தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூளைப் போட்டு , அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சை மிளகாயை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஊறவைத்துள்ள சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, பிசைந்து கொண்டு, அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரை மணிநேரமோ அல்லது 10 நிமிடமோ ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் போட்டு வதக்கவும். பின் அந்த தேங்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதில் பிசைந்து வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு கலக்கி, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதில் மல்லித்தூள், மிளகு மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கிளறி, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, மறுபடியும் 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.
இறுதியாக தயிரை ஊற்றி, வாணலியை மூடி 5-7 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments