Pages

Subscribe:

Friday, July 20, 2012

Only for 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

உற்சாகப் பெருங்காயம்
சாம்பாரோ, ரசமோ பெருங்காயம் இன்றி சமையல் இல்லை. வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம் என்கின்றனர் நிபுணர்கள். சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள் உங்களின் சிக்கலை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள்.  

 
முறுக்கேற்றும் மிளகு
பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் கொண்டது. நான்கைந்து மிளகை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்குமாம்.
இஞ்சி, பூண்டு
இன்றைக்கு சமையலில் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்காதவர்களே இருக்கமாட்டார்கள். இவற்றிர்க்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் அதிகம் உண்டு. அதன் மகத்துவத்தை அறிந்துதான் எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் அதிக அளவில் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். உணவை எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாமாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஓமம், சாதிக்காய்
உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் "தைமால்" என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
லவங்கம், ஏலக்காய்
லட்டு, மட்டன், சிக்கன் மற்றும் அசைவ உணவுகளில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். இது மனிதர்களின் செக்ஸ் உணர்வை தூண்டும் பொருள் என்று 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத்தைப் பற்றி எழுதியிருந்தார்.
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் செக்ஸ் குறைபாடு நீங்குமாம். ஆனால் ஏலக்காயை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கடலை உருண்டை
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை தேவைக்கு ஏற்ப முறையாக சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய வாழ்க்கையில் தடையின்றி மதமேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.


Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog