Pages

Subscribe:

Thursday, April 19, 2012

அர்த்த சக்ராசனம்

மனம் : முதுகெலும்பு

மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.


குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.
ஆன்மீக பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றது.
எச்சரிக்கை : இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog