Pages

Subscribe:

Monday, June 4, 2012

உருளைக் கிழங்கு ஆம்லெட்

தேவையானவை:
உருளை கிழங்கு -350 கிராம்
முட்டை-7
சோயா சாஸ் -3
தேக்கரண்டிநல்லெண்ணெய் -1
தேக்கரண்டிமிளகு1
தேக்கரண்டிமிளகாய் தூள் -1
தேக்கரண்டிவெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-2
பல்உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு


செய்முறை:
*உருளை கிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.பூண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்

*ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சோயா சாஸ்,நல்லெண்ணெய் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய உருளை கிழுங்கை போட்டு  பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.

*பின்னர் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

*கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும்.இதை பிட்டு மற்றும் சாப்பாட்டுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்

[ மற்றொருமுறை:
உருளைகிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து செய்வதற்கு பதிலாக உருளைக் கிழங்கை அவிக்காமல் துருவி நீங்கள் சொன்ன முட்டையை உடைத்து ஊற்றி சோயா சாஸ்,உப்பு ,மிளகுத்தூள், வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாயை போட்டு சேர்த்து நன்றாக அடித்து ஆம்லெட்டாக பொரித்து சாப்பிடலாம். ]

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog