Pages

Subscribe:

Friday, December 30, 2011

வீட்டு மருத்துவம்

படித்ததில்  நின்றவை..

தினமும் இரண்டு மிளகு சாப்பிட்டால் இதய நோய் வராது..

நமது முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து உணவிலும் ஒரு மருத்துவகுணம் உண்டு. ஆனால் இன்று சமைக்கபடும் உணவில் சுவை மட்டுமே உள்ளது இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

இன்றைக்கும் ஆயுவேதத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவது உணவு பொருட்கள் தான்.
சரி இப்போது கீரை வகைகளை பார்போம்.
கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்..

தூதுவளை கீரை                 = இருமல், சளி.
அகத்திக்கீரை                      = கடுப்பு மாறும்.
கொத்தமல்லிக்கீரை          = சுக்ல விருத்தி உண்டாகும்.
கரி சலாங்கண்ணிக் கீரை  = கண்களுக்கு பலம் கிடைக்கும்.
சிறுகீரை                              = கண் புகைச்சல் குறையும்.
புதினா                                  = பசியை தூண்டும்.
கீழாநெல்லி                         = மஞ்சள் காமாலை குறையும்.
 
வெண்ணையுடன் பொடி செய்த மிளகு சேர்த்து சாப்பிட்டால் இளநரை மறையும்.
 
பசும்பால் குடித்தால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும்.  
எருமை பால் புத்தியை மந்த செய்யும்.
ஆட்டுபால் சாபிட்டால் ரத்தபோக்கு நோய் குறையும்.  
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். 
நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் அதிகரிக்கும்.  
கரும்பு சாறு ஆண்மையை உண்டாக்கும்.
தேன்  கண்களுக்கு நல்லது.  
நல்லெண்ணெய் குளிர்ச்சி குடுக்கும்.
நான் அன்றாட குடிக்கும் தண்ணீரில் அதிகம் enargy உள்ளது. எனவே தினமும் கொதிக்கவைத்த தண்ணிரை குடிப்பதே நல்லது..
பத்தியம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசி  நல்லது.
அவல் பலத்தை அதிகரிக்கும்.
கோதுமை ஆண்மையை அதிகரிக்கும்.
எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. பெண்களுக்கு இடுப்பு வலிமை தரும். இதை சாபிட்டால் உடல் பருக்கும்..

வேர்கடலையுடன் வெள்ளம் சேர்த்து சாபிட்டால் உடல் பெருகும்.  
பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும்.  
பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
மஞ்சள்  ரத்ததை சுத்திகரிக்கும், புண்களை ஆற்றும்.
சேனைக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும்.
இஞ்சி  வயிற்றை சுத்தம் செய்யும்.  
கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். 
அதேபோல்  
மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். இப்படி நான் அன்றாட சாப்பிடும் காய்கறிகளில் அணைத்து மருத்துவ குணங்கள் உள்ளது..:)






0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog