Pages

Subscribe:
Showing posts with label Cooking. Show all posts
Showing posts with label Cooking. Show all posts

Thursday, November 23, 2017

செலவு குழம்பு

செலவு குழம்பிற்கு தேவையான பொருட்கள்:

திப்பிலி வேர்  100 கிராம்                                               Please Subscribe : V2 Channel
மிளகு  25 கிராம்
சீரகம்  10 கிராம்
சுக்கு  10 கிராம்
கடுகு  10 கிராம்
பூண்டு  தேவைக்கேற்ப
பெருங்காயம்  தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல்  தேவைக்கேற்ப
தனியா  தேவைக்கேற்ப

செய்முறை 

மோடிக்குச்சி, மிளகு, சீரகம், கடுகு, தனியா, மிளகாயை பொன் நிறமாக வருது, குழம்பிற்கு ஏற்றவாறு அரைத்துக்கொள்ள வேண்டும். குழம்பிற்கு தேவையான, புளி கரைசலை கரைத்து, உரித்த வெள்ளை பூண்ட இடித்து போடவேண்டும். அதன் பிறகு அரைத்து வாய்த்த கலவையை, புளி கரைசலுடன் போட்டு கலக்க வேண்டும்.

வாணலியில், எண்ணெய் விட்டு சூடு ஏறியதும் கலவை கரைசலை தாளிக்க வேண்டும். இதனுடன் கச்சை கருவாட்டை சேர்த்துக்கொள்ளலாம்.


Image by FlamingText.com

Monday, September 15, 2014

சமையலில் செய்யக்கூடாதவ....செய்ய வேண்டியவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.



Image by FlamingText.com

Thursday, August 29, 2013

சால்ட் & பெப்பர் மஷ்ரூம்

சால்ட் & பெப்பர் மஷ்ரூம் 

தேவையானவை:
மஷ்ரூம் - 250 கிராம் 
கார்ன் ப்ளார் & மைதா - தலா 50 கிராம் 
வெங்காயம் - சிறிது (பொடியாக)
இஞ்சி பூண்டு - தலா 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை ஸ்பூன் (பொடியாக)
செலரி தழை - சிறிது (பொடியாக)
உப்பு - தேவைகேற்ப 
சிவப்பு மிளகாய் விழுது - சிறிது (வேகவைத்து அரைத்து)
சோயா சாஸ் - சிறிது 
வெள்ளை மிளகு தூள் - சிறிது
சில்லி பிளேக்ஸ் (தேவைபட்டால்) - சிறிது 
வெங்காய தாள் - சிறிது 
எண்ணெய் 

செய்முறை:

     காளானை கழுவி, இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதை மைதா, கார்ன் ப்ளோர், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணையில் பொறித்து தனியே வைக்கவும்.

கடையில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.

பிறகு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ், வெள்ளை மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

தேவையான உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள காளான் சேர்த்து கிளறி, தேவைபட்டால் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து, கடைசியாக வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

Image by FlamingText.com

Tuesday, July 16, 2013

Chicken Biryani Restaurant Style



தேவையானவை:
மிளகு -6
பட்டை -2
ஏலக்காய் -6
பிரியாணி இலை -3
லவங்கம் -3
கிராம்பு -1/2 ஸ்பூன்
மேஸ்-2
சீரகம் -1 ஸ்பூன்
அண்ணாச்சி பூ -3




முதலில் கொடுக்கபட்டுள்ளதை அரைத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.





மிளகாய் தூள், தனியா துள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தயிர் மற்றும் உப்பு. இவை அனைத்தும் 2 ஸ்பூன் வீதம் எடுத்துகொள்ள வேண்டும்.



நன்கு கழுவிவைத்த சிக்கனுடன் அரைத்துவைத்த மசாலாவை கலக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சிபூண்டு விழுது, மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.







பின்பு அதனுடன், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும்.

அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றவேண்டும். பிறகு 3-4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்போது மசாலா நன்கு சிக்கனுடன் ஊறி இருக்கும்.

பாஸ்மதி அரிசி 500 கிராம்  எடுத்து ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். 

பின்பு, ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சீரகம், இலை, மற்றும் உப்பு, 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.





ஒரு மணி நேரம் ஊறவைத்த அரிசியை கொதிக்கும் நீருடன் சேர்த்து 5 நிமிடம் வைக்கவேண்டும்.
ஊறவைத்த சிக்கனை எடுத்து ஒரு கனமான பாத்திரத்தில் வைக்கவேண்டும். அதனுடன் வருத்த வெங்காயம் சிறிது சேர்க்கவேண்டும்.

முக்கால் அளவு வேகவைத்த அரிசியை சிக்கனுடன் சேர்க்கவேண்டும்.
அதன்மேல் வருத்த வெங்காயத்தை சேர்க்கவேண்டும்.
2 ஸ்பூன் பாலுடன் சிறிது குங்குமபூ அல்லது கேசரி பவுடர் சேர்க்க வேண்டும்.


அதனுடன் 2 ஸ்பொன் நெய் சேர்க்கவேண்டும். இது தேவைபட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும். மற்றும் kewra water 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும்.
கடைசியாக ஒரு கனமான மூடிக்கொண்டு மூடிவைக்கவேண்டும். 5 நிமிடம் அதிக சூட்டிலும் , பிறகு 10 நிமிடம் குறைந்த சூட்டிலும் வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.





Image by FlamingText.com

Thursday, June 27, 2013

மாம்பழ பால் ஜூஸ்

இதுவரை மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ், மில்க் ஷேக், குல்பி என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் மாம்பழ பால் செய்து குடித்திருப்போமா?
தேவையான பொருட்கள்: 
மாம்பழம் - 1 தேங்காய் பால் - 1/2 கப் 
குளிர்ந்த பால் - 1/4 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
செய்முறை:  
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதில் தேங்காய் பால், குளிர்ந்த பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து பரிமாறினால், சுவையான மாம்பழ பால் ரெடி!!! வேண்டுமெனில் இதனை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தும் குடிக்கலாம்.

Image by FlamingText.com

Friday, June 14, 2013

Small Onion Chutney

சின்ன வெங்காயம் சட்னி

 

  •      சின்ன வெங்காயம் - 1கப் 
  •      வற்றல்மிளகாய் - 4
  •      புளி - ஒரு சின்ன பீஸ்
  •     உளுத்தம்பருப்பு - 2ஸ்பூன் 
  •      உப்பு - தேவையான  அளவு
  •     ஆயில் - 2ஸ்பூன் 
  வெங்காயத்தை  தோல்  உரித்து  நன்றாக  கழுவவும் .
 
ஒரு கடாயில் ஆயில் விட்டு சின்ன வெங்காயம், வற்றல் மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
(சுமார் 20-25நிமிடங்கள்) வதக்கிய வெங்காயம், வற்றல் மிளகாய், புளி உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும்.
 
 
 


Image by FlamingText.com

Thursday, June 6, 2013

சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள் :
  • சிக்கன் 
  • மிளகாய்த்தூள் 
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 
  • அரிசி மாவு (rice flour)
  • சோளமாவு(cornflour)
  • முட்டை 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கலர்பவுடர் 

செய்முறை :
  1. ஒரு கடாயில் எண்ணையை காய வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய எல்ல பொருட்களையும் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும்.
  3. பிறகு எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான சில்லி சிக்கன் ரெடி.

Image by FlamingText.com

வெண்பொங்கல்


தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி -250 கிராம் 
  • நெய் -4 ஸ்பூன் 
  • கருவேப்பிலை 
  • பாசிபருப்பு -50-கிராம் 
  • இஞ்சி -சிறிதளவு 
  • மிளகு ,சீரகம் -1ஸ்பூன் 
  • முந்திரிபருப்பு -10
  • உப்பு-தேவைகேற்ப 

செய்முறை:
  1. ஒரு குக்கரில் பச்சரிசி,பாசிபருப்பு சிறிதளவு உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவேண்டும் .
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் மிளகு சீரகம்,இஞ்சி ,கருவேப்பிலை முந்திரிபருப்பு போட்டு சிவக்க வறுத்து குழைய வேகவைத்த சாதத்துடன் கலந்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும் .சுவையான காலை உணவு ரெடி..

Image by FlamingText.com

சேமியா பகளாபாத்

தேவையான பொருட்கள்:

  • சேமியா 
  • தயிர்-கப் 
  • பால் -கப் 
  • பெருங்காயம் -1 சிட்டிகை 
  • கடுகு 
  • இஞ்சி 
  • கேரட் 
  • பச்சைமிளகாய் 
  • எண்ணெய் 
  • உப்பு 
செய்முறை: 
  1. கேரட்டை துருவிக்கொள்ளவும் பச்சைமிளகாய் ,இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சேமியாவை வறுத்துக்கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளவும் .
  3. வெந்தவுடன் பால் சேர்த்துக்கொள்ளவும் .ஆறியவுடன் தயிர் சேர்க்கவும் .
  4. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு,பச்சைமிளகாய்,இஞ்சி, கருவேப்பிலை,பெருங்காயம், போட்டு தாளித்து சேமியாவுடன் கலக்கவும்.
  5. கொத்தமல்லி ,துருவியகேரட்டை தூவி ஊறுகாயுடன் பரிமாறவும் .

 


Image by FlamingText.com

Fried Chicken


தேவையான பொருட்கள்:
  • சிக்கன் (தோல் ,எலும்பு நீக்கியது) 
  • எலுமிச்சை சாறு 
  • மிளகாய்த்தூள் 
  • மிளகுதூள் 
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 
  • முட்டை 
  • சீரகத்தூள் 
  • உப்பு 
  • பிரட் தூள்
  • எண்ணெய் 


செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் ,மிளகாய்த்தூள்,மிளகுதூள் ,இஞ்சி,பூண்டு பேஸ்ட்,எலுமிச்சை சாறு ,முட்டை ,சீரகத்தூள் ,உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். 
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்து ஊற வைத்த சிக்கன் எடுத்து பிரட் கிரம்ஸில் துவட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 
சுவையான ப்ரைடு சிக்கன் ரெடி இதை தக்காளி சாஸ் அல்லது மைனஸ் சாஸ் உடன் பரிமாற அருமையாக இருக்கும் .

Image by FlamingText.com

Paneer Tikka Masala

தேவையான பொருட்கள்:


ஊறவைக்க : 
பன்னீர்
கெட்டி தயிர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
தந்தூரி மசாலா பவுடர்-1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கஸ்தூரி மேத்தி -1/2tsp
எலுமிச்சை சாறு -1/2 tsp
உப்பு -தேவைக்குகேற்ப

டிக்கா மசாலா: 
தக்காளி சாறு -1கப்
ப்ரெஷ் கிரீம் -1/4கப்
வெங்காயம்
சீரகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2tsp
மிளகாய்த்தூள் -1tsp
கொத்தமல்லிதூள் -1tsp
கரம் மசாலா தூள்-1tsp
கொத்தமல்லிதழை
கஸ்தூரி மேத்தி
வெண்ணெய் -1tsp
எண்ணெய் -1tsp

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பன்னீர் ,கெட்டி தயிர் ,தந்தூரி மசாலா ,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,கஸ்தூரி மேத்தி,இஞ்சி ,பூண்டு பேஸ்ட்,எலுமிச்சை சாறு ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி1 மணி நேரம் ஊற வைக்கவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.



ஒரு கடாயில் வெண்ணை மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளி சாறு,கரம்மசாலா,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு, சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


வதக்கியதும் அதில் ப்ரெஷ் கிரீம் ,வறுத்த பன்னீர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் பொழுது கஸ்தூரி மேத்தி ,கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.

சப்பாத்தி ,நாண் ,ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Image by FlamingText.com

Search This Blog