Pages

Subscribe:

Friday, June 7, 2013

The Sicilian Girl-2001[Italy] பழிக்கு பழி - உலக சினிமா விமர்சனம்

நடந்த கொலையை பார்த்தும் சாட்சி சொல்ல தயாரில்லாத தொடை நடுங்கி கூட்டம்தான் உலகத்தில் அதிகம்.
இப்படி பயந்து வாழும் வாழ்க்கை சிஸ்டத்தின் மீதே காறி உமிழ்கிறாள் இப்படத்தின் நாயகி.

ரீட்டா ஆட்ரியா மாபியா குடும்பத்தில் பிறந்து மாபியா கும்பலை ஒழிக்க தன்னுயிரையே தந்த வீரப்பெண்மணி.
இத்தாலியிலேயே சிசிலி பகுதி மாபியாக்கள்தான் உலகப்பிரசித்தம்.
1974ல் பிறந்து 1992ல் மறைந்த ரீட்டா இன்றும் வீர மங்கையாக இத்தாலியில் போற்றப்படுகிறார்.
ஒரிஜினல் ரீட்டா அட்ரியா புகைப்படம்
ரீட்டாவின் வாழ்க்கை வரலாற்றை அழகான ஒவியமாக்கி நம்மை மயக்கியவர் இயக்குனர் Marco Amenta

உண்மை சம்பவத்தை படமாக்கும் போது...
பொதுவாக திரைப்படங்களில்...
ஆமைத்தன்மை வந்து விடும்.
இந்தப்பட்ம் விதி விலக்கு.
இயக்குனரின் திறமையால் இப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் பறக்கிறது.

வன்முறையை வாழ்க்கையாக கொண்ட சிசிலி தீவில்...
அழகிய சிற்றூரில் பிறந்து....
தந்தையால் வளர்க்கப்படுகிறாள் ரீட்டா.
தந்தை அந்த ஏரியாவுக்கே மார்லன் பிராண்டோ.
தாய் சொல்லை தட்டி... தந்தையோடு பயணப்பட்டு அவரது கரங்களின் வழியாகத்தான் இந்த உலகை காண்கிறாள் ரீட்டா.

ஊரின் நன்மைக்காக ஒரு கொடியவனை தந்தை போட்டுத்தள்ளுகிறார்.
விசாரிக்க வந்த நீதிமானுக்கு, ஊர்மக்கள்.... மவுனத்தை ஆகச்சிறந்த பதிலாக தருகிறார்கள்.
அவர் மேல் சாணி அடித்து ரீட்டா அவரை எச்சரிக்கிறாள்.
சின்னஞ்சிறு குழந்தையின் வாயில் வரும் வார்த்தைகள்....
அப்பப்பா...படத்தில் வரும் பவர்புஃல் காட்சி இது.

வல்லவன் நல்லவனாக இருப்பதில் உள்ள ஆபத்து...
 ரீட்டாவின் 11 வயதில் அவளது தந்தைக்கு நேரிடுகிறது.
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் தந்தையை காப்பாற்ற கதறும் போது
அத்தனை கதவுகளும் சாத்திக்கொள்கின்றன.
தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழி..ரத்ததுக்கு ரத்தம் ...என்றே வாழ்கிறாள்.
ஊரில் ந்டக்கும் அத்தனை அட்டூழியங்களையும் தனது டைரியில் தேதி வாரியாக பதிவு செய்கிறாள்.
17வது வயதில் தனது சகோதரனையும் அதே கும்பலிடம் பறி கொடுக்கிறாள்.
நரசிம்ம அவதாரம் எடுத்தால் சாவதற்க்கு எதிரி இரண்யன் இல்லை என்பதை உணர்ந்து நீதிமானிடம் அடைக்கலம் அடைகிறாள்.
தன் மீது சாணி அடித்த கைக்கு கை கொடுக்கிறார் நீதிமான்.
அத்தனை தாதாக்களையும் ,அவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகளையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்.
2 ஜியில் திகார் ஜெயில் நிரம்புவது போல் இத்தாலி சிறைகள் அத்தனையும் ஹவுஸ்புல்.
தாதாக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் உள்ள ராம்ஜெத்மலானிக்களும் கபில்சிபல்களும் நீதிமன்றத்தில் திரள்கின்றனர்.
ஜாம்பவன்களின் வாதத்தை சத்தியம் என்னும் பழைய ஆயுதத்தால் அடித்து நொறுக்குகிறாள் ரீட்டா.


நீதி தேவதையே ரீட்டா வடிவெடுத்து பிறந்து விட்டாள் என்ற பூரிப்பில் அவளை கட்டி அணைக்கிறார்.அது அவளது தந்தையின் அரவணைப்பல்லவா!!!

இறுதியாக நீதிமானை காரில் பாம் வைத்து கொல்கின்றனர் மாபியாக்கள்.
இதற்கு பதிலடியாக ரீட்டா தனது தற்கொலையின் மூலம் அத்தனை மாபியாக்களுக்கும் தண்டனை வழங்குகிறாள்.
எப்படி???!!! எனத்தெரிய ஆவலாயிருக்கிறதா?
சிம்பிள்...படம் பாருங்கள்

Thanks : http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog