Pages

Subscribe:

Wednesday, July 25, 2012

அழகோ அழகு


மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். 

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல்,  பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற
தேன்        - 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு    - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்    - 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான்.
எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு
தேன்     - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு  - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.
எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி  குளித்து வந்தால்  தோல் சுருக்கங்கள் மாறும்.  மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும்.

அழகான பாதங்களுக்கு

பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர்.
எலுமிச்சை சாறு     - 20 மிலி
ஆலிவ் எண்ணெய்    - 2 ஸ்பூன்
பால்            - 50 மிலி
ஏலக்காய்        - 1 கிராம்
பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

அழகான உதடுகளுக்

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.
வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால்  வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog