Pages

Subscribe:

Tuesday, September 18, 2012

ராஜீவ் காந்தி மரணத்திற்கு சுப்ரமணியசாமியா?

இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. 

இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. 

நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது? . 

இன்று வெற்றிகரமாக புலம்பெயர் தமிழர்களால் "போன மச்சான் திரும்பி வந்தான் புறமுதுகு காட்டி"  என்று ராஜபக்ஷே திரும்பி வந்து விட்டார்.  தமிழ்நாட்டில் இலங்கை தூதராக பணியாற்றி அம்சா சென்னையில் கொடுத்த அல்வா பணியாரம் எதுவும் லண்டனில் செல்லுபடியாகவில்லை. 

தமிழ்நாட்டில் இன உணர்வு என்றால் கிலோ என்ன விலை?  அதுவும் எங்கேயாவது இலவசமாக கொடுத்துக் கொண்டுருக்கிறார்களா? என்று கேட்கும் தமிழர்களை ஒப்பிடும் போது ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே மகத்தான தமிழர்கள் தான்.  

புலம் பெயர்ந்த தமிழர்கள் கூடிய கூட்டம் என்பது எவராலும் முறைப்படுத்தப் படவில்லை. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாமல் அவரவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் அன்றாட பணியை விட்டு வீதிக்கு வந்து அஹிம்சை முறையில் போராடி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.  மொத்த ஐரோப்பிய அமெரிக்கா கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கூடியிருந்தால் நிச்சயம் ஒரு புதிய மறுமலர்ச்சி உருவாகியிருக்கக்கூடும். அதற்கான முதல் அடி இது என்பதாக எடுத்துக் கொள்வோம்.

இங்குள்ள ஊடகங்களின் அரசியல் சித்துவிளையாட்டுகளைப் போல இல்லாமல் போர்க்குற்றவாளியை வெளிக்காட்டிய மேலைநாட்டு ஊடகங்கள் மகத்தான பணியை செய்துள்ளன.

ராஜீவ் காந்தி படுகொலையால் தான் ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது.  இந்தியா இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது. மறைமுகமாக அத்தனை தொழில் நுட்ப உதவிகளையையும் வழங்கியது என்று லாவணி போல் ஒப்பித்துக் கொண்டுருப்பவர்களுக்கு இந்த காணொளி பயன் உள்ளதாக இருக்கும்.

திருச்சி வேலுச்சாமி அவர்கள் கொடுத்துள்ள காணொளி பேட்டியான ஏழு பகுதிகளையையும் உங்களால் நேரம் ஒதுக்கி பார்க்க வாய்ப்பிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

இன உணர்வு என்பது பரஸ்பரம் வெளிக்காட்டிக் கொள்வது அல்லது உண்மையான விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது. 

ஒன்றை புரிந்து கொள்ள முயற்சித்தாலே நம்மில் இருக்கும் இருட்டுப் பகுதிகள் இயல்பாகவே மாறிவிடும். நாம் மாற்றிக் கொள்ளாத வரைக்கும் இனத்தமிழன் என்பது மாறி இலவசத்தை மட்டும் எதிர்பார்க்கும் தமிழன் என்று வைத்துக் கொள்ளலாம்.

வரலாற்றில் எதிர்மறை நியாயங்கள் தேவையானது தானே?
 
Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog