பத்மாசனம் என்ற பெயருக்குப் பொருள் ‘தாமரை மலரின் நிலை’ என்பதே. ‘பத்மா’ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து ‘தாமரை’ என்று பொருளில் இவ்வார்த்தை பிறந்துள்ளது. ‘ஆசனம்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள்.
தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.
வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து இடது காலின் தொடை மீது - குதிகால் வயிறை தொடுமளவிற்கு வைக்கவும்.
இதேபோல, இடது காலையும் மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து வலது காலின் தொடையின் மீது - குதிகால் வயிறை தொடுமளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.
இரண்டு முழங்கால்களும் தரையில் படுமாறும், கால் பாதங்கள் மேற்புறமாக இருக்கும் வண்ணம் அமர வேண்டும். அப்பொழுது முதுகுத் தண்டு நேராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அமர்வது சிரமமாக இருந்தால், சிறிது நேரத்திற்குப் பின்பு, கால்களை மாற்றி மீண்டும் அதே நிலையில் அமரலாம்.
முதுகுத் தண்டு நேராகவும், கைகள் இரண்டும் வணங்கிடும் நிலையிலோ அல்லது முழங்கால்களின் மீது ஒன்றன் மீது ஒன்றாக - உள்ளங்கை மேற்புறமாக இருக்கும் வண்ணம், இரண்டு கைகளும் கால்களின் மீது அமையும் வண்ணமும், காலின் மீது கைகளை வைத்து கட்டை விரலோடு ஆட்காட்டி விரலை தொட்டுக் கொண்டும், மற்ற விரல்களை மேல் நோக்கிய வண்ணமுமாக அமரலாம்.
பயன்கள் :
மூளையை அமைதிப்படுத்தும்
உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்
முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்
அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.
எச்சரிக்கை :
முட்டிக் காயம், முழங்கால் காயம் இருப்பவர்கள் இதனைச் செய்ய வேண்டாம்.

0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments