சிக்கன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2Spoon
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 2
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
பச்சை மிள்காய் -2
மல்லி புதினா- சிறிது
எண்ணெய் - 3 spoon
தேங்காய் துருவல் - 4 Spoon
முந்திரி - 4
உப்பு - தேவைக்கு.
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டவும்.
வடிகட்டிய சிக்கனோடு,சிறிது உப்பு,மஞ்சள் தூள்,தயிர் கலந்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா பொடியாக நறுக்கவும்.தேங்காய் துருவல்,முந்திரியை நைஸாக அரைத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்,சிவந்தவுடன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.மல்லி,புதினா,பச்சை மிள்காய் சேர்க்கவும்,பின் தக்காளி சேர்த்து,சிறிது உப்பு சேர்த்து மூடி மசிய விடவும்.
தக்காளி மசிந்து கூட்டு போல் ஆனவுடன் ரெடி செய்த சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி மூடி விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.சிக்கனில் ஊறும் தண்ணீரிலேயே வேக வேண்டும்.மூடி போட்டு மீடியம் நெருப்பில் 10 நிமிடம் வேக விடவும்.திறந்து தண்ணீர் சுண்டி வந்தால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி சிக்கன் திரும்ப 5 நிமிடம் வேக விடவும்.
பின்பு அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கொதி வரவும் மூடி போட்டு தீயை மிகவும் குறைத்து 10 நிமிடம் வைக்கவும்.எண்ணெய் தெளிந்து,சிக்கன் பஞ்சு போல் வெந்து மேல் சிவப்பாய் சால்னா பார்க்க அழகாய் இருக்கும்.சுவையான ஈசி சிக்கன் சால்னா ரெடி.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments