Pages

Subscribe:
Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Monday, September 15, 2014

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ளஉணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.


Image by FlamingText.com

சமையலில் செய்யக்கூடாதவ....செய்ய வேண்டியவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.



Image by FlamingText.com

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்!!!

உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.

* இல்லாவிட்டால், தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

* இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம். இதுவும் அக்காலத்தில் கணிக்கும் வழிமுறைகளில் ஒன்று.

* சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.

* பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

* வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம். மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.


Image by FlamingText.com

நம்பினால் நம்புங்கள்.

நம்பினால் நம்புங்கள்.

எவரெஸ்ட் உச்சியை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எட்டியிருகின்றனர். ஆழ்கடல் தரையைத் தொட்டவர்களோ இருவர் மட்டுமே.

மனித காதுகள் 130 டெசிபல் அளவு வரையிலுள்ள ஒளியை வலியின்றி கேட்கும்.

விண்ணில் சுட்டும் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள்களில் 40% இங்கிலாந்தை சேர்ந்தவை.

10% மக்களுக்கு கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. அவர்களது வியர்வை வாசனையை 30 மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, கொசுக்களால் அறிய முடியும்.
1920 களிலேயே "கிறிஸ்டல் செட் ரேடியோ" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் போன்  உருவாக்குவது பற்றி விவாதிக்கபட்டிருன்தது.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு கலந்த உணவுகளில் மனத்திண்மையை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

சுத்தமான நீரை, அது உறைவதற்கு முன், மைனஸ் 48டிகிரி செல்சியல் வரை குளிர்விக்க முடியும்.





Image by FlamingText.com

Monday, October 8, 2012

ஏழையா? பெருமைப்படு!

    பத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்
மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், ""உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர். இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


Image by FlamingText.com

மலை உச்சியில் சவ பெட்டிகள்:

மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்: ஈஸியாக ஆத்மா சாந்தி அடையுமாம்!


       இறந்தவர்களின் உடலைப் பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலை உச்சியில் உடலை விபத்தால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சீன, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளில் சிலபகுதிகளில் இறந்தவர்களின் உடலை ஒரு பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

   இந்த பழக்கம் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இறந்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்வதாகக் கூறபடுகிறது. அனால் சீனாவிலேயே இந்த வழக்கம் அதிகம் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்முறை வழக்கத்திலிருந்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

         "இது புனிதமான செயல். மற்ற மக்களிடம் இருந்து விலக்கி எடுத்துசென்று, மலை உச்சியில் வைப்பதால் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்குகின்றனர். இறந்த பிறகு, அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது" என்று அவர்கள் நம்புவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Image by FlamingText.com

Tuesday, September 18, 2012

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது!

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது! - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.

இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை அவப்பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அண்மைய நாட்களில் கூட சிங்களத்தின் அடிமையாக விளங்கிவரும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் நடத்திக்காட்டிய அற்புத காட்சிப்படுத்தல்களும் முன்நாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களை கொன்றது புலிகள் தான் என்றும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் உப்புச்சப்பற்று வெளிவந்திருந்தது.

தற்போது அதனையும் இத்தனை ஆண்டுகால மர்ம முடிச்சுக்களையும் அவிழ்க்கும் முயற்சியில் ராஜீவ் சர்மா என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்" என்ற புத்தகம் உதவுகின்றது. இதனை தமிழில் ஆனந்தராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதிலிருந்து....

"ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிராசனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேச சதி என்ற சக்கரத்தின் இன்நெரு கம்பிகும்!" என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஷாஹீத் பெருமான் செரோமணி அகாலிதல் அமைப்பின் தலைவரான மகந் சேவா தாஸ் சிங் அளித்த வாக்கு மூலம் தான் அது. அதைமட்டும் அப்படியே தருகிறோம்.

மகந் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர்(ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர் கோட் மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவலகமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான் பிரமமந்திரி சந்திரசேகரை சந்தித்தேன். நான் லண்டனிற்கு புறப்படுவதாக சந்திரசேரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். பஞ்சாப்பில் வன்முறையை நிறுத்திவிட்டு பஞ்சாப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு சென்றேன். இருவரும் தேநீர் அருந்தினோம். அந்த இடத்தில் ஏற்கனவே 10அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தொலைத் தொடர்பிற்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான. பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொர்பு கொள்வதற்காக பயண்படுத்தப்படும் கருவிகளின் செயற்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம் மேல் தளத்தில் கூடியிருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்பல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ.ஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ.இன் ஆர்.எம்.ரதியும் இருந்தார். நான் பிறநபர்களின் பெயர்களை கேட்கவில்லை.

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர்மனதை மாற்றினேன். ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக் கொள்வதோடு வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறினார். எனக்கு சந்திரா சாமியிடம் தொடர்பு உள்ளது என்றார். சந்திரா சாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றி கேட்டபோது தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியை கொல்லப்போவது இல்லையென முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன். சௌகான் என்னிடம் 3கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திரசேகரிற்கு. நான் அங்கிருந்து கிழம்பும் போது இந்தியத் தலைவர்கள் ஆன சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா சந்திராசாமி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன் சர்தார் வல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்தாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸபிஸ் ரவரில் நடந்தது. அந்தக் கூட்டம் காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது ராஜீவ்காந்தியை அழிப்பது ஆகிய விசயங்கள் சம்மந்தப்பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விசயங்களை நான் ராஜீவ்காந்தியிடம் (பெப்ரவரி 10௧991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விசயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்து விட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு வேர்த்துக் கொண்ட்ட ஆரம்பித்தது. அவர் கோபம் அடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991 பெப்ரவரி 14 அல்லது 15இல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதேயளவு ஆபத்தான விசயத்தை நான் அவரிடம் தெரித்ததாகவும் ராஜீவ் கூறினார்.

சௌகானிற்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்திருந்தனர். ராஜீவ்ஜீயின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார் என்று விலாவாரியாக விபரிக்கிறது அந்த வாக்கு மூலம்.

எஸ.ஐ.டி. விசாரனைக்கு நேர்மாறான விசயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிசன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையை கிளப்பலாம்!

சிங்களத்தின் முற்றுமுழுதான பிடிக்குள் அகப்பட்டிருக்கும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் அண்மையில் நிகழ்த்திய நாடகத்தை இந்த புத்தகம் உடைத்தெறிந்துள்ளது. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.


(நன்றி ஜூனியர் விகடன்.) 



Image by FlamingText.com

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்.

காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே  தொடங்கிவைத்தார். 
 
நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான கதவை முதலில் அகலமாக திறந்தவர் பிரதமராகயிருந்த ராஜிவ்காந்தி.
 
தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்காவின் பன்னாட்டு கம்பெனிக்கு போபாலில் மக்கள் வாழும் பகுதியில் ஆபத்தான விஷவாயு அடங்கிய தொழிற்சாலைக்கு அனுமதி தந்து அது வெடித்து மிகப்பெரிய உயிர்பலி வாங்கியது. பணத்தை வாங்கிக்கொண்டு அதன் முதலாளிகளை தப்ப விட்டவர் ராஜிவ்காந்தி.
 
சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் பதவியில் இருக்கும் போதே சாதாரண அரசு ஊழியரைப்போல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார். ராணுவவீரர்களின் உயிர்களோடு நாட்டின் பாதுகாப்போடு விளையாட ஆரம்பித்தார். போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் கோடி கோடியாக கமிஷனாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் குவித்தார். ராஜிவ்காந்தி மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு வாசிசுகளால் புஷ்வானமாகி விட்டது.
 
கிராமங்களில் இன்று விவசாயம் அழிந்து போக காரணம் இதே ராஜிவ்காந்தி தான். விவசாயிகளை அமரர்களாக்க விதை விதைத்தார். புது முயற்சி என புது ரக விதை, மருந்துகளை இறக்குமதி செய்தார். அது இந்திய விவசாயத்தை அழிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பமான பிரச்சனை இன்று தினம் 10 விவசாயிகளாவது இறக்கும் அளவுக்கு வந்து நிற்க்கிறது. 
 
உலகமே நம்மை ஆச்சர்யத்தோடு பார்ப்பதற்க்கு காரணம், நம் மக்களின் கலாச்சாரம் தான். ஆனால் இன்றைய நிலையில் அந்த கலாச்சாரத்தை உடைத்து யாரும் யாரோடும் என்ற நிலையை உருவாக்கியது இந்த ராஜிவ்காந்தி காலத்தில் தான்.

1990ல் நடந்த இந்திய நாடாளமன்றத்திற்க்கான பொது தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. செய்த பாவம் திண்றால் போகாது என்பதை போல ராஜிவ்காந்தி பதவியில் இருக்கும்போது ஈழ தமிழனுக்கு செய்த துரோகத்தால் மரணம் அவரை தேடி வந்தது. அவரின் மரணம் காங்கிரஸ் கட்சியை உயிர் பெற வைத்தது. ஊழல்வாதி ஜனநாயக நாட்டின் மகாத்மாவாகி விட்டார். ஆனால் அவர் விட்டு சென்ற பணிகளை அவரின் வாரிசுகள் இன்று தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டம். இந்திய கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் இந்தியா ஒளிர்க்கிறது என்ற பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் நடை பயணம் போகும் இளைஞர் காங்கிரஸ் மூச்சுக்கு முண்ணூறு முறை எங்கள் திட்டம் சிறந்த திட்டம் என கூப்பாடு போட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தால் ஏழைகளே செய்யும் வேலைக்கு கூலியை நிர்ணயிக்கிறார்களாம்.

பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம், ஆந்திராவில் போய் பாருங்கள் இந்த திட்டத்தின் லட்சணத்தை. அப்படி ஒரு திட்டம் இருப்பதே அந்த மக்களுக்கு தெரியவில்லை. வேலை செய்ததாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். வெளிப்புறத்திற்க்கு பார்த்தால் நல்ல சிறந்த திட்டமாக தோன்றும். ஆனால் உண்மையில் மக்களை சோம்பேறிகளகாக்க வந்த திட்டம், விவசாயத்தை முற்றிலும் அழிக்க வந்த திட்டம். அதில் 30 சதவிதம் வெற்றி பெற்று விட்டது காங்கிரஸ்.

தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களில் இந்த திட்டத்தால் விவசாயம் படு பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என கேட்டு விவசாய அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்தியரசு அசையவில்லை. காரணம் திட்டத்தின் மறைமுக வெற்றி. விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யபோகிறார்கள். தரிசுகளாக மாறும் நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்க தான் இந்த திட்டம். பன்னாட்டு கம்பெனிகளை வரவைத்து அவர்கள் மூலம் கோடி கோடியாய் கொள்ளயைடிக்கவும், ஏழை மக்களை இன்னும் ஏழைகளாக்கி குளிர்காயவுள்ளது. 

அதை இன்று சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது. நாளை இந்தியா இளைஞர்களின் கனவு நாயகன் என வர்ணிக்கப்படும் கொலம்பியா நாட்டு பெண்ணை மணக்க போகும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல்காந்தி தலைமையில் நடத்த எல்லா பூர்வாங்க வேலையும் நடக்கிறது. இப்படியெல்லாம் காங்கிரஸ்காரர்களால் நடக்கும் என யூகித்தே 50 ஆண்டுகளுக்கு முன், உலகமே கொண்டாடும் மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்றதும், காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. இதை கலைத்து விட வேண்டும் என சொன்னார். அதை செய்திருந்தால் வரலாற்றின் பொன் எழுத்தில் காங்கிரஸ்சின் பெயர் நிலைத்திருக்கும்.
சொந்த சகோதரர்களை, தமிழனின் தொப்புள் கொடி உறவை அழித்த, இந்தியாவை விலை பேசும் தலைமை கொண்ட, ஊழல்வாதிகள் நிறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தை அழிக்க வேண்டும்.
 
 
Image by FlamingText.com

ராஜீவ்காந்தி இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டார் என்பதற்கு இந்த வீடியோ சான்று.

Image by FlamingText.com

ராஜீவ் காந்தி மரணத்திற்கு சுப்ரமணியசாமியா?

இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. 

இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. 

நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது? . 

இன்று வெற்றிகரமாக புலம்பெயர் தமிழர்களால் "போன மச்சான் திரும்பி வந்தான் புறமுதுகு காட்டி"  என்று ராஜபக்ஷே திரும்பி வந்து விட்டார்.  தமிழ்நாட்டில் இலங்கை தூதராக பணியாற்றி அம்சா சென்னையில் கொடுத்த அல்வா பணியாரம் எதுவும் லண்டனில் செல்லுபடியாகவில்லை. 

தமிழ்நாட்டில் இன உணர்வு என்றால் கிலோ என்ன விலை?  அதுவும் எங்கேயாவது இலவசமாக கொடுத்துக் கொண்டுருக்கிறார்களா? என்று கேட்கும் தமிழர்களை ஒப்பிடும் போது ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே மகத்தான தமிழர்கள் தான்.  

புலம் பெயர்ந்த தமிழர்கள் கூடிய கூட்டம் என்பது எவராலும் முறைப்படுத்தப் படவில்லை. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாமல் அவரவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் அன்றாட பணியை விட்டு வீதிக்கு வந்து அஹிம்சை முறையில் போராடி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.  மொத்த ஐரோப்பிய அமெரிக்கா கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கூடியிருந்தால் நிச்சயம் ஒரு புதிய மறுமலர்ச்சி உருவாகியிருக்கக்கூடும். அதற்கான முதல் அடி இது என்பதாக எடுத்துக் கொள்வோம்.

இங்குள்ள ஊடகங்களின் அரசியல் சித்துவிளையாட்டுகளைப் போல இல்லாமல் போர்க்குற்றவாளியை வெளிக்காட்டிய மேலைநாட்டு ஊடகங்கள் மகத்தான பணியை செய்துள்ளன.

ராஜீவ் காந்தி படுகொலையால் தான் ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது.  இந்தியா இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது. மறைமுகமாக அத்தனை தொழில் நுட்ப உதவிகளையையும் வழங்கியது என்று லாவணி போல் ஒப்பித்துக் கொண்டுருப்பவர்களுக்கு இந்த காணொளி பயன் உள்ளதாக இருக்கும்.

திருச்சி வேலுச்சாமி அவர்கள் கொடுத்துள்ள காணொளி பேட்டியான ஏழு பகுதிகளையையும் உங்களால் நேரம் ஒதுக்கி பார்க்க வாய்ப்பிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

இன உணர்வு என்பது பரஸ்பரம் வெளிக்காட்டிக் கொள்வது அல்லது உண்மையான விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது. 

ஒன்றை புரிந்து கொள்ள முயற்சித்தாலே நம்மில் இருக்கும் இருட்டுப் பகுதிகள் இயல்பாகவே மாறிவிடும். நாம் மாற்றிக் கொள்ளாத வரைக்கும் இனத்தமிழன் என்பது மாறி இலவசத்தை மட்டும் எதிர்பார்க்கும் தமிழன் என்று வைத்துக் கொள்ளலாம்.

வரலாற்றில் எதிர்மறை நியாயங்கள் தேவையானது தானே?
 
Image by FlamingText.com

ராஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள்

ராஜீவ்-காந்தி-கொலை
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்
http://rajivgandhi-assassination.blogspot.in/2011/06/blog-post_21.html

Image by FlamingText.com

Saturday, September 15, 2012

எம் ஜி ஆர் - ரை ஏன் சுட்டேன்? எம் ஆர் ராதா

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி “பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.

1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். “அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18_ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16_ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகம், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். “நாடோடி”, பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்.

மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார். ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு. “பெற்றால்தான் பிள்ளையா” படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர்.

அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார். எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார். இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். “குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்” என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும். குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை “அப்பா!” என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் “பெற்றால்தான் பிள்ளையா” படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. 12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம். அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன?
அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்.

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’

சி.பி - ஒரு பட அதிபரை கால்ஷீட் விஷயத்தில் எம்ஜிஆர் இழுத்தடித்ததாகவும், அது பற்றிய பஞ்சாயத்தில் எம் ஆர் ராதாவை வாக்குவாதத்தில் சுட முயன்றபோது அவ்ர் முந்திக்கொண்டதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல் உலா வருகிறது..




Image by FlamingText.com

ராஜீவ் காந்தியின் மரணம்


சொறியச் சொறிய கடித்துச் செல்லும் முடிவே இல்லாத சிரங்கு… ராஜிவ் கொலையில் எத்தனை பொட்டுக்கள்…?

மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.




ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.


வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்…

சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?



Image by FlamingText.com

Thursday, September 13, 2012

ராஜிவ்காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை

அத்தியாயம் 1

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.

இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மற்றய தினங்களைவிட அன்றைய இரவு சென்னை விமான நிலையம் அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. காரணம் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அவர்களுடைய நட்சத்திர வேட்பாளருமான ராஜிவ் காந்தி அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடரின் அத்தியாயங்களை படிக்க கீழிருந்து கிளிக் செய்யவும்

 

  
அத்தியாயம் 05

அத்தியாயம் 04
அத்தியாயம் 1

Tuesday, July 10, 2012

பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்

ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்...
அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்...

நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்...
அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்...

ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள் என்றால்... நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று சிந்திக்கிறாள் என்று பொருள்..

நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில வினாடிகள் கழித்து "நான் நலமாய் இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானாள், அவள் நலமாக இல்லை என்று பொருள்...

ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானாள், நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என பொருள்...

ஒரு பெண் உன் தோளில் சாய விரும்புகிறாளானால், நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று பொருள்...

ஒரு பெண் உன்னை தினம் தினம் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாளானால், அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...

ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால், அதன்  அர்த்தமறிந்தே  அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள்  என்று பொருள்...

ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால் துயருறுகிறேன் " I MISS YOU" என்று கூறுகிறாளானால், அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள் பிரிவால் வாடவில்லை என்று பொருள்...

வாழ்க்கை ஒரு முறை தான்... இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...
உங்கள் மனம் அறிந்து, அன்பை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை தேர்ந்தெடுங்கள்...

உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்...
தன் தூக்கத்தை மறந்து உங்கள் தூக்கத்தை ரசிக்கும் ஒரு அன்பான துணையை தேர்ந்தெடுங்கள்...

நீங்கள் அன்போடு பார்க்கும்போது, தோள் சாய இடம் கொடுக்கும் ஒரு உறவை தேடுங்கள்...

உங்களை அடைய தவம் செய்திருக்க வேண்டும் என்று உணரும் ஒரு உறவை மணமுடியுங்கள்...

வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும்... :-)



Image by FlamingText.com

Monday, April 30, 2012

பெர்முடா முக்கோண மர்மம்...........?

இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.

Friday, April 27, 2012

அமெரிக்க ஜனாதிபதிகள்.(Abraham lincoln john f kennedy)

ஆப்ரகாம் லிங்கனுக்கும், ஜான் F கென்னடிக்கும் உள்ள ஒற்றுமை.
Abraham Lincoln john f Kennedy similarities 
 
                          25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..




































அதாவது லிங்கனைக் கொன்றவர் JOHN WILKSS BOOTH.
கென்னடியை கொன்றவர் LEE HARVEY OSWALD. ஆகியோர் ஆவார்கள். இத்தகைய ஒற்றுமை உலக வரலாற்றிலேயே கிடையாது. 
அபூர்வ விசயமாகும். :)

Image by FlamingText.com

தாத்தா குறிப்பு (பின்ன வாய்பாடு)

        25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..
யாருகாவது பின்ன வாய்பாடு தெரியுமா?
பாக்கும்போதே தலை சுத்துது.
பின்ன வாய்பாடு
பின்னம் அரைக்கால் வாய்பாடு
பின்னம் மூன்று வீசம் வாய்பாடு
பின்னம் கால் வாய்பாடு 
பின்னம் முக்கால் வாய்பாடு 

தாத்தா குறிப்பு (தனிவட்டி, கோண அளவு)

  25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


தனிவட்டி
கோண அளவு
 

தாத்தா குறிப்பு (இந்திய நாணய பின்ன முறை)

        25 வருடத்திற்கு முன்பு என் தாத்தா எங்களுக்காக எழுதிவைத்துள்ள சில அறிய பொக்கிஷத்தை உங்களுக்கு தந்திருகின்றேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் அப்பா, தாத்தா-க்கு தெரிந்திருக்கும்.  எங்கு தேடினாலும் கிடைக்காது.
கிட்டத்தட்ட 18 வருசமா இந்த குறிப்புகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன்..
 
இந்திய நாணய  பின்ன முறை 
 

Search This Blog