மனிதன் பிறந்ததில் இருந்து மரணம் அடையும் வரையில் கடைப் பிடிக்கும் அர்த்தமில்லாத சடங்கு களைச் சாடியவர் பெரியார் அதே நேரத்தில், பெரியாரைப் பிடிக்காத வர்கள் ஏராளமானோர் இருந்தனர். இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க இயலாது. அவர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.
பெரியார் இந்துமதப் பழக்க வழக்கங்களை மட்டும் விமர்சிக் கின்றார். மற்ற மதங்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை என்பதாகும். இந்துமதத்தில் உள்ள எல்லா மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து முழங்கிய பெரியார், இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் கடைப்பிடிக்கும் கோஷா முறையைக் கண்டித்துள் ளார். அதனைக் கொடுமையான பழக்கம் என்று வர்ணித்திருக்கிறார்.
1947 நவம்பரில் விடுதலை இதழில் கோஷாப் பழக்கம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியவர் தந்தை பெரியார். அதில், அடுத்த முக்கியமான பிரச்சினை முஸ்லீம் பெண்களிடையே திணிக்கப் பட்டிருக்கும் கோஷா முறை. இதனால் எத்தனை பேகம் அமிரு தீன்கள், பேகம் ஷா நவாஸ்கர், அருணா அஸப் அலிகள் குடத்தி லிட்ட விளக்குகளைப் போலக் கிடக்கிறார்கள் என்பதை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்தால், முஸ்லீம் அறிஞர்கள் இந்தத் தீய முறையை ஒழிப்பதற்குத் தாமதிக்க மாட்டார்கள்.
இன்று முஸ்லீம் பெண்கள் ஓரளவு கல்வி கற்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒருசிலர் உயர்தரக் கல்விகளைப் பயின்று வருகின்றனர். முஸ்லீம் பெண்களி டையே ஆயிரக்கணக்கான பெண் டாக்டர்கள், ஆசிரியைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் தோன்றிடல் வேண்டும். அப்படியானால் பெண்கள் முகமூடியிட்டு அடக்கி வைத்தி ருப்பது நிறுத்தப்பட வேண்டும்
இப்படி எழுதியதற்காக இஸ்லாமிய சமூகத்தில் யாரும் பெரியாரை கோபித்துக் கொள்ளவில்லை. அதும ட்டுமல்ல, இந்த தலையங்கத்தை இஸ்லாமியப் பெண் மணிகள் படித்திருந்தால், வெளிப்படையாக இல்லா விட்டாலும் மனதிற்குள் மகிழ்ந்து, வரவேற்றிருப்பர் என்றே சொல்லலாம்.
இந்த முகமூடிப் பழக்கம் சில இஸ்லாமிய தேசங்களில் அன்றே அகற்றப்ட்டிருந்ததை பெரியார் சுட்டிக்காட்டத் தவறவில்லை. துருக்கி புரட்சி வீரரான கமால் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லாவும் முஸ்லீம் பெண்களுக்கு விடுதலை கொடுத்த மாவீரர்கள். கமால் பாட்சா கோஷாவை ஒழித்தது மட்டுமல்ல. பெண்கள் கையில் துப்பாக்கியைத் தந்தவர். பெண் ராணுவத்தை நிறுவிய ஒப்பற்ற சீர்திருத்த வீரர்
இப்படி எழுதிய பெரியார், மதத்தின் அடிப்படையில் கோஷாப் போடப்படுகிறது என்றால், துருக்கி மட்டும் அதை ஒழித்தது எப்படி? துருக்கி இஸ்லாம் மதம் உள்ள நாடுதானே என்றும் கேட்டார். எனவே இதற்கு மதம் மூல காரணமல்ல.... மதத்தின் பெயரால் ஆணாதிக்க சக்திகள் ஏற்படுத்திய அர்த்தமற்ற காரியம் என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் அன்று உணரவே செய்தனர். நடைமுறையில் கோஷா முறைப் பழக்கத்தால் ஏற்படு கிற விளைவுகளையும் எடுத்துச் சொல்லி இருக்கின்றார் பெரியார்.
கோஷா முறையினால் சூரிய வெளிச்சம், நல்ல காற்று ஆகியன இல்லாததால் நோய்கள் எளிதில் பரவுவதாக எல்லா டாக்டர்களும் கூறிவிட்டனர். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும் காற்றையும் மனிதகுலத்தின் சிறந்த பகுதியாகிய தாய்க்குலத்திற்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம் என்பதை ஆண்கள் ஆலோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்.
இந்தஅக்கினி நட்சத்திர வெயில் காலத்தை நினைத்துப் பாருங்கள். இஸ்லாமியப் பெண்கள் கறுப்புத் துணியை உடல் முழுக்கப் போட்டு வெளியே வருகிறபோது ஏற்படும் சிரமங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பேருந்துகளில் பயணிக்கும்போது, ஆண்களால் நடத்தப்படும் சீண்டல்களை தவிர்க்கலாம் என்று காரணம் கண்டுபிடித்தோரும் உண்டு. சேட்டை செய்யும் ஆண்களை அடையாளம் கண்டு தண்டனை தரவேண்டும். அதைச் செய்யாமல் பெண்களை இந்த உடை உடுத்தச்சொல்வது அவர்களுக்குத் தருகிற அநியாயத் தண்டனை ஆகும்.
கோஷா முறை குறித்து பெரியார் மேலும் எழுதினார்.
கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லீம் ஆண்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அப்படி யாரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லீம் வாலிபர்கள் கூற வேண்டியது, தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டுப் பாருங்கள்.
இவ்வாறு இஸ்லாமியப் பெண்களை பர்தாப் போடச் சொல்லி வலியுறுத்துவது, அநியாயம் என்பதில் பெரியார் உறுதியாக நின்றார் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.
- (ஜனசக்தி 12.5.2011 பக். 8
பெரியார் சொன்னதற்கும், இன்றைய நடைமுறை உண்மைகளுக்கும் உள்ள இடைவெளி தான் பெரியாரின் பகுத்தறிவு.

0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments