Pages

Subscribe:

Thursday, June 27, 2013

மாம்பழ பால் ஜூஸ்

இதுவரை மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ், மில்க் ஷேக், குல்பி என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் மாம்பழ பால் செய்து குடித்திருப்போமா?
தேவையான பொருட்கள்: 
மாம்பழம் - 1 தேங்காய் பால் - 1/2 கப் 
குளிர்ந்த பால் - 1/4 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
செய்முறை:  
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதில் தேங்காய் பால், குளிர்ந்த பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து பரிமாறினால், சுவையான மாம்பழ பால் ரெடி!!! வேண்டுமெனில் இதனை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தும் குடிக்கலாம்.

Image by FlamingText.com

Monday, June 24, 2013

வாழ்வு , மரணம் புதிர்

ஒருவன் விசித்திரமான சட்டம் கொண்ட வெளி நாட்டில் மரண தண்டனையை எதிர்னோக்குகிறான். அவன் முன், இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டன.- அவற்றில் “வாழ்வு” , “மரணம்” என எழுதப்பட்டிருந்தன. அவன் எடுக்கும் பத்திரமே அவன் விதியை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் இரு தாள்களிளுமே “மரணம்” என மாற்றப்பட்டிருப்பதை அறிகிறான். இதனைப் பற்றி யாரிடமும் பேச அனுமதி இல்லை, எப்படி அவன் மரணத்திலிருந்து தவிர்ந்திருப்பான்?
.
.
.
.
.
.
.
.

தீர்வு-->
 அவன் ஒரு பத்திரத்தை  விழுங்க ஜெயிலர் தண்டனையை தீர்மானிக்க மீதமுள்ள காகிதத்தினை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் நிச்சயமாக  “மரணம்” என எழுதப்பட்டிருப்பதால் அவன் எடுத்தது “வாழ்வு”  என முடிவெடுக்கப்பட்டு அவன் விடுதலையானான்.

Image by FlamingText.com

விடுகதைகள்

1.வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

2.முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

3.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?

4.ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?

5.கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?

6.ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?

7.முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?
 
விடை:  
1.சோளம்
2.முத்திரை
3.பஞ்சு
4.நெருப்பு
5.சவப்பெட்டி
6.தற்கொலை
7.குயில்

Image by FlamingText.com

அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
****************************************************

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம்.நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

"வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ, என்று..

என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே...???

Image by FlamingText.com

தமிழர்களின் திருமண சடங்கு

     தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு  காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

Image by FlamingText.com

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு ¬ குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியைமணக்கிறார் ஸ்ரீநிவாசன்.
அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?
 
அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்
ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள்.

அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்
பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.
இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான் பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..

இனிமேல இந்த மாறி கேள்விலாம் கேப்பீங்களா??

Image by FlamingText.com

How to solve Shortcut Folder in USB


பின் தோன்றும் விண்டோவில் cd\ என்று உள்ளிடவும்.

அடுத்து எந்த ட்ரைவோ அந்த ட்ரைவினை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். நான் E: என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே e: என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். உங்களுடைய ட்ரைவ் மாறுபடும்.

அடுத்து dir/ah என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது அந்த ட்ரைவில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும்.

அடுத்து attrib *. -h -s /s /d என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். என்டர் பொத்தானை அழுத்தியவுடன் கோப்புகளை தனியே பிரிக்கும் வேலை ஆரம்பம் ஆகும்.

இறுதியாக exit என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது காமான்ட் பிராம்ப்ட் மூடப்படும்.

இப்போது உங்களுடைய யுஎஸ்பி ட்ரைவினை திறந்து பார்க்கவும். அப்போது உங்களுடைய கோப்புகள் அந்த ஸ்டார்கட் கோப்பு வைரஸ்களிடம் இருந்து தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த முறையானது ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் தனியே பிரித்தெடுக்க முடியும்.இதே முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு கோப்பினை மட்டும் பிரித்தெடுக்க முடியும். அதற்கு attrib கமெண்ட் உள்ளிடும் போது கோப்பின் பெயரையும் சேர்த்து உள்ளிட்டால் போதுமானது. tcinfo.psd என்னும் போட்டோசாப் பைலை மட்டும் ட்ரைவில் இருந்து தனியே மீட்டெடுக்க வேண்டுமெனில்  attrib tcinfo.psd -r -a -s -h என்று உள்ளிடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு ட்ரைவில் இருக்கும் பட்சத்தில் கோப்பானது மீட்டெடுக்கப்படும்.

Image by FlamingText.com

Friday, June 14, 2013

Small Onion Chutney

சின்ன வெங்காயம் சட்னி

 

  •      சின்ன வெங்காயம் - 1கப் 
  •      வற்றல்மிளகாய் - 4
  •      புளி - ஒரு சின்ன பீஸ்
  •     உளுத்தம்பருப்பு - 2ஸ்பூன் 
  •      உப்பு - தேவையான  அளவு
  •     ஆயில் - 2ஸ்பூன் 
  வெங்காயத்தை  தோல்  உரித்து  நன்றாக  கழுவவும் .
 
ஒரு கடாயில் ஆயில் விட்டு சின்ன வெங்காயம், வற்றல் மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
(சுமார் 20-25நிமிடங்கள்) வதக்கிய வெங்காயம், வற்றல் மிளகாய், புளி உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும்.
 
 
 


Image by FlamingText.com

Friday, June 7, 2013

The Sicilian Girl-2001[Italy] பழிக்கு பழி - உலக சினிமா விமர்சனம்

நடந்த கொலையை பார்த்தும் சாட்சி சொல்ல தயாரில்லாத தொடை நடுங்கி கூட்டம்தான் உலகத்தில் அதிகம்.
இப்படி பயந்து வாழும் வாழ்க்கை சிஸ்டத்தின் மீதே காறி உமிழ்கிறாள் இப்படத்தின் நாயகி.

ரீட்டா ஆட்ரியா மாபியா குடும்பத்தில் பிறந்து மாபியா கும்பலை ஒழிக்க தன்னுயிரையே தந்த வீரப்பெண்மணி.
இத்தாலியிலேயே சிசிலி பகுதி மாபியாக்கள்தான் உலகப்பிரசித்தம்.
1974ல் பிறந்து 1992ல் மறைந்த ரீட்டா இன்றும் வீர மங்கையாக இத்தாலியில் போற்றப்படுகிறார்.
ஒரிஜினல் ரீட்டா அட்ரியா புகைப்படம்
ரீட்டாவின் வாழ்க்கை வரலாற்றை அழகான ஒவியமாக்கி நம்மை மயக்கியவர் இயக்குனர் Marco Amenta

உண்மை சம்பவத்தை படமாக்கும் போது...
பொதுவாக திரைப்படங்களில்...
ஆமைத்தன்மை வந்து விடும்.
இந்தப்பட்ம் விதி விலக்கு.
இயக்குனரின் திறமையால் இப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் பறக்கிறது.

வன்முறையை வாழ்க்கையாக கொண்ட சிசிலி தீவில்...
அழகிய சிற்றூரில் பிறந்து....
தந்தையால் வளர்க்கப்படுகிறாள் ரீட்டா.
தந்தை அந்த ஏரியாவுக்கே மார்லன் பிராண்டோ.
தாய் சொல்லை தட்டி... தந்தையோடு பயணப்பட்டு அவரது கரங்களின் வழியாகத்தான் இந்த உலகை காண்கிறாள் ரீட்டா.

ஊரின் நன்மைக்காக ஒரு கொடியவனை தந்தை போட்டுத்தள்ளுகிறார்.
விசாரிக்க வந்த நீதிமானுக்கு, ஊர்மக்கள்.... மவுனத்தை ஆகச்சிறந்த பதிலாக தருகிறார்கள்.
அவர் மேல் சாணி அடித்து ரீட்டா அவரை எச்சரிக்கிறாள்.
சின்னஞ்சிறு குழந்தையின் வாயில் வரும் வார்த்தைகள்....
அப்பப்பா...படத்தில் வரும் பவர்புஃல் காட்சி இது.

வல்லவன் நல்லவனாக இருப்பதில் உள்ள ஆபத்து...
 ரீட்டாவின் 11 வயதில் அவளது தந்தைக்கு நேரிடுகிறது.
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் தந்தையை காப்பாற்ற கதறும் போது
அத்தனை கதவுகளும் சாத்திக்கொள்கின்றன.
தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழி..ரத்ததுக்கு ரத்தம் ...என்றே வாழ்கிறாள்.
ஊரில் ந்டக்கும் அத்தனை அட்டூழியங்களையும் தனது டைரியில் தேதி வாரியாக பதிவு செய்கிறாள்.
17வது வயதில் தனது சகோதரனையும் அதே கும்பலிடம் பறி கொடுக்கிறாள்.
நரசிம்ம அவதாரம் எடுத்தால் சாவதற்க்கு எதிரி இரண்யன் இல்லை என்பதை உணர்ந்து நீதிமானிடம் அடைக்கலம் அடைகிறாள்.
தன் மீது சாணி அடித்த கைக்கு கை கொடுக்கிறார் நீதிமான்.
அத்தனை தாதாக்களையும் ,அவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகளையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்.
2 ஜியில் திகார் ஜெயில் நிரம்புவது போல் இத்தாலி சிறைகள் அத்தனையும் ஹவுஸ்புல்.
தாதாக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் உள்ள ராம்ஜெத்மலானிக்களும் கபில்சிபல்களும் நீதிமன்றத்தில் திரள்கின்றனர்.
ஜாம்பவன்களின் வாதத்தை சத்தியம் என்னும் பழைய ஆயுதத்தால் அடித்து நொறுக்குகிறாள் ரீட்டா.


நீதி தேவதையே ரீட்டா வடிவெடுத்து பிறந்து விட்டாள் என்ற பூரிப்பில் அவளை கட்டி அணைக்கிறார்.அது அவளது தந்தையின் அரவணைப்பல்லவா!!!

இறுதியாக நீதிமானை காரில் பாம் வைத்து கொல்கின்றனர் மாபியாக்கள்.
இதற்கு பதிலடியாக ரீட்டா தனது தற்கொலையின் மூலம் அத்தனை மாபியாக்களுக்கும் தண்டனை வழங்குகிறாள்.
எப்படி???!!! எனத்தெரிய ஆவலாயிருக்கிறதா?
சிம்பிள்...படம் பாருங்கள்

Thanks : http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

BLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்

பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.
பார்பதற்கு நம்ம சிம்ரன் மாதிரி இருக்கும், இவள் தான் இந்த படத்தின் கதாநாயகி(மரியம்).

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
சலனமில்லாத குளத்தின் கரையில்...
துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.
முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.
அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.
 
அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.





Thanks to :http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

Tomboy-2011 உலக சினிமா விமர்சனம்

ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தனது கர்ப்பிணி மனைவியோடும்...
தனது இரு பிள்ளைகளோடும்... புதிய ஊருக்கு குடிவருகிறார்.
மூத்த பிள்ளைக்கு... பக்கத்து பிளாட்டில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.
ஹாய்...என் பெயர் லிசா...உன் பெயர் என்ன?

மைக்கேல்...என் பெயர் மைக்கேல்...
நாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம்.

வா...இங்க எல்லோர் கூடவும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

புதிய இடத்தில்...புதிய நண்பர்களோடு...புதிய வாழ்க்கை கிடைக்கிறது...
பத்து வயது மைக்கேலுக்கு.
மற்ற நண்பர்களை விட லிசா ஸ்பெசலாக இருக்கிறாள்.

இருவருக்கும் பப்பி லவ் தொடங்குகிறது.
லிசா கொடுக்கும் முதல் முத்தம்... சொர்க்கத்தை தொட்டு விடும் தூரத்தில் காட்டுகிறது.

சரி...ஒரு பத்து வயது சிறுவனும்...சிறுமியும் காதலிப்பதில் என்ன புதுமை இருக்கிறது?
ஆனால் பத்து வயது மைக்கேல்...சாரா...என்கிற பெண்....
என அறியப்படும் போது படம் விஸ்வரூபம் எடுக்கிறது.

மைக்கேலாக வாழ்கின்ற சாராவின் அகவாழ்க்கை பயணத்தையும்...
புற வாழ்க்கை பயணத்தையும்...படத்தில் அழகாக....கவிதை நயமிக்க காட்சிகளாக்கி விருதுகளை அள்ளியிருக்கிறார் இயக்குனர்... Celine Sciamma.

தமிழில் பள்ளிப்பருவக்காதலை கலை நயத்துடன் சொன்னபடம்...
பன்னீர் புஷ்பங்கள்.
இப்படத்தை இயக்கியவர்கள் யார் தெரியுமா?
பாரதி-வாசு என்ற இருவர்கள்.
வெகு விரைவில் இருவருமே பிரிந்து...
ஒருவர்...சந்தானபாரதியாகவும்....
மற்றொருவர் பி.வாசுவாகவும்...
மசாலாப்பட இயக்குனர்களாக உருமாறி விட்டனர்.

 Thanks: http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

RUN LOLA RUN விமர்சனம்

RUN LOLA RUN - மூன்று விதமான ஓட்டங்கள்

சமீபத்தில் வெளியான  'நேரம்' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை அமைப்புக்காக பாராட்டப்பட்டது.
‘ரன் லோலா ரன்’ &  ‘நேரம்’ திரைப்படங்களை பார்த்தவர்கள்...
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை நன்கு புரிந்திருக்க முடியும்.
 'நேரம்' படத்தின் கதையை ‘ரன் லோலா ரன்’ படத்தின் பாதிப்பில்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார்  'நேரம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
மூன்று விதமாக சொல்லப்பட்ட  'ரன் லோலா ரன்' திரைக்கதையை,
 ‘நேரத்தில்’ ஒரே நேர் கோட்டில் சொல்லி வித்தியாசப்படுத்தி விட்டார் 'இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்’.

 ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்திற்குள்,
உடனடியாக போவதற்கு பதிலாக...
சற்று வரலாற்றின் பக்கம் போய் விட்டு வருவோம்.
1880 ஆம் ஆண்டில்தான்  'கேமரா' கண்டு பிடிக்கப்பட்டு  'சினிமா' வளர்ந்தது.
சரியாக பத்து வருடம் கழித்து,
1890 ஆம் ஆண்டில்  'சைக்கோஅனாலைசிஸ்' [ Psychoanalysis ] கோட்பாட்டை,
‘சிக்மண்ட் பிராய்ட்’ [ Sigmund freud ] உலகிற்கு வழங்கினார்.
இதன் தாக்கம் இலக்கிய உலகிலும் நிகழ்ந்தது.

‘இயக்குனர் டாம் டிக்கர்’ உருவாக்கிய ‘ரன் லோலா ரன்’ 
ஒரு ‘போஸ்ட் மாடர்ன் பிலிம்’
இதன் கதை,திரைக்கதையை ‘பிராபப்பிலிட்டி தியரி’ [Probability Theory] அடிப்படையில் உருவாக்கி உள்ளார்.
வழக்கமான ஹாலிவுட் பாணியான ‘அரிஸ்டாட்டில் பார்மிலிருந்து’ விலகி
இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.

ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து காதலர்கள் ஜெயித்தார்களா? இல்லையா ?
என்பதை மூன்று விதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
மூன்றுக்குமே அடிப்படை ஒன்றுதான்.
அடிப்படையை முதலில் பார்ப்போம்.

மானி சிறிய அளவில் கிரிமினல் வேலைகளை செய்பவன்.
மானி, தன் காதலி லோலாவுக்கு போன் செய்கிறான்.
 ‘நீ சரியான நேரத்துக்கு வராததால்  எல்லாமே பாழாக போய் விட்டது’ எனக்கதறுகிறான்.
 “ சிகரெட் வாங்க கடைக்கு போகும் போது தனது மொபட்டை ஒருவன் திருடிக்கொண்டு ஓடி விட்டான்.
அவனை பிடிக்கவே முடியவில்லை.
அதனால் வர முடியவில்லை” என சமாதானம் சொல்கிறாள் லோலா.

“ திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து பணம் கிட்டியது.
நீ வராததால் சப்-வே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ரயிலில் ஏறினேன்.
ரயிலுக்குள் காவலர்கள் வந்ததால் நைசாக இறங்கி நடந்தேன்.
அப்போதுதான் பணப்பையை ரயிலிலேயே விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதை எடுக்கத்திரும்பும் போது காவலர்கள் மடக்கி விட்டார்கள்.
அந்தப்பையை ரயிலில் இருந்த  ‘குப்பை பொறுக்குபவன்’ எடுத்து விட்டான்.
அவன் இந்நேரம் வெளிநாடு போயிருப்பான்.
இன்னும் 20 நிமிடங்களுக்குள் ஒரு லட்சம்  ‘மார்க்’ பணத்தை ஒப்படைக்காவிட்டால் ‘ரோனியின் மாபியா கேங்’ என்னைக்கொன்று விடும்” என்கிறான் மானி.

லோலா : எங்கேயாவது ஓடி விடு.

மானி : ரோனிகிட்ட இருந்து தப்ப முடியாது.
‘நீ முன்னாடி ஒரு தடவை சொன்னியே...
 “காதல் எல்லாம் செய்யும்னு”
இப்ப 1,00,000 மார்க்... 20 நிமிஷத்துல வேணும். 

லோலா : “சரி... நான் பணத்துடன் வருகிறேன். காத்திரு.” 

  மானி : “ 20 நிமிடத்துக்குள் வராவிட்டால் எதிரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க போகிறேன் ”

போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.
ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக அமருகிறது.

பணம் கிடைத்ததா ?
20 நிமிடத்துக்குள் மானியிடம் சேர்க்க முடிந்ததா ??

இதுதான் அடிப்படைப்பிரச்சனை.
இப்பிரச்சனைக்கு லோலா தீர்வு காண்பதை,
மூன்று விதங்களாக ‘பிராபப்பிலிட்டி தியரியில் ’ சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.

Source : http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

Search This Blog