள் அனைத்தும் மரத்தின் கீழ்தான் இருந்தன. குறிப்பாக ஆலமரத்தின் கீழ் கோவில் கட்டினர். ஊர் மன்றம் நடத்தினர். விழாக்கள் நடத்தினர்.

அலெக்ஸாண்டர் இந்த மரத்தைக் கண்டு வியந்ததையும் 7000 படை வீரர்களுடன் முகாம் இட்டதையும் கிரேக்க நாட்டு ஆசிரியர்கள நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள்.

சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்ற இளைஞனுக்கு அவன் தந்தை பல விஞ்ஞான சோதனைகள் மூலம் இறை ஞானம் அளிக்கிறார். அதில் ஒரு செய்முறைப் பயிற்சி ஆல மரம் தொடர்புடையது.

“ மகனே அதோ அந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து வா.
“இதோ, கொண்டுவந்துவிட்டேன், தந்தையே
“மகனே அதைப் பிரித்து உள்ளே பார்,
தந்தையே, மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன
மகனே அதில் ஒருவிதையை எடுத்து பிரித்துப் பார்.
தந்தையே, பிரித்துவிட்டேன்.ஒன்றுமே தெரியவில்லையே.
பார்த்தாயா, ஒன்றுமே கண்ணுக்குக் தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகி இருக்கிறது. அதுதான் பிரம்மம். அது வேறு யாரும் இல்லை. நீயேதான்.(உன்னையே நீ அறிவாய்).
ஆலமரக்குச்சிகள் பல் தேய்க்க உதவும். அதன் பட்டைகளும், பாலும் பழமும் மருதுவப் பயன் கொண்டவை.

அஸ்வத்தாமவுக்கு பாண்டவர்களைப் படுகொலை செய்யும் யோசனை தோன்றியதும் ஆல மரத்துகடியில்தான். இரவு நேரத்தில் காகங்கள் ஆந்தைகளைத் தாக்கியதைப் பார்த்தவுடன் அதே போல இரவு நேரத்தில் பாண்டவர்கள் முகாமுக்குள் சென்று படுகொலைகள் செய்கிறான்.

அதே ஆலமரத்தை மும்மூர்த்திகளின் வடிவாக இந்துக்கள் வணங்குவர். பிரம்ம, விஷ்ணு, சிவன் அந்த மரத்தின் வேர், பட்டை, கிளைகளில் இருப்பதாக ஐதீகம்.

பனியா என்ற சொல்லும், பானியன் ட்ரீ என்ற சொல்லும் ஆங்கில அகராதியில் உண்டு. அந்தக் காலத்தில் வியாபாரிகள் (பனியாக்கள்) இம்மரத்தின் கீழ் இருந்து வணிகம் செய்ததை வைத்து மரத்துக்கு பானியன் ட்ரீBanyan Tree என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.

தாவர இயல் ரீதியில் அரச மரம் (அஸ்வத்த), அத்தி மரம், ஆல மரம், உடும்பரா ஆகியன மோரேஸி Moraceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன. இவை அனைத்தும் பைகஸ் Ficus என்னும் பெயருடன் துவங்கும். இந்துக்கள் இதை அந்தக் காலத்திலேயெ அறிவர். இவை அனைத்திலும் இறைவன் உறைவதை அறிந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஏற்றிவிட்டனர்.(ந்யக்ரோத=ஆலமரம், அஸ்வத்த=அரச மரம், உடும்பர= அத்தி வகை, யமனுக்குரிய மரம், எமனின் மற்றொரு பெயர் அவுதும்பரன்)

உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள்

வெளிநாட்டினர் இந்தமரங்களை அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் நட்டு அவை மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டன. அமெரிக்காவில் ஹவாய் திவிலும், ப்ளோரிடா மநிலத்திலும் ஆல மரங்கள் உண்டு.

ஆயினும் சென்னை அடையாறு பிரம்ம ஞான சபை வளாக ஆலமரம், ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம், உலகப் புகழ் கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம், குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்-- நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளருகின்றன. ஒரே நேரத்தில் 3000 முதல் 10000 பேர் வரை இவைகளின் கீழ் நிழலில் தங்கி இளைப்பாறலாம். இந்த மரங்களை அழியாமல் காப்பதும் போற்றி வளர்ப்பதும் நம் கடமை.

பஞ்சாபில் கட்டி சோலன் கிராமத்தில் இருக்கும் மாபெரும் ஆலமரத்தின் குச்சிகளை அடுப்பெரிக்க விறகுக்காக கூட மக்கள் எடுக்கமாட்டார்கள். அதனால் குடும்பத்துக்கே ஆபத்துவரும் என்று பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பறவைகளை ஆனந்தப் படுத்துமால மரத்தை துன்புறுத்த யாருக்கு மனம் வரும்?


“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னக் கிருக்க நிழலாகும்மே” --(வெற்றிவேர்க்கை)

பொருள்: சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்..

அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் மரங்கள் (கோளி ஆலம்) என்று சொல்லி இவைகளையும் உவமைக்குப் பயன்படுத்தினர் தமிழ் புலவர்கள்.

நாலடியார் என்னும் அற நூல் பல இடங்களில் ஆல மர உதாரணத்தைக் காட்டுகிறது. ஆலம் விதை சிறிதானாலும் மரம் பெரிதாவது போல ஒருவனின் அறச் செயல் பயன் தரும். இன்னும் ஒரு இடத்தில் ஆலமரத்தைக் கறையான்கள் அரித்தாலும் அதன் விழுதுகள் அதைத் தாங்கி நிற்பது போல தந்தையை மகன் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்.
மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.


Image by FlamingText.com

ஈசி சிக்கன் சால்னா

 


  சிக்கன் - அரை கிலோ
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2Spoon
  கரம் மசாலா - அரைடீஸ்பூன்
  பெரிய வெங்காயம் - 2
  பெரிய தக்காளி - 2
  தயிர் - 1டேபிள்ஸ்பூன்
  மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
  மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
  பச்சை மிள்காய் -2
  மல்லி புதினா- சிறிது
  எண்ணெய் - 3 spoon
தேங்காய் துருவல் - 4 Spoon 
முந்திரி - 4
உப்பு - தேவைக்கு.

ஹாட் சிக்கன் - Hot Chicken

ஹாட் சிக்கன்

    கோழி - அரை கிலோ
    வெங்காயம் - இரண்டு
    அரைக்க:
    இஞ்சி - சிறிதளவு
    பூண்டு - 5 பல்
    வர மிளகாய் - 6
    சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
    மிளகு - ஒரு மேசைக்கரண்டி
    தாளிக்க :
    பட்டை
    கிராம்பு
    கறிவேப்பிலை

1.இஞ்சி, பூண்டு விழுதை அரைத்து தனியாக வைக்கவும். அதே போல் வரமிளகாய், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.
2.வரமிளகாய் விழுதை சிக்கனுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து ஊற வைக்கவும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு அதன் பின் வெங்காயம் போட்டு வதக்கவும்
4.பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5.அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

6.சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்த பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

7.சுவையான சிக்கன் ரெடி. வரமிளகாய் கலவை சிக்கனுடன் நன்றாக ஊற வேண்டும், அப்போது தான் காரம் பிடிக்கும். கார விரும்பிகளுக்கு சப்பு கொட்ட வைக்கும் டிஷ் இது!!!




Image by FlamingText.com

Search This Blog