Pages

Subscribe:

Wednesday, January 25, 2012

Use of Kollu : கொள்ளு

காஃபிக்குப் பதில் cornflakes, மதிய உணவுக்கு. burgerம் என்று வேகமாக வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் இட்லியும், அரிசி சோறும் அந்நியன் ஆகிவிட்டது. அதிலும் சிறுதானியங்களின் மகத்துவத்தை சிறுமையாகவே கருதும் மேற்கத்திய மோகம் நம்மை இறுக்கமாக பற்றிக்கொண்டது.

தினை, அரிசி, கம்பு, சோளம்... என நீளும் இந்த சிறுதானியப் பட்டியலில் கொள்ளு என்ற தானியத்தை குதிரைக்கு மட்டுமே என பட்டா செய்துவிட்டோம். கொள்ளில் லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது. 

  பாட்டன் சொத்தாக காணிநிலம் வருதோ இல்லையோ, பரம்பரை வழியாக இந்த நீரிழிவு நோய் பலருக்கும் முப்பதுகளிலேயே வந்துவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கண்ட கண்ட மசாலாக்களைக் கொட்டித் தயாராகும் ஃபாஸ்ட் ஃபுட்டும், முறையான தூக்கமில்லாத உழைப்பும்தான்.
சர்க்கரை நோயாளிகள், பருமனான உடல் வாகு கொண்டவர்கள், அரிசிக்கு மாற்று என கோதுமையில் தவம் கிடப்பதைக் காட்டிலும், கம்பங் களியும் கொள்ளு ரசமும் வாரம் 1-2 நாட்கள் மாற்றிக் கொள்வது நல்லது. உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

ஆங்கிலத்தில் Longer the waist line. shorter the life line என்று மருத்துவத்துறை அச்சமூட்டும் இக்காலகட்டத்தில், கொள்ளினால் செய்யப்பட்ட கொள்ளு பருப்புப் பொடி, கொள்ளுச் சட்னி, கொள்ளு வடை ஆகியவை நம் உடல் எடையைக் குறைக்க நம் முன்னோர்கள் வகுத்த அருமையான ரெசிபீஸ் என்றே சொல்ல வேண்டும். உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நம் பாக்கெட்டின் எடையை மட்டுமே குறைக்கின்றன. குண்டு உடம்பு இளைப்பதென்பது பலருக்கு பகல்கனவாகிவிட்ட சமயத்தில் கொள்ளினால் செய்யப்படும் உணவு வகைகள் need of the hour ஆகிவிட்டன. இன்று கல்லூரிப் பெண்கள் பலர் கலோரி கணக்குப் பார்த்து உண்ணும் கலாச்சாரத்தில்... கொள்ளு ரசம், கொள்ளுப் பருப்புப் பொடி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

காலைக்கடன் என்று சொன்னவுடன்,அதனை தினசரி வெளியேற்றாவிட்டால் வட்டியுடன் சோதனை தரும் என அறியாமல் மலச்சிக்கலுடன் மல்யுத்தம் செய்வோர் நிறையப் பேர் உண்டு. கொள்ளில் உள்ள நார்ச் சத்துக்களால் சிரமமின்றி முழுமையாக மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியத்தின் முதல் படி 
 தவிர, கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், குளிர்காலங்களுக்கு ஏற்ற உணவாகிறது. கொள்ளு ரசத்தினால் தொண்டையில் கட்டும் கோழை, சிறுநீரக கல்லடைப்பு போன்ற நோய்களுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகள், அனைவரும் உண்ணும் அமிர்தமானாலும் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சரி... கொள்ளு ரெசிபிக்களை எந்த பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென குழம்பவேண்டாம். உங்களுக்காக சில ரெசிபிக்கள் ஆங்காங்கே.

 From தனிமதி (tamilworld)


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog