Pages

Subscribe:

Thursday, April 19, 2012

சக்ராசனம்

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை  இந்த ஆசனத்தை பயிலலாம்.



பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog