Pages

Subscribe:
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Tuesday, April 2, 2019

திருப்பதியில் இருப்பது முருகனா?

                                                                          Please Subscribe : V2 Channel

திருப்பதியில் தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?

அருணகிரிநாதர் 
எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்.

பெயர்க்காரணம் 
வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்.
குறிஞ்சி 
குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

திருவேங்கடம்  
திருவேங்கடம் = திரு + வேல் + இடம் திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்.

கோயில் அமைப்பு 
கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.
கருடாழ்வார்  
கருடாழ்வார் பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.

மறைக்கப்பட்ட தமிழ் கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்ததமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?
கரங்கள் 
கரங்கள்   
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.

சான்று  
கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

கொடிமரம்  
கொடிமரம் இல்லாத விஷ்ணு, பெருமாள் கோயில் எங்கேயாவது பார்த்ததுண்டா நீங்கள்?

தெப்பகுளம் பெருமாள் கோயில் என்றாலே தெப்பக்குளம் இல்லாமல் இருக்குமா?

போலி கரங்கள் சங்கும் சக்கரமும் தனியாக ஒட்டப்பட்டுள்ளதாகவும், இரு கரங்கள் போலியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூற கேட்டிருக்கிறோம். கோயிலுக்கு செல்லும்போது கூர்ந்து கவனியுங்கள்.

Please subscribe : V2 Channel

Image by FlamingText.com

Friday, August 3, 2018

கணவனை கொன்ற ராமனை ராவணன் மனைவி மண்டோதரி சந்தித்தது ஏன் தெரியுமா?

ராவணன் சீதையின் மீது ஆசைப்பட்டதும் ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது, ராமன் போர்க்களத்தில் ராவணனை அழித்த பிறகு, ராவணனின் மனைவி ராமனிடம் வந்து பேசிய கதை பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னுடைய கணவனை கொன்று வெறி தீர்த்துக் கொண்ட ராமனிடம் அப்படி என்னதான் பேசினாள் மண்டோதரி.

ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன் நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.

நீ யாரம்மா?" என்று ராமன் இந்த பெண்மணியிடம் கேட்க, அதற்கு "நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன்.
 
 
இங்கே நீங்கள் (ஒரு பெண்ணின்) என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும்போதே, உங்களுடைய சிறந்த குணத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அதிலுள்ள உங்களுடைய குணத்தைப் பற்றி நான் என்ன சொல்வேன்? இதற்கு முன்பாக, ஏற்கனவே என்னுடைய கணவரிடம் கூட பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். ரகு வம்சத்தில் பிறந்திருக்கின்ற ராமன் மனிதப் பிறவி அல்ல. அவர் இந்த உலகத்தைக் காக்கின்ற பரம்பொருளாகத் தான் இருப்பார். இந்த உலகைக் காக்க விஸ்வரூபம் எடுத்து வந்தவர் தான் அவர். ஏனெனில் அவர் தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்கங்களிலும் இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நின்று கொண்டிருக்கிறார் என்று நான் கூறியிருக்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற பாதாள உலகம் தான் அவனுடைய பாதங்கள். பிரம்மலோகம் தான் ராமனுடைய தலை. இந்த உலகுக்கே வெளிச்சம் தரக்கூடிய சூரியன் தான் ராமனுடைய கண்கள். இந்த ஆகாயத்து மேகங்கள் தான் அவருடைய தலைமுடி. இவற்றையெல்லாம் விட, ராமன் கண்ணிமைகளை மூடி திறப்பது தான் நமக்கு இரவு பகலாக மாறி மாறி வருகிறது. எட்டு திசைகளும் தான் அவருடைய செவிகள். இவை எல்லாவற்றையும் விட, ராமனுடைய பெயர் தான் இந்த உலகில் நாம் செய்த எல்லா பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அவன் நான்கு வேதங்களின் சாரமாக விளங்கக்கூடியவன். ராமன் தெய்வ வடிவம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால் அவரிடம் பகை கொள்ளாமல் வஞ்சகத்தை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்' என்று மன்றாடிக் கேட்டேன். அதை அவர் செவி கொடுத்துக் கேட்கவில்லை.

இவ்வளவு நான் எடுத்துக் கூறியும் என்னுடைய கணவர்அதை கேட்க மறுத்துவிட்டார். உங்களுடைய வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நல்ல குணம் உங்களிடத்தில் இருந்தது தான். அதுதான் உங்களுடைய ஏக பத்தினி விரதத்தன்மை. அதனால் தான் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற என்னுடைய கணவரை நீ வென்றாய்," என்று கூறினாள்.

மண்டோதரி பேசுவதை மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ராமன், லேசாக சிறு புன்னகையை மட்டுமே அவளிடம் உதிர்த்து விட்டு, தன்னுடைய ஒரிஜினல் சுய வடிவமான நாராயண வடிவத்தில் மண்டோதரிக்குத் திசனம் கொடுத்தார்.

ஹனுமனின் ஐயம்.
ராமாயணக் காப்பியத்தில் மிகச்சிறந்த பாக்கியசாலியாக மண்டோதரி கருதப்பட்டாள். ஏன் தெரியுமா?... ஹனுமன் சீதையைத் தேடி இலங்கையில், ராவணனின் அந்தப்புரத்துக்கு சென்ற பொழுது, அங்கு ஹனுமனின் கண்களில் மிக ஒழுங்கான,அழுத்தம் திருத்தமாய், நேர்த்தியாய் உடை அணிந்த பெண்ணாக மண்டோதரி காட்சி அளித்தாள். அதைக்கண்ட ஹனுமான முன் பின் சீதையை நேரில் பார்த்ததில்லை என்பதால்,இவள் தான் சீதையாக இருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டார். அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக உடை அணிந்திருந்தாள். அந்த அளவுக்கு ஒழுக்கம் நிறைந்தவளாக காட்சி தந்ததோடு அவ்வாறே விளங்கவும் செய்தாள். அந்த காரியத்துக்காகத் தான் கொடியவனான ராவணனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவருக்கு நாராயண தரிசனம் கிடைக்கப் பெற்றது.

Friday, February 5, 2016

கும்பகர்ணன் பற்றி தெரியுமா?

Why Kumbhakarna Slept For 6 Months?                          Please Subscribe : V2 Channel

       இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம். கும்பகர்ணன் முனிவர்களையும், சாதுக்களையும் சாப்பிடுவார் என்று நம்பப்படுகிறது. அவர் எதை சாப்பிட்டாலும் அவருடைய பசி மட்டும் அடங்கியதே இல்லை.

       கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். அரக்கனைப் போல தோற்றமளித்தாலும் புத்தி சாதூர்யத்திலும் மற்றும் இதயத்திலும் மேம்பட்டவர் கும்பகர்ணன். இராமாயணத்தில் இராவணன் இராமருடன் போரிட்ட போது, மூத்த சகோதரர் என்ற முறையில் கும்பகர்ணனை அணுகி இராமருக்கு எதிரான போரில் வெற்றி பெற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
          
          ஆனால், இராவணன் போர் ஏற்பட்ட சூழலை கும்பகர்ணனுக்கு விளக்கிய போது, இராவணன் செய்வது தவறு என்று எடுத்துரைத்தார். இராவணன் தன்னுடைய ஆலோசனையை கேட்காத போது, சகோதரன் என்ற முறையில் இராமருக்கு எதிராக போரில் இறங்கினார் கும்பகர்ணன். கும்பகர்ணன் பற்றிய பின்னணி தகவல்களைத் தெரிந்து கொண்டோம், இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பில் உள்ளதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
  
  தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, கும்பகர்ணனின் புத்திசாலித்தனத்தையும், வீரத்தையும் கண்டு பொறாமை! எனவே, கும்பகர்ணனை பழி வாங்க தக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

         இராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன் ஆகிய 3 சகோதரர்களும் பிரம்ம தேவரின் அருள் பெறுவதற்காக யாகம் செய்தார்கள்.


          இவர்களுடைய யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்த வரம் இந்திரனின் ஆசனமான 'இந்திராசனா' என்ற வரமாகும், ஆனால் கும்பகர்ணன் 'நித்ராசனா' என்ற வரத்தைக் கேட்டார்.

    இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் 'தந்தேன்' என்று சொல்லி விட்டார். எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார் கும்பகர்ணன், ஆனால் பிரம்மனால் தன்னுடைய வரத்தைத் திரும்பப் பெற முடியாது.
      கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன், சரஸ்வதி தேவியிடம் சென்று கும்பகர்ணனை 'இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

          இந்த நாளிலிருந்து 6 மாதங்கள் தூங்கவும், விழித்திருக்கும் 6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார் கும்பகர்ணன்!

Image by FlamingText.com

Wednesday, November 4, 2015

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத வியாசர். சாஸ்திரத்தில் இதனை ஐந்தாவது வேதமாக குறிப்பிட்டுள்ளனர். மகாபாரததத்தில் எண்ணிலடங்கா சுவாரஸ்யமான தகவல்களும் போதனைகளும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் மறைந்துள்ள தகவல்கள் பல உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சில ரகசியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்:

திரௌபதியின் பிறப்பு குரு துரோணாச்சாரியர் தன் நண்பன் துருபதனை பழி வாங்க நினைத்து, தன் மாணவர்களை வைத்து வீழ்த்தினார். இதனால் அந்நாட்டில் உள்ள ரிஷிகளின் உதவியோடு ஹோமகுண்டத்தை நடத்தினார் துருபதன். அதன் விளைவாக திவ்ய குமாரன் பிறந்தான். அதன் பின் ஹோமம் மூலமாக யாக்யா தேவி பிறந்தாள். அவளுக்கு திரௌபதி என பெயரும் சூட்டப்பட்டது. துரோணாச்சாரியரை கொல்வதற்காகவே திவ்ய குமாரன் பிறந்தான் என்றும், ரிஷிகளுக்கு பயனளிக்கவே திரௌபதி பிறந்தாள் என்றும் அசரிரி உள்ளது.

ஐவரை மணக்க காரணம் தன் முன் ஜென்மத்தில் திருமண யோகம் இல்லாததால், தவமிருக்க தொடங்கினாள் திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய வரத்தை அளிக்க, அவள் முன் தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு கணவனாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை ஐந்து முறை கேட்டாராம். அதனால் தான் தன் அடுத்த ஜென்மத்தில் அவர் ஐவரை மணக்க வேண்டி வந்தது.
பாண்டவர்களின் விதிமுறை குறிப்பிட்ட காலத்தின் படி, ஒவ்வொரு பாண்டவர்களுடன் திரௌபதி வசிப்பார் என பாண்டவர்கள் ஒரு விதிமுறையை போட்டனர். அதில் ஒரு பாண்டவனுடன் இருக்கும் போது, மற்ற பாண்டவர்கள் யாரும் அவர் அருகில் வரக்கூடாது. யாராவது இந்த விதிமுறையை மீறினால், ஒரு பிரம்மச்சாரியாக 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டும்.

விதிமுறையை மீறிய அர்ஜூனன் யுதிஷ்டரின் அரண்மனையில் பிராமணர் ஒருவரின் பசு களவு போனது. அந்த பிராமணரோ அர்ஜுனனின் உதவியை நாடினார். ஆனால் அர்ஜுனின் ஆயுதங்கள் யுதிஷ்டரின் அரண்மனையில் இருந்தது. அங்கே அவர் திரௌபதியுடன் இருந்தார். அங்கே சென்றால் விதிமுறையை மீறும் செயலாகி விடும். ஆனால் பசுவை காக்காமல் போவது மதத்திற்கு எதிரானது என்ற ஒரு கன எண்ணம் அவரை அங்கே செல்ல வைத்தது. அதனால் தன் 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டி இருந்தது.

யுதிஷ்டரின் மற்றொரு மனைவி ஒவ்வொரு பாண்டவர்களின் மூலமாக திரௌபதிக்கு ஒரு மகன் உள்ளான். யுதிஷ்டருக்கு தேவிகா என்ற மற்றொரு மனைவியும் உண்டு.

வாழ்க்கை வெறுத்த பாண்டவர்கள் கிருஷ்ணர் சித்திப்பெற்ற செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந்த உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தனர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன் சொர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர். தன் நேர்மையின் காரணமாக, உயிருடன் இருக்கும் போதே, சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விளங்கினார்.

சொர்க்கத்தில் துரியோதனன் சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் யுதிஷ்டர். ஆனால் பின் தான் தெரிய வந்தது, அவர் எப்போதும் பயத்தை காட்டாமல் இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனிதமான இடத்தில் வீர மரணம் அடைந்த காரணத்தினால் தான் அவருக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடைத்தது.
Image by FlamingText.com

Thursday, October 8, 2015

உண்மையான காதல் கதைகள்!!!

பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!

நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல், அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம்.
 
பாஜி ராவ் மற்றும் மஸ்தானி ADVERTISEMENT ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வரவுள்ள ஒரு படம், பேஷ்வா பாஜி ராவின் கதையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மஸ்தானியின் மாய மந்திரங்கள் (நல்ல விதத்தில்) இல்லாமல் இவர்களின் கதை முழுமை பெறாது. இந்திய வரலாற்றில் பல தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளதை போலவே, மஸ்தானியின் பிறப்பைப் பற்றியும் சரியாக தெரியவில்லை. சிலர் அவரை ஹைதராபாத்தை சேர்ந்த இளவரசியாக நம்புகின்றனர். சிலர் அவரை நடன கலைஞராகவும் நம்புகின்றனர். தன் குலத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த போதிலும் கூட பாஜி ராவ் அவரை மணம் புரிந்தார். போர்களத்தில் பாஜி ராவ் மரணம் அடைந்த போது மஸ்தானியும் தற்கொலை செய்து கொண்டார்.
 
 
 
கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி தன் ஆண் உறவினர்களுடன் கூட்டணி அடிப்படையில் ஆண்டு வந்தாலும் கூட, எகிப்தின் கடைசி பரோவாக அறியப்படுபவர் கிளியோபட்ரா. மிகவும் அழகிய பெண் என வரலாற்றால் கூறப்படும் இவர் உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த இரு ஆண்களை வசீகரித்தார். ஜூலியஸ் சீஸரின் மறைவுக்கு பின்னர் மார்க் ஆண்டனியின் மீது காதலில் விழுந்தார் கிளியோபட்ரா. இவர்களின் உறவு 11 ஆண்டுகளுக்கு நீடித்தது. கி.பி.41-ல், கிளியோபட்ராவின் வசீகரத்திற்கு இரையாகாமல் எகிப்தை கைப்பற்றும் எண்ணத்தில் ரோமானிய படைக்கு ஆக்டேவியன் தலைமை தாங்கிய போது, கிளியோபட்ரா இறந்து விட்டார் என்ற பொய்யான செய்தி கேட்டு, ஆண்டனி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கட்டுவிரியனை கடிக்கச் செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார் கிளியோபட்ரா.
 
ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தன் தாத்தா அக்பருக்கு பின் நன்றாக அறியப்பட்ட முகலாய பேரரசர்களில் ஒருவர் தான் ஷாஜகான். இவருக்கு மூன்று மனைவிகள். அவர்களில் இவருக்கு மிகவும் பிடித்தவராக இருந்தவர் மும்தாஜ். தங்களின் 14 ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உயிரை இழந்தார் மும்தாஜ். அவரின் கடைசி வார்த்தைகளின் நினைவாக, தங்கள் காதல் என்றென்றும் வாழ்ந்திட, அவர் கம்பீரமான கல்லறை மாடத்தை கட்டினார். ஒரு கணவனின் காதலை நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இன்றளவும் தாஜ் மஹால் நிற்கிறது.
விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஜெர்மன் நாட்டு இளவரசரும், தன் தூரத்து சொந்தக்காரருமான ஆல்பர்ட்டை சந்தித்த போது, சொக்கிப்போனார் இளவயது விக்டோரியா. அவர்களின் திருமண வாழ்க்கையில், உள்நாட்டு மதிப்புகள் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் விதத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரை போலவே அவர்கள் காட்சியளத்தினர். திருமணமாகி 21 ஆண்டுகளில், 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, 1861 ஆம் ஆண்டு தன் மனைவியை தனியாக விட்டு விட்டு, காய்ச்சலால் ஆல்பர்ட் இறந்தார். அதன் பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகி கொண்டார். வெண்ணிற திருமண ஆடைக்காக பிரபலமாக அறியப்பட்ட பெண், அவர் கணவனின் மரணத்திற்குப் பிறகு துக்கத்தை அனுசரிக்கும் விதத்தில் கருப்பு ஆடையையும் முகத்திரையையும் அணிந்து கொண்டார்.

Image by FlamingText.com

Monday, February 23, 2015

மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை

முன்பு ஒரு காலத்தில் மிருகண்டர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியான மருதவதியும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே சிவபெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடியும், அவரைப் பற்றிய கதைகளைப் பரப்பியும் வாழ்ந்து வந்தார்கள். 
 
கடைசியாக அவர்களின் செயலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு காட்சி அளித்து, குழந்தை வரத்தை அளித்தார். அந்த குழந்தை தான் மார்கண்டேயன். இங்கு மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை கொடுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் கொடுத்த வரம் மிருகண்டர் என்பவர் மகரிஷி ஆவார். அவருடைய மனைவி மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார் மகரிஷி. அவர் முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆழப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என கேட்டார்.
 
சிவனிடம் மகரிஷி கேட்டது 
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறினார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான். வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.

தந்தையின் சோகத்தை கேட்ட மார்கண்டேயன் 
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான். அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார். நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய். இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி கூறினார்.

தவம் மேற்கொண்ட மார்கண்டேயன் 
 "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது அன்பு உண்டு. அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள். அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
 
இரவு பகல் பாராமல் வணங்கிய மார்கண்டேயன் 
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான்.
 
மார்கண்டேயனை அழைக்க வந்த எமன் 
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான எமன் அவனிடம் வந்தார். ஒரு எருமையின் மீது ஏறி எமன் வந்தார். தன் கையில் பாசக்கயிற்றை வைத்திருந்தார். மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
 
மார்கண்டேயனை காப்பாற்றிய சிவன் 
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், "எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
 
மரணத்தை வென்ற மார்கண்டேயன் எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். இந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடிந்தது. இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தான்.
 

Image by FlamingText.com

Monday, June 24, 2013

அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
****************************************************

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம்.நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

"வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ, என்று..

என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே...???

Image by FlamingText.com

Monday, October 1, 2012

மிட்டாய் கதை - உடைகள்

உடைகள்

முன்பு ஒருநாள், அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துகொண்டன.

'நாம் சேர்ந்து குளிப்போமா?' என்று அழகு கேட்க, அவலட்சணம் ஒப்புக்கொண்டது. இரண்டும், உடைகளை களைத்துவிட்டு  கடலில் ஆனந்தமாக நீந்திக்குளித்தன.

சிறுது நேரம் கழித்து, குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்துகொண்டு தா வழியே சென்றுவிட்டது.

பின்னர், குளித்துத் திரும்பிய அழகு, தா உடைகளைக் காணாமல் தவித்துப்போனது. ஆடையில்லாமல் தெருவில் செல்வதற்கு அதற்குக் கூச்சமாக இருந்தது. ஆகவே, வேறுவழியில்லாமல், அவலட்சனத்தின் உடைகளை அணிந்துக் கொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை, உலகத்தார் பலரும், ஆடைகளைவைத்து, அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளைப் பார்த்து முகம் சுளித்து, அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் ஆடைகளில் மயங்கி, அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 

Image by FlamingText.com

Friday, September 28, 2012

மிட்டாய் கதை - முத்து

முத்து 

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது - 'ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே.'

'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.

எனக்குள் எதோ ஒரு கனமான உருண்டை பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.

இதைக் கேட்டதும், இரண்டாவது சிப்பிக்குப் பயங்கர சந்தோஷம். பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆஹா! கடவுளுக்கு நன்றி, எனக்கு அப்படி எந்த வலியையும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்!'

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது - உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், வலியை தாங்க விரும்பாத நீ, எப்போதும் எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்கவேண்டியது தான். ஆனால், இப்போது உன் நண்பனைச் சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அவனுக்குப் பெருமை தேடித்தரும்.
*********


Image by FlamingText.com

மிட்டாய் கதை - வெள்ளைக் காகிதம்

நான் படித்த சில புத்தகங்களில் இருந்து எடுக்க பட்ட கதைகள்..

கலீல் கிப்ரான் எழுதிய இந்த 'மிட்டாய் கதை' புத்தகத்தை திரு.சொக்கன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

பால் வெள்ளைக் காகிதம்

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமான வளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது - நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும், நான் இவ்வாறே இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாகினாலும் பரவாயில்லை. நான் பொறுத்துக்கொள்வேன். அனால் கருமையில் இருள்கைகள் என்னை தொட அனுமதிக்கமாட்டேன்.

              தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப் புட்டி , குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.
************

Image by FlamingText.com

Wednesday, September 26, 2012

சண்டையும் ஒரு பீரும்





(ஒரு டாஸ்மாக் பாரில்)
 
தம்பி!! ஒரு பீர்!”
“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”
Image by FlamingText.com

மனைவியின் சந்தேக புத்தி

ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லைஎன்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

.
   உடனே மனைவி கோபத்துடன்நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள்  எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

   “இல்லை மேடம் என்றான் தோட்டக்காரன்!

Image by FlamingText.com

அறிவாளியும் கூட முட்டாள் ஆவான்

ஜென் துறவி ஒருவர் இரவு நேரத்தில் தன் மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்போது ஒரு நாள் அவர் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ''ஒருவன் அரை மணி நேரம் தியானம் செய்தால், ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்று கூறினார்.

அப்போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் எழுந்து, அவரிடம் "அப்படியென்றால் ஆறு மணிநேரம் தூங்கினால், அரை மணிநேரம் தியானம் செய்வதற்கு சமம் ஆகுமா?" என்று கேட்டான்.

அதனைக் கேட்ட துறவி சிரித்துக் கொண்டே "முட்டாளாக இருக்கும் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அதுவே அறிவாளி தூங்க ஆரம்பித்தால், முட்டாளாகிவிடுவான்" என்று கூறினார்.

Image by FlamingText.com

குட்டிக்கதை

ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...

Image by FlamingText.com

Thursday, September 13, 2012

ஒரு கேள்விக்கு பத்து விடைகள்..

புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் ஹஸ்ரத் அலியிடம் "நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வந்தோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?" என்று கேட்டார்.

அதற்கு ஹஸ்ரத் அலி தாராளமாய் கேளுங்கள் என்றார்.

செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.

ஹஸ்ரத் அலி பத்து பேருக்கும் பதில் சொன்னார், அவை..

1. அறிவானது ஞானிகள், மகான்கள், தீர்க்கதரிசிகள் இவர்களது பரம்பரைச் சொத்து, ஆனால் செல்வமோ கொடுங்கோலரின் ஆயுதம். ஆகவே அறிவே சிறந்தது.

2. உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அறிவோ உங்களை எப்போதும் காப்பாற்றும். ஆகவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வனுக்கு எப்போதும் விரோதிகள் அதிகம். ஆனால் அறிஞனுக்கோ நண்பர்கள் அதிகம். ஆகவே அறிவுதான் சிறந்தது.

4. செல்வம் பிறருக்கு கொடுக்க, கொடுக்க குறையும், ஆனால் கல்வியோ அதிகரித்துக் கொண்டுதான் வரும். ஆகவே அறிவே சிறந்தது.

5. அறிவுள்ளவன் எப்போதும் தன் அறிவை பிறருக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பான். அவனிடம் தாராளத் தன்மை இருக்கும். ஆனால் செல்வனிடம் கஞ்சத் தனந்தான் இருக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

6. செல்வங்களை திருடர்கள் திருடிக் கொண்டு போக முடியும், ஆனால் அறிவை யாராலும் கொல்லோ அடிக்க முடியாது. ஆகவே அறிவே சிறந்தது.

7. செல்வம் கால ஓட்டத்தில் அழிந்துவிடும் ஆனால் அறிவை கால ஓட்டம ஒன்றும் செய்ய முடியாது. எனவே அறிவுதான் சிறந்தது.

8. செல்வத்திற்கு எப்போதும் எல்லையுண்டு , அளவுண்டு, கணக்கு உண்டு. ஆனால் அறிவுக்கோ எல்லையோ, கணக்கோ இல்லை. எனவே அறிவே சிறந்தது.

9. செல்வம் உள்ளத்தில் ஒளியைப் போக்கி அதை இருளடைய செய்கிறது. விரிந்த மனப்பான்மையை குறுகலாக்குகிறது. ஆனால் அறிவோ இருண்ட உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சி அதை விசாலப் படுத்துகிறது. ஆகவே அறிவே சிறந்தது.

10. செல்வம் உள்ளச் செருக்கையும் ஆணவத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால்தானே கடவுள் என்று உரிமை கொண்டாடும் நிலைக்கு மனிதனைக் கீழாக்கி விடுகிறது. ஆனால் அறிவோ, இறைவனே! நாங்கள் உனது அடிமைகள் என்ற பண்பையும், பண்பாட்டையும் வளர்த்து நல்வாழ்வு தருகிறது. என்றார்.



Image by FlamingText.com

Search This Blog