
மக்ரோன் - 2 பாக்கெட்
கோழிக்கறி - கால் கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
மசாலாப் பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 200 மி.லி.
வினிகர் - 4 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மக்ரோனைப் போட்டு, வெந்தவுடன் வடித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதிலேயே இஞ்சி பூண்டு விழுது, வினிகர் மற்றும் கோழிக்கறியைச் சேர்த்து கிளறி, குக்கரை மூடாமல் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
பின்பு மசாலாப்பொடி, மிளகு சீரகப் பொடி, மல்லிப்பொடி, அரைத்த தேங்காய் விழுது இவற்றை 4 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்தமல்லிக் கீரையை தூவி, குக்கரை மூடி வெயிட் போட்டு சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
குருமா வெந்தவுடன் குக்கரைத் திறந்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி அதனுடன் வெந்த மக்ரோனையும் சேர்த்து கிளறி அடுப்பில் குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கிவிடவும்.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments