Pages

Subscribe:

Tuesday, September 18, 2012

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது!

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது! - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.

இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை அவப்பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அண்மைய நாட்களில் கூட சிங்களத்தின் அடிமையாக விளங்கிவரும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் நடத்திக்காட்டிய அற்புத காட்சிப்படுத்தல்களும் முன்நாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களை கொன்றது புலிகள் தான் என்றும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் உப்புச்சப்பற்று வெளிவந்திருந்தது.

தற்போது அதனையும் இத்தனை ஆண்டுகால மர்ம முடிச்சுக்களையும் அவிழ்க்கும் முயற்சியில் ராஜீவ் சர்மா என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்" என்ற புத்தகம் உதவுகின்றது. இதனை தமிழில் ஆனந்தராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதிலிருந்து....

"ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிராசனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேச சதி என்ற சக்கரத்தின் இன்நெரு கம்பிகும்!" என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஷாஹீத் பெருமான் செரோமணி அகாலிதல் அமைப்பின் தலைவரான மகந் சேவா தாஸ் சிங் அளித்த வாக்கு மூலம் தான் அது. அதைமட்டும் அப்படியே தருகிறோம்.

மகந் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர்(ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர் கோட் மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவலகமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான் பிரமமந்திரி சந்திரசேகரை சந்தித்தேன். நான் லண்டனிற்கு புறப்படுவதாக சந்திரசேரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். பஞ்சாப்பில் வன்முறையை நிறுத்திவிட்டு பஞ்சாப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு சென்றேன். இருவரும் தேநீர் அருந்தினோம். அந்த இடத்தில் ஏற்கனவே 10அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தொலைத் தொடர்பிற்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான. பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொர்பு கொள்வதற்காக பயண்படுத்தப்படும் கருவிகளின் செயற்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம் மேல் தளத்தில் கூடியிருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்பல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ.ஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ.இன் ஆர்.எம்.ரதியும் இருந்தார். நான் பிறநபர்களின் பெயர்களை கேட்கவில்லை.

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர்மனதை மாற்றினேன். ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக் கொள்வதோடு வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறினார். எனக்கு சந்திரா சாமியிடம் தொடர்பு உள்ளது என்றார். சந்திரா சாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றி கேட்டபோது தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியை கொல்லப்போவது இல்லையென முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன். சௌகான் என்னிடம் 3கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திரசேகரிற்கு. நான் அங்கிருந்து கிழம்பும் போது இந்தியத் தலைவர்கள் ஆன சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா சந்திராசாமி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன் சர்தார் வல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்தாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸபிஸ் ரவரில் நடந்தது. அந்தக் கூட்டம் காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது ராஜீவ்காந்தியை அழிப்பது ஆகிய விசயங்கள் சம்மந்தப்பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விசயங்களை நான் ராஜீவ்காந்தியிடம் (பெப்ரவரி 10௧991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விசயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்து விட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு வேர்த்துக் கொண்ட்ட ஆரம்பித்தது. அவர் கோபம் அடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991 பெப்ரவரி 14 அல்லது 15இல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதேயளவு ஆபத்தான விசயத்தை நான் அவரிடம் தெரித்ததாகவும் ராஜீவ் கூறினார்.

சௌகானிற்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்திருந்தனர். ராஜீவ்ஜீயின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார் என்று விலாவாரியாக விபரிக்கிறது அந்த வாக்கு மூலம்.

எஸ.ஐ.டி. விசாரனைக்கு நேர்மாறான விசயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிசன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையை கிளப்பலாம்!

சிங்களத்தின் முற்றுமுழுதான பிடிக்குள் அகப்பட்டிருக்கும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் அண்மையில் நிகழ்த்திய நாடகத்தை இந்த புத்தகம் உடைத்தெறிந்துள்ளது. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.


(நன்றி ஜூனியர் விகடன்.) 



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog