Pages

Subscribe:
Showing posts with label Yoga. Show all posts
Showing posts with label Yoga. Show all posts

Thursday, April 19, 2012

வஜ்ரா முத்ரா (சசாங்கசனம்)

மனம் : வயிறுபகுதி, தலைப்பகுதி
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம்

உஷ்டிராசனம்

விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி

வஜ்ராசனம்

மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.
ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.
சிறப்பு: இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும் செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.



பர்வதாசனம்

தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.

சக்ராசனம்

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை  இந்த ஆசனத்தை பயிலலாம்.

அர்த்த சிராசனம்

விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும, இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.

ஏக பாதாசனம்

மனம் : இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.
குணமாகும் நோய்கள்: சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும்.

பரிவ்ருத்த திரிகோணாசனம்

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையினை அதிகரிக்கின்றது.

திரிகோணாசனம்

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத்தண்டும் முதுகுத் தசைகளும் நீட்டப்படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள், முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப்பட்டு தளர்த்தப்படுகின்றன.

அர்த்தகடி சக்ராசனம்

மனம் : இடுப்பு பகுதி
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது.

பத்ம ஹஸ்தாஸனம்

மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்

மூச்சின் கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பைப் பிணைக்கும் தசை நார்கள், தசையைப் பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன.

அர்த்த சக்ராசனம்

மனம் : முதுகெலும்பு

மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

Wednesday, April 18, 2012

உட்கட்டாசனம்

மனம் : முழங்கால்கள்

மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தியினை எழுப்பும்.



தாளாசனம்

மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்

மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்
எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.


சு‌‌‌ப்த–வஜ்ராசனம் Subdha Vajrasanam

மனம் : தொடைப்பகுதி 


மூச்சின் கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.

பத்மாசனம்! (Badhmasanam)

பத்மாசனம் என்பெயருக்குபபொருள‘தாமரமலரினநிலை’ என்பதே. ‘பத்மா’ என்சமஸ்கிருசொல்லிலஇருந்த‘தாமரை’ என்றபொருளிலஇவ்வார்த்தபிறந்துள்ளது. ‘ஆசனம்’ என்பதற்க‘நிலை’ என்றபொருள்.
 
ரையிலஅமர்ந்தகால்களஇரண்டையுமநேராநீட்டவும்.

வலதகாலமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தஇடதகாலினதொடமீது - குதிகாலவ‌யிறை தொடுமளவிற்கவைக்கவும்.

இதேபோல, இடதகாலையுமமடக்கி, இரண்டகைகளாலுமபிடித்தவலதகாலினதொடையினமீது - குதிகாலவ‌யிறதொடுமளவிற்கநெருக்கமாவைக்கவும்.

இரண்டமுழங்கால்களுமதரையிலபடுமாறும், காலபாதங்களமேற்புறமாஇருக்குமவண்ணமஅமவேண்டும். அப்பொழுதமுதுகுததண்டநேராஇருத்தலவேண்டும்.

  இவ்வாறஅமர்வதசிரமமாஇருந்தால், சிறிதநேரத்திற்குபபின்பு, கால்களமாற்றி மீண்டுமஅதநிலையிலஅமரலாம்.

முதுகுததண்டநேராகவும், கைகளஇரண்டுமவணங்கிடுமநிலையிலஅல்லதமுழங்கால்களினமீதஒன்றனமீதஒன்றாக - உள்ளங்கமேற்புறமாஇருக்குமவண்ணம், இரண்டகைகளுமகால்களினமீதஅமையுமவண்ணமும், காலினமீதகைகளவைத்தகட்டவிரலோடு ஆட்காட்டி விரலதொட்டுககொண்டும், மற்விரல்களமேலநோக்கிவண்ணமுமாஅமரலாம்.

பயன்கள் :
மூளையஅமைதிப்படுத்தும
உடலமுழுவதுமதளர்ந்நிலைக்கவரும
முழங்கால்களையும், முட்டிகளையுமநன்கவிரிக்கும
அடி வயிறு, முதுகுததண்டு, சிறுநீரகபஆகியவற்றிற்கபுத்துணர்வகொடுக்கும்.

எச்சரிக்கை :
முட்டிககாயம், முழங்காலகாயம் இரு‌ப்பவ‌ர்க‌ள் இதனை‌ச் செ‌ய்ய வே‌ண்டா‌ம்.





Search This Blog